Maargan : விஜய் ஆண்டனியின் ‘மார்கன்’ பட முதல் 6 நிமிட காட்சிகள் வெளியானது!
Maargan Movie First 6 Minutes Scenes : இயக்குநர் லியோ ஜான் பால் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம்தான் மார்கன். இந்த படத்தில் முன்னணி நாயகனாக நடிகர் விஜய் ஆண்டனி நடித்துள்ளார். இப்படமானது விரைவில் வெளியாகவிருக்கும் நிலையில், படத்தில் முதல் 6 நிமிட காட்சிகளைப் படக்குழு வெளியிட்டுள்ளது. இது தற்போது ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்பட்டுவருகிறது.

கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் விஜய் ஆண்டனி (Vijay Antony). இவரின் முன்னணி நடிப்பில் தமிழில் பல படங்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இவர் நடிகர் மட்டுமில்லை சிறந்த இசையமைப்பாளரும் கூட, இவர் ஆரம்பத்தில் சினிமாவில் இசையமைப்பாளராகத்தான் நுழைந்தார். அதை தொடர்ந்து நான் (Naan) என்ற படத்தில் நடித்து கதாநாயகனாக அறிமுகமானார். அன்று முதல் இன்றுவரை பல படங்களில் கதாநாயகனாக நடித்து அசத்தி வருகிறார். இந்நிலையில், இவரின் நடிப்பில் ரிலீசிற்கு காத்திருக்கும் திரைப்படம் மார்கன் (Maargan). இந்த படத்தை இயக்குநர் லியோ ஜான் பால் (Leo John Paul) இயக்கியுள்ளார். இவரின் இயக்கத்தில் இப்படமானது முற்றிலும் க்ரைம் திரில்லர் திரைப்படமாக உருவாகியிருக்கிறது. இந்த படத்தில் விஜய் ஆண்டனியுடன் பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்நிலையில் இப்படம் வரும் 2025, ஜூன் 27ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், இன்னும் 2 நாட்கள் மட்டும் இருக்கும் நிலையில், படக்குழு இப்படத்தின் முதல் 6 நிமிட காட்சிகளை வெளியிட்டுள்ளது. இந்த காட்சிகளானது தற்போது இணையத்தில் வைரவலாகி வருகிறது. எந்தப் படக்குழுவும் இவ்வாறு ரிலீசிற்கு முன் படத்தின் காட்சிகளை வெளியிட்டதாக நிலையில், இந்த படக்குழுவின் செயல் ரசிகர்களை ஈர்த்து வருகிறது.




விஜய் ஆண்டனி வெளியிட்ட மார்கன் பட முதல் 6 நிமிட காட்சிகள் ;
#MAARGAN – The first 6 minutes OUT NOW 💉🩸
Tamil ⛓️💥 https://t.co/RdeA2u36zz
Telugu ⛓️💥 https://t.co/grVwS9zD72#maarganfromjune27 @leojohnpaultw @AJDhishan990 @mrsvijayantony @vijayantonyfilm @SureshProdns @SpiritMediaIN pic.twitter.com/fmre1oggnt— vijayantony (@vijayantony) June 25, 2025
விஜய் ஆண்டனியின் மார்கன் படத்தின் கதைக்களம் :
இந்த மார்கன் படத்திற்கு இசையமைப்பாளர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் போன்ற பல பணிகளையும் விஜய் ஆண்டனிதான் செய்துள்ளார். இந்த படமானது முற்றிலும் க்ரைம் திரில்லர் படமாக உருவாகியிருக்கிறது. இந்த படத்தில் முக்கிய வில்லனாக விஜய் ஆண்டனியின் சகோதரியின் மகன் அஜய் தேஷன் நடித்துள்ளார். இப்படத்தில் வில்லன் மர்ம மருந்தை வைத்து பெண்கள் மற்றும் மக்களை வித்தியாசமான முறையில் கொலை செய்கிறார். இதைத் தடுக்கும் போலீஸ் அதிகாரியாக நடிகர் விஜய் ஆண்டனி இப்படத்தில் நடித்திருக்கிறார். இவ்வாறே இப்படத்தின் கதைக்களம் உருவாகியிருப்பதாகக் கூறப்படுகிறது. இதில் முக்கிய கதாநாயகிகளாக பிரகிதா மற்றும் பிரிதிக்கா நடித்துள்ளனர்.
மேலும் இப்படத்தில் துணை கதாபாத்திரங்களில் நடிகர்கள் சமுத்திரக்கனி மற்றும் ராமச்சந்திரன் துரைராஜ் எனப் பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். விஜய் ஆண்டனியின் மாறுபட்ட நடிப்பில் உருவாகியிருக்கும் இப்படமானது வரும் 2025, ஜூன் 27ம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் ரிலீசிற்கு இன்னும் 2 நாட்கள் மட்டும் இருக்கும் நிலையில் புரமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. மேலும் இப்படத்தின் மீது ரசிகர்களுக்கும் பெரும் எதிர்பார்ப்புகள் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.