Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Shakthi Thirumagan: விஜய் ஆண்டனி பிறந்தநாளில் அடுத்த அப்டேட்.. சக்தி திருமகன் 2 பாடல்கள் இதோ!

Sakthi Thirumagan Movie Maarudho Song : கோலிவுட் சினிமாவில் முன்னணி பிரபல நடிகர்களில் ஒருவர் விஜய் ஆண்டனி. இவரின் நடிப்பில் சக்தி திருமகன் படமானது ரிலீசிற்கு தயாராகிவருகிறது. இந்நிலையில் இன்று 2025, ஜூலை தேதியில் விஜய் ஆண்டனியின் 50வது பிறந்தநாளை முன்னிட்டு, இப்படத்திலிருந்து இரண்டு பாடல்கள் வெளியாகியுள்ளது.

Shakthi Thirumagan: விஜய் ஆண்டனி பிறந்தநாளில் அடுத்த அப்டேட்.. சக்தி திருமகன் 2 பாடல்கள் இதோ!
சக்தி திருமகன் படத்தின் முதல் பாடல்கள் Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 24 Jul 2025 19:51 PM

நடிகர் விஜய் ஆண்டனி (Vijay Antony) தமிழில் பிரபல இசையமைப்பாளர் மற்றும் நாயகனாக இருந்து வருகிறார். இவரின் நடிப்பில் இறுதியாக மார்கன் (Maargan) படம் வெளியானது. இப்படமானது கலவையான விமர்சனங்களைப் பெற்று ஓரளவு வரவேற்பைப் பெற்றது. இந்த படத்திற்குப் பிறகு இவரின் நடிப்பில் ரிலீசிற்கு காத்திருக்கும் திரைப்படம் சக்தி திருமகன் (Shakthi Thirumagan) . இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன் (Arun Prabhu Purushothaman) இயக்கத்தில் இந்த திரைப்படமானது உருவாகியுள்ளது. இந்த படத்தில் நடிகர் விஜய் ஆண்டனி அரசியல்வாதியாக நடித்துள்ளார். முற்றிலும் திரில்லர் கதைக்களத்துடன் இப்படமானது உருவாகியுள்ளது. இப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இசையமைப்பாளராகவும் நடிகர் விஜய் ஆண்டனிதான் பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில் இன்று விஜய் ஆண்டனியின் 50வது பிறந்தநாளை முன்னிட்டு, இப்படத்திலிருந்து 2 பாடல்களும் ஒரே நாளில் வெளியாகவுள்ளதாகக் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடலான “மாறுதோ” (Maarudho) மற்றும் “ஜில் ஜில் ஜில்” (Jil jil JIl) என இரு பாடல்கள் இன்று வெளியாகியுள்ளது. விஜய் ஆண்டனியின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் இரண்டு பாடல்களும் ஒரே நாளில் வெளியிடப்பட்டுள்ளது.  இந்த பாடல்களானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : 10 வருடங்களுக்குப் பின் சினிமாவில் களமிறங்கும் நடிகர் அப்பாஸ்!

விஜய் ஆண்டனி வெளியிட சக்தி திருமகன் படத்தின் மாறுதோ என்ற பாடல் :

சக்தி திருமகன் படத்தின் ரிலீஸ் எப்போது :

இந்த சக்தி திருமகன் திரைப்படமானது நடிகர் விஜய் ஆண்டனியின் 25வது திரைப்படமாகக் கடந்த 2024ம் இறுதியில் அறிவிக்கப்பட்டது. இந்த படத்தில் நடிகர் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக அறிமுக நடிகை திருப்தி ரவீந்திரா இந்த படத்தில் நடித்துள்ளார். இந்த படமானது முற்றிலும் அரசியல் கதைக்களத்துடன் உருவாகியிருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் நடிகர்கள் சுனில் க்ரிபிலானி, வினோத் ஆனந்த்,செல் முருகன் மற்றும் கேஷவ் என பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தில் விஜய் ஆண்டனியின் கதாபாத்திரம் முற்றிலும் வித்தியாசமாக அமைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

விஜய் ஆண்டனி வெளியிட சக்தி திருமகன் படத்தின் ஜில் ஜில் ஜில் என்ற பாடல் :

 

இதையும் படிங்க : ஹே மின்னலே… இணையத்தில் கவனம் பெறும் சாய் பல்லவியின் இன்ஸ்டா போஸ்ட்!

மேலும் இப்படத்தின் தயாரிப்பாளர், நடிகர் மற்றும் இசையமைப்பாளர் என பல்வேறு பணிகளையும் நடிகர் விஜய் ஆண்டனி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படமானது வரும் 2025, செப்டம்பர் 5ம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அப்படத்தின் ரிலீஸின்போதுதான் நடிகர் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படமும் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் ரிலீசிற்கு இன்னும் 1 மாதத்திற்கு மேல் இருக்கும் நிலையில், ப்ரோமோஷன் பணிகள் விரைவில் தொடங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.