Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Abbas : 10 வருடங்களுக்குப் பின் சினிமாவில் களமிறங்கும் நடிகர் அப்பாஸ்!

Abbas and GV Prakash Kumars New Movie : சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்து வந்தவர் நடிகர் அப்பாஸ். தமிழ் சினிமாவில் பிரபலமான நாயகனாக நடித்து வந்த இவர் சுமார் 10 வருடங்களாகத் தமிழில் எந்தப் படங்களிலும் நடிக்கவில்லை. இந்நிலையில், மீண்டும் நடிகர் ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் இயக்குநர் மரியா ராஜா இளஞ்செழியன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இது பற்றி விவரமாகப் பார்க்கலாம்.

Abbas : 10 வருடங்களுக்குப் பின் சினிமாவில் களமிறங்கும் நடிகர் அப்பாஸ்!
அப்பாஸ் மற்றும் ஜி.வி.பிரகாஷ் குமார் புதிய படம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 24 Jul 2025 15:00 PM

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் நடிகர் ஜி.வி. பிரகாஷ் குமார் (G.V. Prakash Kumar). இவரின் நடிப்பில் தமிழில் அடுத்தடுத்த பல படங்கள் உருவாகி வருகிறது. இவரின் நடிப்பில் ரிலீசிற்கு காத்திருக்கும் திரைப்படம் பிளாக்மைல் (Blackmail). இயக்குநர் மு. மாறன் (Mu. Maran) இயக்கத்தில் இப்படமானது , முற்றிலும் குற்றம் திகில் கதைக்களத்துடன் உருவாகியுள்ளது. இந்த படமானது வரும் 2025, ஆகஸ்ட் 1ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்த படத்தை அடுத்தாக பல படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார் ஜி.வி. பிரகாஷ் குமார். இந்நிலையில்,நடிகரும், இயக்குநருமான பிரதீப் ரங்கநாதனின், முன்னாள் உதவி இயக்குநர் மரியா ராஜா இளஞ்செழியன் (Maria Raja Elancheliyan ) இயக்கும் புதிய படத்தில் நடிகர் ஜி.வி. பிரகாஷ் குமார் நடிக்கவுள்ளார்.

இந்த படத்தில்தான் நடிகர் அப்பாஸும் (Abbas) முன்னணி வேடத்தில் களமிறங்கவுள்ளார். இந்த படத்தில் நடிகர் ஜி. பிரகாஷிற்கு இணையான ரோலில் நடிகர் அப்பாஸ் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது சினிமாவில் சுமார் 10 வருடங்களுக்குப் பின் இந்த படத்தின் மூலம் நடிகர் அப்பாஸ் சினிமாவிற்கு ரீ-என்ட்ரி கொடுக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : ஸ்கூல் கட்டடித்துவிட்டு நான் தியேட்டரில் பார்த்த முதல் தமிழ் படம் – ஃபகத் பாசில் ஓபன் டாக்

மீண்டும் சினிமாவில் களமிறங்கும் அப்பாஸ் :

தமிழ் சினிமாவின் மூலம் திரைப்படங்களில் அறிமுகமானவர் நடிகர் அப்பாஸ். இவரின் நடிப்பில் தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளில் படங்கள் வெளியாகி நல்ல வெற்றி பெற்றிருக்கிறது. பின் பல விளம்பரங்களில் நடித்து மக்கள் மனதில் மிகவும் நெருக்கமானார். கடந்த 1996ம் ஆண்டு வெளியான காதல் தேசம் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நடிகராக நுழைந்தார். இந்த படத்தில் நடிகர் வினீத் மற்றும் நடிகை தபுவுடன் இணைந்து நடித்திருந்தார். இந்த படத்தின் வரவேற்பைத் தொடர்ந்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். பின் படையப்பா மற்றும் ஆனந்தம் போன்ற படங்களில் நடித்து மிகவும் பிரபலமானார்.  ஆனந்தம் படத்தில் “ஒற்றை நாணயம்” என்ற பாடலின் மூலம் தற்போதுவரையிலும் ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறார்.

இதையும் படிங்க : இரண்டாவது திருமணத்திற்கு ரெடியான நடிகை சமந்தா? இணையத்தில் வைரலாகும் தேதி!

இணையத்தில் வைரலாகும் அப்பாஸ் புது படப் பதிவு :

இவர் தமிழில் இறுதியாகக் கடந்த 2014ம் ஆண்டு வெளியான இராமனுஞ்சன் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்குப் பின் கிட்டத்தட்ட 10 வருடங்களிற்குப் பிறகு மீண்டும் தமிழில் படங்களில் நடிக்கவுள்ளார். ஜி.வி. பிரகாஷ் மற்றும் அறிமுக இயக்குனர் மரியா ராஜா இளஞ்செழியன் இயக்கத்தில் உருவாகும் புதிய காதல் படத்தில் முக்கிய வேடத்தில் அப்பாஸ் நடிக்கவுள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் பூஜைகளுடன் சமீபத்தில் தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.