விறுவிறுப்பான கதைக்களத்துடன் ஹாட்ஸ்டாரில் வெளியானது அதர்வாவின் டிஎன்ஏ படம்… விமர்சனம் இதோ!
DNA movie: நடிகர் முரளியின் மகனாக சினிமாவில் அறிமுகம் ஆகி தற்போது தனக்கு என ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார் நடிகர் அதர்வா. இவரது நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான டிஎன்ஏ படம் தற்போது ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது. அந்தப் படத்தின் விமர்சனத்தை தற்போது பார்க்கலாம்.

தமிழ் சினிமாவில் நடிகர் அதர்வா (Atharvaa) நடிப்பில் கடந்த 20-ம் தேதி ஜூன் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் டிஎன்ஏ. இந்தப் படத்தை இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கி இருந்தார். இவர் முன்னதாக ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர், ஃபர்ஹானா ஆகிய படங்களை இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகர் அதர்வாவிற்கு ஜோடியாக நடிகை நிமிஷா சஜயன் நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் முகமது ஜீஷன் அய்யூப், பாலாஜி சக்திவேல், ரமேஷ் திலக், விஜி சந்திரசேகர், சேத்தன், ரித்விகா, சுப்ரமணியம் சிவா மற்றும் கருணாகரன் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்து இருந்தார்.
பிரபல தயாரிப்பு நிறுவனமான ஒலிம்பியா மூவிஸ் தயாரித்து திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் படம் தற்போது ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகியுள்ளது.




அதர்வாவின் டிஎன்ஏ படத்தின் கதை என்ன?
காதல் தோல்வியால் முழு நேரமும் போதையில் இருக்கும் ஆனந்தை (அதர்வா) போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்து அவரது நண்பர்களும், குடும்பத்தினரும் மீட்டு வருகின்றனர். இந்த நிலையில் அவருக்கு திருமணம் செய்துவைக்க நினைக்கும் குடும்பத்தினர் ஆனந்திற்காக borderline personality disorder அதாவது சற்று மனநிலை பாதிக்கப்பட்ட திவ்யாவை (நிமிஷா சஜயன்) திருமணம் செய்து வைக்கின்றனர்.
இவர்கள் இருவருக்கும் திருமணத்திற்கு முந்தைய வாழ்க்கை சிறப்பாக இல்லை என்றாலும் திருமணத்திற்கு பிறகு மிகவும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்கின்றனர். இந்த நிலையில் ஆனந்த் மற்றும் திவ்யா தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது.
மயக்கம் தெளிந்த பிறகு குழந்தையை பார்க்கும் திவ்யா இது என்னுடைய குழந்தை இல்லை என்று அனைவரிடம் சண்டை போடுகிறார். ஆனால் அவரது குடும்பத்தினரோ திவ்யாவிற் சற்று மனநல பிரச்னை இருப்பதால் அவர் அப்படி பேசுகிறார் என்று அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
டிஎன்ஏ படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Idhu saadhaarna paati ila… 🙄😨#DNA Now Streaming on JioHotstar ✨#DNA #DNANowStreaming #DNAonJioHotstar #JioHotstarTamil#DNAMovie @Atharvaamurali #NimishaSajayan #NelsonVenkatesan @Olympiamovis @Ambethkumarmla @maanasa_chou @Filmmaker2015 @editorsabu @GhibranVaibodha… pic.twitter.com/RoxAObRZ5f
— JioHotstar Tamil (@JioHotstartam) July 23, 2025
தனது மனைவி பேசுவதில் எதோ உண்மை இருக்கு என்று புரிந்துகொண்ட ஆனந்த் தங்களிடம் இருக்கும் ஆண் குழந்தையின் முடியை எடுத்து டிஎன்ஏ பரிசோதனை செய்கிறார். அது தங்களின் குழந்தை இல்லை என்ற உண்மையை அறிந்துகொள்கிறார்.
Also read… ஸ்டைலிஷான லுக்கில் நடிகர் சூர்யா… புதிய போஸ்டர் வெளியிட்ட சூர்யா 46 டீம்!
இப்படி இருக்கும் சூழலில் தங்களிடம் இருக்கும் குழந்தை யாருடையது, தங்களுடைய குழந்தை எப்படி காணாமல் போனது என்ற உண்மையை ஆனந்த் எப்படி கண்டு பிடிக்கிறார் என்பதே படத்தின் கதை. குழந்தை கடத்தலை மையமாக வைத்து வெளியான இந்தப் படம் திரையரங்குகளில் வரவேற்பைப் பெற்றது போல தற்போது ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது.