AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

விறுவிறுப்பாக நடைபெறும் தனுஷின் ஓம் பட ஷூட்டிங்… வைரலாகும் தகவல்

Dhanush OM Movie Shooting Update Viral On Social Media | தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் அடுத்ததாக வெளியாக உள்ள படம் ஓம். இந்தப் படத்தின் ஷூட்டிங் அப்டேட் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

விறுவிறுப்பாக நடைபெறும் தனுஷின் ஓம் பட ஷூட்டிங்… வைரலாகும் தகவல்
ஓம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 21 Jul 2026 15:31 PM IST

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆன இவர் உலக அளவில் தனக்கு என்று ஒரு பெரிய ரசிகர்கள் பட்டாளம் உருவாக்கி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவரது நடிப்பில் எந்த மொழியில் படம் வெளியானாலும் அதனை உலக அளவில் தொடர்ந்து ரசிகர்கள் கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிசியான நாயகனாக வலம் வரும் நடிகர் தனுஷ் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் கர. இந்தப் படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து அடுத்ததாக தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாக உள்ள படம் ஓம்.

இந்த ஓம் தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக உள்ள இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி எழுதி இயக்கி வருகிறார். இவருக்கு சமீபத்தில் அமரன் படத்திற்காக தேசிய விருது அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தேசிய விருதைப் பெற்ற இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இந்தப் படத்தை இயக்கி வருவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.

விறுவிறுப்பாக நடைபெறும் தனுஷின் ஓம் பட ஷூட்டிங்:

இந்த நிலையில் ஓம் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் படப்பிடிப்பு தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகின்றது. அந்த வகையில் சமீபத்தில் வெளியான தகவலின்படி, படத்தின் படப்பிடிப்பு தற்போது மலேசியாவில் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. மேலும் மலேசியாவில் படப்பிடிப்பு நிறைவடைந்ததும், அடுத்த கட்டப் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கும். சென்னை படப்பிடிப்புக்கான அரங்குகள் அமைத்தல் மற்றும் பிற முன்-தயாரிப்புப் பணிகள் ஏற்கனவே நடைபெற்று வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Also Read… ஷாக்கான விஷயத்தை சொன்ன தொகுப்பாளினி பிரியங்கா.. சோகத்தில் ரசிகர்கள்!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… அந்த பிரபலத்திற்குதான் எனக்கு பிடித்த நடிகர்கள் பட்டியலில் முதலிடம் – நடிகை சிம்ரன் ஓபன் டாக்

Follow Us