தனுஷின் பர்த்டே ஸ்பெஷலாக வெளியாகும் ஓம் பட ஃபர்ஸ்ட் சிங்கிள் – அப்டேட் இதோ!
OM Movie First Single: அமரன் திரைப்பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியின் இயக்கத்தில், தனுஷ் நடித்துவரும் புத்தம் புது படம்தான் ஓம். இப்படமானது செம்மர கடத்தல் தொடர்பான கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடல் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
தென்னிந்திய சினிமாவில் ரசிகர்கள் கொண்டாடும் நாயகனாகவும், இயக்குநராகவும் இருந்துவருபவர் தனுஷ் (Dhanush). இவரின் நடிப்பில் இறுதியக கர (Kara) என்ற திரைப்படம் வெளியாகியிருந்த நிலையில், மக்கள் மத்தியில் கலவையான விமர்சங்களை பெற்றிருந்தது. இப்படத்தை முடித்த கையேடு தனுஷ் இணைந்திருந்த புது திரைப்படம்தான் ஓம் (OM). இதை அமரன் (Amaran) பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி (Rajkumar Periasamy) இயக்க, தனுஷின் ஒண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் ஆர்.டேக்.ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துவருகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கிய நிலையில், தற்போது இறுதிக்கட்டதை எட்டியுள்ளது.
இதில் தனுஷ் ஹீரோவாக நடிக்க, அவருடன் நடிகை சாய் பல்லவி (Sai Pallavi) மற்றும் ஸ்ரீலீலா (Sreeleela) இணைந்து நடித்தவருகின்றனர். தனுஷின் ஓம் படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் (Sai Abhyankkar) இசையமைக்க, படத்தின் பாடல்கள் சிறப்பாக உருவாகியுள்ளதாம். இந்நிலையில், தற்போது ஓம் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.




இதையும் படிங்க: வாடிவாசல் இல்ல.. தமிழ் முருகன் இல்ல.. வெற்றிமாறன் இணையும் அடுத்த படம் இதுவா?
ஓம் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ்:
சாய் அபயங்கரின் இசையில் ஓம் படம் உருவாகிவரும் நிலையில், இப்படத்தின் முதல் பாடல் தனுஷின் பிறந்தநாளில் வெளியாகவுள்ளதாம். வரும் 2026ம் ஆண்டு ஜூலை 28ம் தேதியில் தனுஷின் 43வது பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்படுவதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த படமானது தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் என பான் இந்திய மொழிகளில் உருவாகிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தனுஷின் ஓம் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் குறித்து படக்குழு வெளியிட்ட அறிவிப்பு எக்ஸ் பதிவு:
It’s time for a birthday celebration like never before 💥#OM – First single loading for @dhanushkraja‘s birthday – July 28.
A @SaiAbhyankkar musical festival@mammukka @Rajkumar_KP @wunderbarfilms @RTakeStudios @Sai_Pallavi92 @sreeleela14 @Shra2309 @azy905 @theSreyas… pic.twitter.com/2iEnDENb6w
— Wunderbar Films (@wunderbarfilms) July 26, 2026
தனுஷின் ஓம் பட ரிலீஸில் மாற்றமா ?:
நடிகர் தனுஷின் ஓம் படமானது அதிரடி ஆக்ஷன் மற்றும் விறுவிறுப்பான கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. தனுஷ் ராயன் படத்திற்கு பின் முழுவதுமாக ஆக்ஷன் கதையில் நடித்த படமாக இது அமைந்துள்ளது. இப்படம் புஷ்பா படத்தை போலவே செம்மர கடத்தல் தொடர்பான கதையில் உருவாகிவருவதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: தளபதி கச்சேரி.. ஜன நாயகன் பட 2வது நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
இப்படம் வரும் 2026ம் ஆண்டு அக்டோபர் 18ம் தேதியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படம் அதே அக்டோபர் 16ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது. இதனால் ஓம் பட ரிலீஸ் மாற்றப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்ட நிலையில், படக்குழு அதில் இந்தத் மாற்றமும் இல்லை என்பதுபோல போஸ்டர்களை வெளியிட்டிருந்தது. ஆனால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி மாற்ற வாய்ப்புள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது.