AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வாத்தி மாதிரி விஸ்வநாத் & சன்ஸ் படத்தை எடுக்கவில்லை – இயக்குநர் வெங்கி அட்லூரி ஓபன் டாக்

Director Venky Atluri | தமிழ் சினிமாவில் அடுத்ததாக ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். இந்தப் படத்திக் இயக்குநர் வெங்கி அட்லூரி சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் படத்தை எப்படி எடுத்தோம் என்பது குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

வாத்தி மாதிரி விஸ்வநாத் & சன்ஸ் படத்தை எடுக்கவில்லை – இயக்குநர் வெங்கி அட்லூரி ஓபன் டாக்
வெங்கி அட்லூரிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Updated On: 24 Jul 2026 11:09 AM IST

தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குநர் வெங்கி அட்லூரி. இவரது இயக்கத்தில் தெலுங்கு சினிமாவில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் லக்கி பாஸ்கர். நடிகர் துல்கர் சல்மான் நாயகனாக நடித்து திரையரங்குகளில் வெளியான அந்தப் படம் விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் வெங்கு அட்லூரி அடுத்ததாக எந்த நடிகரை வைத்து படம் இயக்குவார் என்று திரையுலகினர் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் அவர் நடிகர் சூர்யாவை வைத்து படம் இயக்குவது உறுதியானது. தமிழ் சினிமாவில் இவர் படம் இயக்குவது இது முதல்முறை அல்ல. முன்னதாக நடிகர் தனுஷை வைத்து வாத்தி என்ற படத்தை இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் தனுஷ் நாயகனாக நடித்த இந்தப் படமும் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது. மேலும் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்த நிலையில் அவர் தேசிய விருதையும் பெற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது இயக்குநர் வெங்கி அட்லூரி நடிகர் சூர்யாவை வைத்து விஸ்வநாத் அண்ட் சன்ஸ் என்ற படத்தை இயக்கி இருப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்து உள்ளது.

வாத்தி மாதிரி விஸ்வநாத் & சன்ஸ் படத்தை எடுக்கவில்லை:

இந்த நிலையில் இயக்குநர் வெங்கி அட்லூரி சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் வாத்தி மற்றும் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்திற்கு இடையே உள்ள வித்யாசத்தை வெளிப்படையாக பேசியுள்ளார். அது தற்போது வைரலாகி வருகின்றது. அதில் வெங்கி அட்லூரி பேசியதாது, நாங்கள் ‘வாத்தி’ திரைப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் படமாக்கினோம்.

இருப்பினும், ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படம் தமிழில் மட்டுமே படமாக்கப்பட்டு, பின்னர் தெலுங்கில் டப் செய்யப்பட்டது. ஏனெனில் அந்த அணுகுமுறை படத்திற்கு மிகவும் பொருத்தமாக இருந்தது. நான் எப்போதுமே சூர்யா சாருடன் ஒரு தமிழ் படம் எடுக்க விரும்பினேன். ‘வாத்தி’ (சார்) மூலம், நாங்கள் ஒரு பரிசோதனை செய்ய விரும்பினோம், மேலும் ஓடிடி தளங்கள் மூலம் தெலுங்கில் தனுஷ் சாரின் ரசிகர் பட்டாளம் கணிசமாக வளர்ந்து வருவதையும் நாங்கள் கண்டோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… தனது கடைசி திரைப்படமான ஜனநாயகன் படத்தை அதிகாரிகளுடன் கண்டுகளித்த முதலமைச்சர் விஜய்..

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… ஒன் லாஸ்ட் டைம்… தளபதி விஜயின் ஜன நாயகன் படத்தின் ரிலீஸை கொண்டாடும் ரசிகர்கள்

Follow Us