AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

உயரம் குறைவாக இருப்பதால் பல பட வாய்ப்புகளை இழந்தேன் – நடிகை இவானா ஓபன் டாக்

Actress Evana: நடிகை இவான மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகி பின்பு தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இந்த நிலையில் தனது உயரம் குறைவு காரணமாக சினிமாவில் தான் சந்தித்த அவமானங்கள் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

உயரம் குறைவாக இருப்பதால் பல பட வாய்ப்புகளை இழந்தேன் – நடிகை இவானா ஓபன் டாக்
நடிகை இவானாImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Updated On: 24 Jun 2025 18:27 PM IST

நடிகை இவானா (Actress Ivana) மலையாள சினிமாவில் நடிகர் பிருத்விராஜ் (Actor Prithviraj Sukumaran) நடிப்பில் 2012-ம் ஆண்டு வெளியான மாஸ்டர்ஸ் என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து கடந்த 2016-ம் ஆண்டு வரை மலையாள சினிமாவில் நடிகையாக நடித்து வந்தார். பின்பு தமிழ் சினிமாவில் கடந்த 2018-ம் ஆண்டு இயக்குநர் பாலா இயக்கத்தில் வெளியான நாட்சியார் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆனார். இதில் ஜி.வி.பிரகாஷ் குமாரின் ஜோடியாக இவானா நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் சின்ன சின்ன கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த நடிகை இவானா தற்போது தென்னிந்திய சினிமாவில் நாயகியாக பலப் படங்களில் நடித்து வருகிறார்.

உயரம் குறைவால் பட வாய்ப்புகளை இழந்த நடிகை இவானா:

இந்த நிலையில் நடிகை இவானா சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் தனது உயரம் குறைவு காரணமாக சினிமாவில் பல அவமானங்களை சந்தித்து உள்ளதாகா தெரிவித்துள்ளார். அதன்படி அவர் பேசியதாவது, பல படங்களில் நடிப்பதற்காக ஆடிஷன் சென்றபோது தனது உயரத்தை காரணம் காட்டி படக்குழுவினர் தன்னை நிராகரித்ததாக தெரிவித்துள்ளார்.

மேலும் 5 அடி மட்டுமே இருக்கும் தன்னிடம் ஹீரோ உயரமாக இருக்கிறார். அதனால் நீங்கள் அவருக்கு நாயகியாக நடித்தால் நன்றாக இருக்காது என்று முகத்திற்கு நேராகவே கூறியதாக நடிகை இவனா தெரிவித்து இருந்தார். இவனாவின் இந்த பேட்டி தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

நடிகை இவானாவின் போட்டோஷூட்:

 

View this post on Instagram

 

A post shared by Ivana (@i__ivana_)

நடிகை இவானா நடிப்பில் தமிழில் வெளியான படங்கள்:

நடிகை இவானா தமிழில் இயக்குநர் பாலா இயக்கத்தில் வெளியான நாச்சியார் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து நடிகை இவானா தமிழ் சினிமாவில் ஹீரோ, லவ் டுடே, லெட்ஸ் கெட் மேரிட், மதிமாறன், கள்வன், ட்ராகன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதில் நடிகை இவானா லவ் டுடே படத்தில் நடித்தன் மூலம் தென்னிந்திய அளவில் ரசிகர்களிடையே நன்கு பிரபலம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நாயகனாக நடித்த இந்தப் படத்தில் இவனா நாயகியாக நடித்து இருந்தார். வித்யாசமான கதையில் உருவான இந்தப் படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

Follow Us