AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Jana Nayagan: தளபதி கச்சேரி.. ஜன நாயகன் பட 2வது நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

Jana Nayagan 2-day Collection: 2026ம் ஆண்டில் ஒட்டுமொத்த கோலிவுட் சினிமாவே எதிர்பார்த்து காத்திருந்த திரைப்படம்தான் ஜன நாயகன். முதல்வர் விஜய் சினிமாவில் இறுதியாக நடித்திருந்த இப்படமானது மக்கள் மத்தயில் சிறப்பான வரவேற்பைப் பெற்றுவருகிறது. அந்த வகையில், இப்படம் 2 நாள் முடிவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என இணையத்தில் தகவல்கள் வைரலாகிவருகிறது.

Jana Nayagan: தளபதி கச்சேரி.. ஜன நாயகன் பட 2வது நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஜன நாயகன்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 26 Jul 2026 12:03 PM IST

முதலமைச்சர் விஜய் (CM Vijay) சினிமாவில் கடைசியாக நடித்திருந்த பிரம்மாண்டமான திரைப்படம்தான் ஜன நாயகன் (Jana Nayagan). இந்த படமானது கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கும் மேல் உருவாகிவந்த நிலையில், கடந்த 2026ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பின் சென்சார் பிரச்சனையின் காரணமாக கிட்டத்தட்ட 6 மாதம் நேரம் எடுத்துக்கொண்ட நிலையில், ஒருவழியாக ஜூலை 23ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகியிருந்தது. இந்த படத்தை இயக்குநர் எச்.வினோத் (H Vinoth) இயக்க, கேவிஎன் புரொடக்ஷன்ஸ் (KVN Productions) நிறுவனத்தின் கீழ் வெங்கட் கே நாராயணா தயாரித்துள்ளார். மேலும் அனிருத்தின் (Anirudh) இசையமைப்பில் இப்படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையிலும் உருவாகியிருந்தது.

அதிரடி ஆக்ஷன் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கதைக்களத்தில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், திரையரங்குகளில் சிறப்பான வரவேற்பைப் பெற்றுவருகிறது. இப்படம் வெளியாகி 2 நாட்களை கடந்துள்ள நிலையில், இதுவரை உலகமெங்கும் மொத்தம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: ராமாயணம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஒவ்வொரு இந்தியரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளது – நடிகர் யாஷ்

ஜன நாயகன் பட 2வது நாள் உலகளாவிய வசூல் விவரம்:

இதில் முதல்வர் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல் மற்றும் பிரியாமணி உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களும் இணைந்து நடித்துள்ளனர். அதிரடி ஆக்ஷன் கதைக்களத்தில், வெளியான இப்படம் திரையரங்குகளில் வெற்றிநடைபோட்டுவருகிறது.

இதையும் படிங்க: வாடிவாசல் இல்ல.. தமிழ் முருகன் இல்ல.. வெற்றிமாறன் இணையும் அடுத்த படம் இதுவா?

இந்நிலையில் இப்படமானது இரண்டு நாட்கள் முடிவில் சுமார் ரூ 200 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாக இணையத்தில் தகவல்கள் வைரலாகிவருகிறது. ஆனால் இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புக்களை எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஜன நாயகன் படத்தின் இரண்டாவது நாள் வசூல் குறித்து இணையத்தில் வைரலாகும் பதிவு:

இந்த ஜன நாயகன் படமானது ஏற்கனவே இணையத்தில் லீக் ஆகியிருந்த நிலையில், பின் அதிலிருந்து ஏ தர சென்சார் கொண்ட படமாக மாற்றியமைக்கப்பட்டது. இதனால் இப்படத்தை திரையரங்குகளில் 18 வயதிற்கு மேற்பட்ட நபர்களால் மட்டுமே பார்க்கமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இணையத்தில் லீக்காகியிருந்தாலும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பீக் குறையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us