இசையமைப்பாளர் டூ ஹீரோ… இன்று 50-வது பிறந்த நாளை கொண்டாடும் விஜய் ஆண்டனி!
HBD Vijay Antony: கோலிவுட் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகி பல ஹிட் படங்களுக்கு இசையமைத்த விஜய் ஆண்டனி தற்போது நாயகனாகவும் தமிழ் சினிமாவில் கலக்கி வருகிறார். இந்த நிலையில் இன்று விஜய் ஆண்டனி தனது 50-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.

தமிழ் சினிமாவில் கடந்த 2005-ம் ஆண்டு இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கத்தில் வெளியான சுக்கிரன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார் விஜய் ஆண்டனி. தனது தனித்துவமான யாருக்கும் புரியாத சில வார்த்தைகளை தான் இசையமைக்கும் பாடல்களில் பயன்படுத்தி தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே பிரபலம் ஆனார் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி (Vijay Antony). 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரட் இசையமைப்பாளராக இன்றும் வலம் வருகிறார் விஜய் ஆண்டனி. தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக உள்ள ஜீவா, பிரித்விராஜ் சுகுமாரன், விஜய், ஜெய், தனுஷ், விஷால் என பலரின் படங்களுக்கு விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார். இவரது இசையில் வெளியான சுக்ரன், டிஸ்யூம், நான் அவன் இல்லை, காதலில் விழுந்தேன், நினைத்தாலே இனிக்கும், வேட்டைக்காரன், உத்தம புத்திரன், வெடி ஆகிய படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து படங்களுக்கு இசைமைத்து முன்னணி இசையமைப்பாளராக இருந்து வந்த விஜய் ஆண்டனி கடந்த 2006 முதல் 2009-ம் ஆண்டு வரை சினிமாவில் நடிகராக கேமியோ செய்து வந்தார். பின்பு 2012-ம் ஆண்டு முதல் சினிமாவில் நாயகனாக நடிக்கத் தொடங்கினார் விஜய் ஆண்டனி.




இசையமைப்பாளர் டூ நாயகன் அவதாரம் எடுத்த விஜய் ஆண்டனி:
அதன்படி விஜய் ஆண்டனி கடந்த 2012-ம் ஆண்டு இயக்குநர் ஜீவன் சங்கர் இயக்கத்தில் வெளியான நான் என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகம் ஆனார். இந்தப் படத்திற்கு இவரே இசையமைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது. அறிமுகம் ஆன முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.
அதனைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான சலீம், பிச்சைக்காரன், சைத்தான், எமன், அண்ணாதுரை, காளி, திமிரு புடிச்சவன், கொலைகாரன், கோடியில் ஒருவன், கொலை, ரத்தம், ரோமியோ, ஹிட்லர் மற்றும் மார்கன் ஆகிய படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.
Also read… விறுவிறுப்பான கதைக்களத்துடன் ஹாட்ஸ்டாரில் வெளியானது அதர்வாவின் டிஎன்ஏ படம்… விமர்சனம் இதோ!
பிசியான நடிகராக வலம் வரும் விஜய் ஆண்டனி:
தொடர்ந்து படங்களில் நாயகனாக நடித்து வரும் விஜய் ஆண்டனி அவரது படங்களுக்கு அவரே இசையமைத்தும் வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான மார்கன் படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து தற்போது விஜய் ஆண்டனி நடிப்பில் அடுத்ததாக சக்தி திருமகன் படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று விஜய் ஆண்டனி தனது 50-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பிரபலங்களும் ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
விஜய் ஆண்டனியின் எக்ஸ் தள பதிவு:
#Maarudho from #ShakthiThirumagan out now on all streaming platforms 🪽🪷
Lyric Video 🔗 https://t.co/lpPngSIFQy#ShakthiThirumaganfromSep05@ArunPrabu_ @TruptiRavi58094 @mrsvijayantony @vijayantonyfilm pic.twitter.com/bCmuLLK9hr
— vijayantony (@vijayantony) July 24, 2025
Also read… ரஜினிகாந்த் தவிற வேறு எந்த தமிழ் நடிகரை பிடிக்கு… செய்தியாளரின் கேள்விக்கு தனுஷின் நச் பதில்!