AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

த்ரிஷ்யம் படத்தை மலையாளம், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் ஒரே தேதியில் வெளியிட இயக்குநர் திட்டம்!

Drishyam 3: நடிகர் மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தப் படம் த்ரிஷ்யம். இந்தப் படத்தை இந்தி மற்றும் தென்னிந்திய மொழிகளில் ரீமேக் செய்து வெளியிட்டனர். அந்த மொழிகளிலும் படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.

த்ரிஷ்யம் படத்தை மலையாளம், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் ஒரே தேதியில் வெளியிட இயக்குநர் திட்டம்!
ஜீத்து ஜோசஃப், மோகன்லால்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Updated On: 25 Jun 2025 18:22 PM IST

நடிகர் மோகன்லால் (Actor Mohanlal) நடிப்பில் மலையாளத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் த்ரிஷ்யம். இந்தப் படத்தை இயக்குநர் ஜீத்து ஜோசஃப் (Jeethu Joseph) எழுதி இயக்கி இருந்தார். இந்தப் படத்தின் முதல் பாகம் மலையாளத்தில் கடந்த 2013-ம் ஆண்டு வெளியானது. அன்பான மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் சிறிய கிராமத்தில் வாழ்ந்து வந்த மோகன்லாலின் குடும்பத்தில் திடீர் என ஒரு சிக்கல் ஏற்படுகின்றது. தனது மகளின் அந்தரங்க வீடியோவை வைத்து மிரட்டிய நபரை தனது மகள் கொலை செய்துவிட அதனை எப்படி மோகன்லால் மூடி மறைத்தார் என்பதே படத்தின் கதை. க்ரைம் த்ரில்லர் பாணியில் வெளியான இந்தப் படம் சஸ்பென்ஸ்கள் நிறைந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

மற்ற மொழிகளில் ரீமேக் செய்யப்பட்ட மோகன்லாலின் த்ரிஷ்யம் படம்:

இந்தப் படம் மலையாளத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகர்களை வைத்து ரீமேக் செய்தனர். இதில் தமிழில் நடிகர் கமல் ஹாசன் பாபநாசம் என்ற பெயரில் இந்தப் படத்தில் நடித்து இருந்தார். முதல் பாகம் நல்ல வரவேற்பைப் தமிழில் பெற்றிருந்தாலும் இரண்டாம் பாகம் சில காரணங்களால் எடுக்காமலே போனது.

ஆனால் இந்தியில் நடிகர் அஜத் தேவ்கானும், தெலுங்கு சினிமாவில் நடிகர் வெங்கடேஷ் த்ரிஷ்யம் படத்தின் அவர் அவர் மொழியில் ரீமேக் செய்து நடித்து இருந்தனர். இந்த இரண்டு மொழிகளிலும் இரண்டு பாகங்களும் ரீமேக் செய்து வெளியிடப்பட்டது. எந்தவித சந்தேகமும் இன்றி இந்தப் படங்கள் அந்ததந்த மொழியில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.

த்ரிஷம் 3 படத்தின் படப்பிடிப்பு குறித்து மோகன்லால் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

த்ரிஷ்யம் 3 படத்தை மூன்று மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியிட திட்டம்:

த்ரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகம் தமிழில் மட்டும் தான் வெளியாகவில்லை. ஆனால் மற்ற இரண்டு மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு வெற்றிகரமாக வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மூன்றாவது பாகத்தை எடுப்பதற்காக அறிவிப்பை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. அதில் கடந்த காலம் ஒருபோது அமையாக இருக்காது என்றும் படத்தின் மூன்றாம் பாகத்திற்கான படப்பிடிப்பு அக்டோபரில் தொடங்குகிறது என்றும் தெரிவித்து இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து த்ரிஷ்யம் படத்தின் இயக்குநர் ஜீத்து ஜோசஃப், த்ரிஷ்யம் 3 படத்தினை மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிட திட்டமிட்டு வருவதாக சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்தார். அதில் கதை முடிவானது மற்ற மொழி இயக்குநர்களிடம் கொடுத்துவிட்டால் இந்த திட்டம் சரியாக நடக்கும் என்றும் அவர் தெரிவித்து இருந்தார்.

Follow Us