AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ராமாயணம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஒவ்வொரு இந்தியரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளது – நடிகர் யாஷ்

Actor Yash talks about Ramayana movie | பான் இந்திய மொழிகளில் பிரபல நாயகனாக வலம் வருபவர் நடிகர் யாஷ். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் அவர் சமீபத்தில் ராமாயணம் குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ராமாயணம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஒவ்வொரு இந்தியரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளது – நடிகர் யாஷ்
நடிகர் யாஷ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 25 Jul 2026 16:05 PM IST

கன்னட சினிமாவில் சீரியல்களில் நடிப்பதன் மூலம் தனது சினிமா வாழ்க்கையை தொடங்கினார் நடிகர் யாஷ். இவர் சீரியல்களில் நடித்த போது கன்னட சினிமா மக்களிடையே கவனத்தை ஈர்த்தார். அதனைத் தொடர்ந்து இவர் கன்னட சினிமாவில் நாயகனாக நடிக்கத் தொடங்கினார். தொடர்ந்து சின்ன சின்னப் படங்களில் நடித்து வந்த நடிகர் யாஷ் கேஜிஎஃப் என்ற பெரிய பட்ஜெட் படத்தில் நடித்ததன் மூலம் கன்னட சினிமா மட்டும் இன்றி உலக அளவில் ரசிகர்களிடையே பிரபலமானார். மேலும் இந்தப் படம் கன்னட சினிமாவை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் சென்றது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கேஜிஎஃப் படம் முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகம் என இரண்டு பாகங்களும் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் யாஷ் நாயகனாக நடித்து வரும் படம் டாக்ஸிக். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து வெளியீட்டிற்கான போஸ்ட் புரடெக்‌ஷன் பணிகள் நடைப்பெற்று வருகின்றது. மேலும் இந்தி மொழியில் உருவாகி வரும் ராமாயணம் படத்தில் இவர் ராவணன் கதாப்பாத்திரத்திலும் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் நடிகர் ரன்பீர் கபூர் ராமராகவும் நடிகை சாய் பல்லவி சீதையாகவும் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் விழாவில் பேசிய நடிகர் யாஷ் ராமாயணம் குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ராமாயணம் ஒவ்வொரு இந்தியரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளது:

ராமாயணம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஒவ்வொரு இந்தியரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளது என்று கூறிய யாஷ், தனது சிறுவயதில் தனது தாத்தா தான் முதன்முதலில் அந்த இதிகாசத்தை தனக்குக் கூறினார் என்றும் குறிப்பிட்டார். அதிகாரம், சிறந்த கல்வி மற்றும் திறமை வாய்ந்த ஒருவரைக்கூட, தொடர்ச்சியான தவறான முடிவுகளின் மூலம் ‘அகங்காரம்’ எவ்வாறு வீழ்த்திவிடும் என்பதை விளக்கிய அவர், ராமாயணத்தை ஒரு சுவாரஸ்யமான மனிதக் கதை என்று வர்ணித்தார் என்று யாஷ் தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… Sai Abhyankkar: பேக் டூ பேக் ஹிட்.. சம்பளத்தை உயர்த்தும் சாய் அபயங்கர்.. அட இத்தனை கோடியா?

இணையத்தில் வைரலாகும் நடிகர் யாஷ் பேச்சு:

Also Read… இது ஃபேமிலி ட்ராமாவா? இல்ல ட்ராமா ஃபேமிலியா? தியேட்டரில் கான் சிட்டி படத்தை மிஸ் பண்ணீங்களா – ஓடிடியில் மிஸ் பண்ணிடாதீங்க!

Follow Us