AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இது ஃபேமிலி ட்ராமாவா? இல்ல ட்ராமா ஃபேமிலியா? தியேட்டரில் கான் சிட்டி படத்தை மிஸ் பண்ணீங்களா – ஓடிடியில் மிஸ் பண்ணிடாதீங்க!

OTT review for the Con City movie starring Arjun Das | நடிகர் அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகி சமீபத்தில் திரையரங்குகளில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற கான் சிட்டி படம் தற்போது ஓடிடியில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது.

இது ஃபேமிலி ட்ராமாவா? இல்ல ட்ராமா ஃபேமிலியா? தியேட்டரில் கான் சிட்டி படத்தை மிஸ் பண்ணீங்களா – ஓடிடியில் மிஸ் பண்ணிடாதீங்க!
கான் சிட்டிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 25 Jul 2026 08:00 AM IST

தமிழ் சினிமாவில் கடந்த ஜூன் மாதம் 26-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் கான் சிட்டி. க்ரைம் காமெடி பாணியில் உருவாகி உள்ள இந்த கான் சிட்டி படத்தை இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் எழுதி இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படத்தின் மூலம் இவர் இயக்குநராக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தை தயாரிப்பு நிறுவனங்களான பவர் ஹவுஸ் பிக்சர்ஸ், மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ், கிளவுட் ஸ்டுடியோஸ் மற்றும் சில்வர் ட்ரீ ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்து இருந்தது. மேலும் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் ட்ரெய்லரைப் பார்த்து படத்தை பார்க்கும் போது மிகவும் சர்ப்ரைஸாக இருந்தது என்று ரசிகர்கள் கூறியது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் நடிகர் அர்ஜுன் தாஸ் நாயகனாக நடித்து இருந்த நிலையில் நடிகை அன்னா பென் நாயகியாக நடித்து உள்ளார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் யோகி பாபு, வடிவுக்கரசி, அகிலன், சாக்ஷி வைத்யா, நந்த கோபால், VTV கணேஷ், தீபா ராமானுஜம், ராதா ரவி, அருள்தாஸ், ஷாஜி சென், தம்பி ராமையா, ரமேஷ் திலக், பரத்வாஜ் ரங்கன், இமான் அண்ணாச்சி, மதன்குமார் தட்சிணாமூர்த்தி, பொன்வண்ணன், ரகு எசக்கி, சதானந்த், மதுசூதன ராவ் மற்றும் லல்லு என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். இந்த நிலையில் படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்றதை தொடர்ந்து தற்போது ஓடிடியில் வெளியாகி உள்ளது.

கான் சிட்டி படத்தின் கதை என்ன?

படத்தின் தொடக்கத்திலேயே கர்நாடகா மாநிலத்தில் உள்ள மங்களூரு என்ற ஊரில் நாயகன் அர்ஜுன் தாஸ் ஒரு சிறிய மெஸ் வைத்து இருப்பதாக காட்டப்படுகின்றது. அவருடன் நாயகி அன்னா பென் மற்றும் அவரின் அண்ணன் யோகி பாபு மற்றும் அம்மா வடிகரசி உடன் மாற்றுதிறனாளி மகன் நடக்க முடியாத நிலையில் இருக்கிறார். கணவன் அர்ஜுன் தாஸ் மற்றும் மனைவி அன்னா பென் இடையே சரியான இணக்கம் இல்லாதது போல காட்டப்படுகின்றது.

Also Read… Sai Pallavi: சூர்யா சாரை அடி அடினு போட்டு அந்த படத்தில் அடித்தேன் – சாய் பல்லவி கலகல பேச்சு!

இப்படி இருக்கும் நிலையில் இவர்களின் மகன் மாற்றிதிறனாளி சிறுவனை ஒருவர் பள்ளியில் இருந்து கடத்திவிடுகிறார். அந்த மகனை இந்த குடும்பத்தினர் எப்படி காப்பாற்றுகிறார்கள் என்பதே படத்தின் கதை. இந்தப் படம் பல ட்விஸ்ட்கள் நிறைந்து இருக்கும் நிலையில் பார்வையாளர்களை நிச்சயமாக கவரும் விதத்தில் உள்ளது. திரையரங்குகளில் இந்தப் படத்தை மிஸ் செய்தவர்கள் இனி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் மிஸ் செய்யாமல் பாருங்கள்.

Also Read… வாத்தி மாதிரி விஸ்வநாத் & சன்ஸ் படத்தை எடுக்கவில்லை – இயக்குநர் வெங்கி அட்லூரி ஓபன் டாக்

Follow Us