Dhanush: ரீ- ரிலீசாகும் தனுஷின் ‘புதுப்பேட்டை’ … செல்வராகவன் வெளியிட்ட அறிவிப்பு!
Pudhupettai Movie Re-Release Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தனுஷ். இவரின் சகோதரர் செல்வராகவன் மற்றும் தனுஷ் கூட்டணியில் வெளியான படம் புதுப்பேட்டை. இப்படமானது 4கே டிஜிட்டல் வெர்சனில் வரும், 2025, ஜூலை 26ம் தேதியில் வெளியாகவுள்ளது. இது குறித்த அறிவிப்பை இயக்குநர் செல்வராகவன் வெளியிட்டுள்ளார்.

நடிகர் தனுஷின் (Dhanush) நடிப்பில் கடந்த 2006ம் ஆண்டு வெளியான திரைப்படம் புதுப்பேட்டை (Pudhupettai). இந்த படத்தை தனுஷின் சகோதரரும், இயக்குநருமான செல்வராகவன் (Selvaraghavan) இயக்கியிருந்தார். முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தில் இப்படமானது வெளியாகி மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தில் நடிகர் தனுஷூடன் , சோனியா அகர்வால், ஸ்னேகா (Sneha) மற்றும் அழகம் பெருமாள் என பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். இந்த படமானது கடந்த 2006ம் ஆண்டு மே 26ம் தேதியில் வெளியாகியது. இந்த புதுப்பேட்டை திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா (Yuvan Shankar Raja) இசையமைத்திருந்தார். கேங்ஸ்டர்ஸ் மற்றும் வித்தியாசமான கதையில் இப்படம் வெளியாகி ஆரம்பத்தில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. ஆனால் தற்போது இப்படமானது மக்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் புதுப்பேட்டை படம் வெளியாகி 19 வருடங்களான நிலையில், மீண்டும் திரையரங்குகளில் ரீ ரிலீஸாகவுள்ளது. வரும் 2025, ஜூலை 26ம் தேதியில் திரையரங்குகளில் ரீ- ரிலீஸ் (Re-release) செய்யப்படவுள்ளதாம். 4கே தரத்தில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாம். இது குறித்து இயக்குநர் செல்வராகவன் எக்ஸ் பக்கத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.




இதையும் படிங்க : விஜய் ஆண்டனி பிறந்தநாளில் அடுத்த அப்டேட்.. சக்தி திருமகன் 2வது பாடல் இதோ
இயக்குநர் செல்வராகவன் வெளியிட்ட புதுப்பேட்டை ரீ- ரிலீஸ் பதிவு :
#Pudhupettai 4K Version – Re Releasing on July 26th in Theaters!! #KokkiKumarIsBack pic.twitter.com/9kjCH0ojNj
— selvaraghavan (@selvaraghavan) July 24, 2025
இயக்குநர் செல்வராகவன் மற்றும் தனுஷ் கூட்டணி :
இயக்குநர் செல்வராகவனின் இயக்கத்தில் தனுஷ் தனது முதல் படமான துள்ளுவதோ இளமை படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் தனுஷ் பல்வேறு கேலிகளுக்கு உள்ளானார். இந்த படத்திற்கு பிறகு காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன, மேலும் இறுதியாக நானே வருவேன் என்ற படத்தையும் தனுஷை வைத்து செல்வராகவன் இயக்கினார். கடந்த 2022ம் ஆண்டு வெளியான இந்த நானே வருவேன் என்ற திரைப்படத்தை தனுஷ் எழுத, இயக்குநர் செல்வராகவன் இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படமானது நடிகர் தனுஷிற்கு கலவையான விமர்சனங்களையே கொடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : அருமையான பயணத்தில்… வடிவேலு – ஃபகத் பாசிலின் ‘மாரீசன்’ படத்தின் எக்ஸ் விமர்சனம் இதோ!
தனுஷின் புதிய படங்கள் :
குபேரா திரைப்படத்தின் ரிலீசிற்கு பிறகு நடிகர் தனுஷின் கைவசம் கிட்டத்தட்ட 7 படங்கள் உளது. இதில் இந்த 2025ம் ஆண்டில் இட்லி கடை மற்றும் தேரே இஷ்க் மெய்ன் என இருபடங்கள் ரிலிஸிற்கு காத்திருக்கிறது. அதை அடுத்ததாக டி54, டி55, டி56, இளையராஜா பயோகிராஃபி, அப்துல்கலாம் பயோகிராஃபி என பா படங்களில் நடிகர் தனுஷ் ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.