Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தளபதி விஜய் ஜன நாயகன் படத்திற்காக இத்தனை கோடிகள் சம்பளமாக வாங்கினாரா? வைரலாகும் தகவல்

Thalapathy Vijay: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். இவர் தற்போது ஜன நாயகன் படத்தின் தீவிரமாக நடித்து வருகிறார். இது இரவது நடிப்பில் வெளியாகும் கடைசிப் படம் என்பதால் படம் குறித்த தகவல்கள் அவ்வபோது வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்று வருகின்றது.

தளபதி விஜய் ஜன நாயகன் படத்திற்காக இத்தனை கோடிகள் சம்பளமாக வாங்கினாரா? வைரலாகும் தகவல்
தளபதி விஜய்Image Source: social media
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 25 Jun 2025 13:13 PM

தளபதி விஜய் (Actor Thalapathy Vijay) நடிப்பில் 69-வது படமாக உருவாகி வருகின்றது ஜன நாயகன். இயக்குநர் எச்.வினோத் (Director H Vinod) இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தின் அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. நடிகர் விஜயில் நடிப்பில் இறுதியாக வெளியாக உள்ள இந்தப் படத்தின் அவர் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். சமீபத்தில் கடந்த 22-ம் தேதி ஜூன் மாதம் 2025-ம் ஆண்டு தளபதி விஜயின் 51-வது பிறந்த நாளை முன்னிட்டு ஜன நாயகன் படத்தில் இருந்து அவரது கதாப்பாத்திர வீடியோவைப் படக்குழு வெளியிட்டது. ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் விதமாக வெளியான அந்த வீடியோவை பார்க்கும் போது நடிகர் விஜய் ஜன நாயகன் படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளது தெரியவந்தது.

இந்த நிலையில் நடிகர் விஜய் அவரது நடிப்பில் இறுதியாக வெளியாக உள்ள ஜன நாயகன் படத்திற்காக பெற்ற சம்பளம் குறித்த விவரம் இணையத்தில் கசிந்து வைரலாகி வருகின்றது. அதன்படி நடிகர் விஜய் ஜன நாயகன் படத்திற்காக ரூபாய் 275 கோடிகள் தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து சம்பளமாக பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் முழுவதும் சம்பளமாக பெற்றுவிட்டதாகவும் படத்தின் லாபத்தில் இருந்து எந்த பங்கும் வாங்கப்போவது இல்லை என்றும் சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றது. ஆனால் இதுகுறித்த எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தளபதி விஜயின் நடிப்பில் விறுவிறுப்பாக தயாராகி வரும் ஜன நாயகன் படம்:

நடிகர் விஜய் தீவிர அரசியலில் களம் இறங்க உள்ளதால் அவர் இனி திரைப் படங்களில் நடிக்கப் போவது இல்லை என்று முடிவு எடுத்துவிட்டார். இதன் காரணமாக அவரது இறுதிப் படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்து இருந்தாலும் இனி அவர் படங்களில் நடிக்க மாட்டார் என்ற வருத்தமும் அதிகமாகவே உள்ளது.

பீஸ்ட் படத்தைத் தொடர்ந்து இந்த ஜன நாயகன் படத்திலும் நடிகை பூஜா ஹெக்டே நடிகர் விஜய்க்கு நாயகியாக நடித்து உள்ளார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் விஜய்க்கு வில்லனாம பிரபல பாலிவுட் நடிகர் பாபி தியோல் நடித்து உள்ளார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பிரியாமணி, நரேன், மமிதா பைஜு, வரலட்சுமி என ஒரு நட்சத்திரப் பட்டாளமே இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

மேலும் இந்தப் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகின்ற ஜனவரி மாதம் 9-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு முன்பே அறிவிப்பை வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஜன நாயகன் படத்தில் தளபதி விஜயின் அறிமுக வீடியோ: