காமெடி த்ரில்லர் பிடிக்குமா? அப்போது இன்ஸ்பெக்டர் ஜெண்டே படத்தை கண்டிப்பா பாருங்க!
Inspector Zende Movie OTT Review Here | இந்தி சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் மனோஜ் பாஜ்பாய். இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான இன்ஸ்பெக்டர் ஜெண்டே திரைப்பட எப்படி இருக்கிறது என்று தற்போது இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தி சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருகிறார் நடிகர் மனோஜ் பாஜ்பாய். இவரது நடிப்பில் இந்தி மொழியில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்தி மொழியில் இவர் அதிக அளவில் படங்களில் நடித்து வந்தாலும் ஃபேமிலி மேன் என்ற இணையதள தொடரின் மூலமாக தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையேயும் அதிக அளவில் கவனத்தை ஈர்த்தார். அந்த இணையதள தொடரை தொடர்ந்து நடிகர் மனோஜ் பாஜ்பாய் நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிஅக்ர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் நடிகர் மனோஜ் பாஜ்பாய் நடிப்பில் உருவாகி நேரடியாக ஓடிடியில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தப் படம் இன்ஸ்பெக்டர் ஜெண்டே. இந்தப் படம் எப்படி இருக்கிறது என்று இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
இந்த இன்ஸ்பெக்டர் ஜெண்டே என்ற படத்தில் நடிகர் மனோஜ் பாஜ்பாய் உடன் இணைந்து நடிகர்கள் ஜிம் சர்ப், சச்சின் கெடேகர், கிரிஜா ஓக், பால்சந்திரா கடம், வைபவ் மங்கிலே, ஹரிஷ் துதாடே, ஓன்கர் ரவுத், பாரத் சவாலே, தேவாங்க் பக்கா, நிதின் பஜன் மற்றும் மாதவ் வசே என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். மேலும் இந்தப் படத்தை இயக்குநர் சின்மய் மண்டலேகர் எழுதி இயக்கி இருந்தார். மேலும் த்ரில்லர் காமெடி பாணியில் உருவாகி நேரடியாக ஓடிடியில் வெளியான இந்தப் படம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.
Also Read… ஜன நாயகன் பட இயக்குநரை நேரில் சந்தித்த ஜேசன் சஞ்சய் – வைரலாகும் வீடியோ!




இன்ஸ்பெக்டர் ஜெண்டே படத்தை ஓடிடியில் மிஸ் செய்யாதீர்கள்:
கார்ல் என்ற ஒரு பெரிய கொலைக் குற்றவாளி திகார் ஜெயிலில் இருந்து தப்பித்துவிடுகிறார். அந்த சீரியல் கில்லர் கார்லை பிடிப்பதற்கு அவரை 15 வருடங்களுக்கு முன்பு பிடித்த காவல்துறை அதிகாரி இன்ஸ்பெக்டர் ஜெண்டேவிடம் பொருப்பு கொடுக்கப்படுகின்றது. அதன்பிறகு இன்ஸ்பெக்டர் ஜெண்டே தனது குழுவுடன் இணைந்து எப்படி அந்த குற்றவாளி கார்லை பிடிக்கிறார்கள் என்பதே படத்தின் கதை. இந்த சீரியசான கதையை காமெடியாக எடுத்து ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து உள்ளனர். இந்தப் படம் தற்போது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது தற்போது.
Also Read… Jana Nayagan: தளபதி கச்சேரி.. ஜன நாயகன் பட 2வது நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?