Maargan : விஜய் ஆண்டனியின் ‘மார்கன்’ பட ஓடிடி ரிலீஸ் எப்போது.. எங்குப் பார்க்கலாம்?
Maargan Movie OTT Release Update : தமிழில் பிரபல இசையமைப்பாளர் மற்றும் நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் விஜய் ஆண்டனி. இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் மார்கன். இப்படமானது வெளியாகி பாசிடிவ் விமர்சனங்களைப் பெற்றிருந்தது. திரையரங்குகளைக் கடந்து இப்படம் ஓடிடியில் வெளியாகவுள்ளது. எப்போது எங்கு மார்கன் படம் வெளியாகிறது என்பதைப் பற்றிப் பார்க்கலாம்

நடிகர் விஜய் ஆண்டனியின் (Vijay Antony) நடிப்பில் தமிழில் பல படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அந்த வகையில் இவரின் நடிப்பில் கிரைம் திரில்லர் திரைப்படமாக வெளியான படம் மார்கன் (Maargan). இந்த படத்தை இயக்குநர் லியோ ஜான் பால் (Leo John Paul) இயக்கியிருந்தார். இவரின் இயக்கத்தில் இப்படமானது கடந்த 2025 ஜூன் 27ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகியது. இந்த படத்தில் நடிகர் விஜய் ஆண்டனி குற்றங்களை விசாரிக்கும் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். இந்த திரைப்படமானது தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தில் விஜய் ஆண்டனியின் சகோதரியின் மகன் அஜய் தேஷன் (Ajay Deshan) என்பவர் முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்த படமானது கடந்த 2025, ஜூன் 27ம் தேதியில் வெளியாகி மக்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெற்றிருந்தது. இந்த படமானது திரையரங்குகளில் வெளியாகி 4 வரங்களைக் கடந்த நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியாகவுள்ளது. இப்படமானது வரும் 2025, ஜூலை 25ம் தேதியில் ஓடிடியில் வெளியாகிறது. எந்த ஓடிடியில் வெளியாகவுள்ளது என்பதைப் பற்றிப் பார்க்கலாம்.




இதையும் படிங்க : தனுஷின் குபேரா முதல் அதர்வாவின் டிஎன்ஏ வரை… இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் லிஸ்ட்!
மார்கன் படம் எந்த ஓடிடியில் வெளியாகிறது :
இந்த மார்கன் படமானது முழுக்க க்ரைம் திரில்லர் கதைக்களத்துடன் வெளியாகியிருந்தது. இந்த படத்தில் பெண்களை வித்தியாசமான மருந்தைப் பயன்படுத்திக் கொலைசெய்யும் கொலைகாரனை, குற்ற போலீஸ் அதிகாரியான விஜய் ஆண்டனி எவ்வாறு கண்டுபிடிக்கிறார் என்பதுதான் கதையாகும். இந்த படமானது சுமார் ரூ. 12 கோடிகளில் உருவாகி, சுமார் ரூ 14 கோடிகளுக்கு மேல் வசூல் பெற்றது.. பாக்ஸ் ஆபிஸ் வசூலில் ஓரளவு வெற்றிபெற்றிருந்தது என்றே கூறலாம். இப்படமானது வரும் 2025, ஜூலை 25ம் தேதி முதல் டெண்ட்கொட்டா என்ற ஓடிடியில் வெளியாகவுள்ளது. இது குறித்த அறிவிப்பை அந்த ஓடிடி நிறுவனம் பகிர்ந்துள்ளது.
இதையும் படிங்க : தியேட்டரில் ஹிட் அடித்த பறந்து போ படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா? வைரலாகும் தகவல்!
விஜய் ஆண்டனியின் மார்கன் பட ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு :
🖤 Darkness creeps… terror wakes.#Maargan – The Black Devil is set to strike!
Streaming from June 25 only on @Tentkotta 🎬🔥 (Excluding India)✨Subscribe Now ▶️ https://t.co/zz0ZAaNTUa
Go legal say No to Piracy @vijayantony @AJDhishan990 @leojohnpaultw @DopYuva… pic.twitter.com/dXmqUK5Odq— Tentkotta (@Tentkotta) July 21, 2025
விஜய் ஆண்டனியின் புதிய படங்கள் :
நடிகர் விஜய் ஆண்டனி தற்போது லாயர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குநர் ஜோஷ்வா சேதுராமன் இயக்க, நடிகர் விஜய் ஆண்டனியே தயாரித்து வருகிறார். இந்த படத்தை அடுத்ததாக இவரின் நடிப்பில், சக்தி திருமகன், வள்ளி மயில், காக்கி மற்றும் பிச்சைக்காரன் 3 போன்ற திரைப்படங்கள் உருவாகிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.