Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

நான் தமிழ் சினிமாவில் பெரிய நடிகையாக வருவேன்னு அந்த நடிகர் ஜோசியம் சொன்னார் – நடிகை தேவயானி

Actress Devayani: தமிழ் சினிமாவில் ஹோம்லி லுக்கில் தங்களை தொடர்ந்து காட்சிப்படுத்திய நடிகைகளின் எண்ணிக்கை மிகக் குறைவு. அப்படி தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர் நடிகை தேவயானி. இந்த நிலையில் நடிகர் குமரி முத்து தனக்கு ஜோசியம் பார்த்து கூறிய விசயத்தை வெளிப்படையாக பேசியுள்ளார் தேவயானி.

நான் தமிழ் சினிமாவில் பெரிய நடிகையாக வருவேன்னு அந்த நடிகர் ஜோசியம் சொன்னார் – நடிகை தேவயானி
நடிகை தேவயானி
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 24 Jun 2025 20:35 PM IST

நடிகை தேவயானி (Actress Devayani) தமிழ் சினிமாவில் 90 களில் முன்னனி நடிகையாக வலம் வந்தவர். தற்போது தென்னிந்திய சினிமாவில் குணச்சித்திர வேடங்களிலும், சின்னத்திரையிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகை தேவயானி சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் நடிகர் குமரிமுத்து குறித்து சுவாரஸ்யமான சம்பவம் ஒன்றை வெளிப்படையாக பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது, “தமிழ் சினிமாவில் நான் முதன் முதலில் அறிமுகம் ஆன தொட்டாச்சினிங்கி படத்தில் நடிகர் குமரி முத்துவும் நடித்தார். அந்தப் படத்தின் ஷூட்டிங்கில் அவர் நல்லா பேசுவார். அப்போ அவருக்கு இந்த ஜாதகம் நட்சத்திரம் ராசி எல்லாம் பாப்பார். அவர் என்னைப் பற்றி அம்மாவிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அம்மா அவரிடம் எனது முதல் படம் வெளியாகவில்லை என்று தெரிவித்தார்.

அப்படியா என்று கேட்ட குமரிமுத்து தமிழ் நாட்டில் ஒரு ராசி இருக்கு. முதல் படம் வெளியாகவில்லை என்றால் அவர்கள் மிகப்பெரிய நடிகராக மாறுவார்கள். அப்படி உங்க பொண்ணும் தமிழ் சினிமாவில் பெரிய நடிகையாக வருவாங்க. முன்னாள நிறைய நடிகர்களுக்கு அப்படி நடந்து இருக்கு என்று அவர் சொன்னார்.

குமரிமுத்து சொன்னபோது நானும் அம்மாவும் ஒருத்தர ஒருத்தர் பாத்துகிட்டோம். என்ன நம்புங்க கண்டிப்பா இவங்க பெரிய நடிகையாக வருவாங்கனு அவர் சொன்ன பாசிட்டிவ் விசயம் தான் எனக்கு மிகவும் தெம்பாக இருந்தது அந்த நேரத்தில் என்று நடிகை தேவயானி அந்த பேட்டியில் தெரிவித்தது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் நாயகியாக நடித்த தேவயாணி:

தமிழ் சினிமாவில் பல நடிகர்களுடன் நடிகை தேவயானி ஜோடிப் போட்டு நடித்தப் படங்கள் தற்போது ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. அப்படி நடிகை தேவயானி நடிகர்கள் கமல் ஹாசன், சரத்குமார், அஜித் குமார், விஜய், பிரசாந்த் என பலருடன் சேர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து குடும்ப குத்துவிளக்காக நடித்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த நடிகை தேவயானி தற்போது தமிழ் சினிமாவில் குணசித்திர வேடங்களிலும் சின்னத்திரை சீரியல்களில் நாயகியாகவும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இவரது நடிப்பில் நிழற்குடை படம் திரையரங்குகளில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

தனது தம்பி நகுல் உடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்ட நடிகை தேவயானி: