தென்னிந்திய சினிமாவில் புது சாதனைப் படைத்தது யூத் பட பாடல் – வைரலாகும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் போஸ்ட்
Mutta Kalaki Music Video From Youth Movie | தமிழ் சினிமாவில் கென் கருணாஸ் இயக்கி நடித்த யூத் படத்தில் இருந்து வெளியான பாடல் முட்ட கலக்கி. இந்தப் பாடல் தென்னிந்திய சினிமாவில் அதிக பார்வைகளைப் பெற்ற பாடல் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு ஆண்டும் புதுப் புதுப் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருவது மட்டும் இன்றி அந்த்ப் படத்தில் வெளியாகும் பாடல்களும் தொடர்ந்து வைரலாகி வருகின்றது. அந்த வகையில் இந்த 2026-ம் ஆண்டில் கென் கருணாஸ் எழுதி இயக்கி நாயகனாக நடித்தப் படம் யூத். இந்தப் படத்தின் மூலமாக இவர் இயக்குந்ராக மட்டும் இன்றி நாயகனாகவும் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் கென் கருணாஸ் உடன் இணைந்து நடிகர்கள் பலர் தமிழ் சினிமாவில் நடிகர்களாக அறிமுகம் ஆகி இருந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது போல ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து கென் கருணாஸ் அடுத்தடுத்தப் படங்களில் நாயகனாக நடிக்க ஒப்பந்தம் ஆகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் கென் கருணாஸின் யூத் படம் தென்னிந்திய சினிமாவில் புதிய சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.




தென்னிந்திய சினிமாவில் புது சாதனைப் படைத்தது யூத் பட பாடல்:
இந்த நிலையில் இந்த யூத் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து இருந்தார். மேலும் யூத் படத்தில் வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதிலும் குறிப்பாக முட்ட கலக்கி பாடல் தமிழ் சினிமா ரசிகர்களிடையே மட்டும் இன்றி தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் பாடல் தற்போது 250 மில்லியன் பார்வைகளைப் பெற்று தென்னிந்திய சினிமாவில் 2026-ம் ஆண்டில் இதுவரை வெளியான படங்களில் அதிக பார்வைகளைப் பெற்ற பாடலாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் தனது எக்ஸ் தள பக்கத்தில் இது தொடர்பான பதிவை வெளியிட்டுள்ளார்.
Also Read… 72nd National Film Awards: அமரன் முதல் ராயன் வரை.. 72வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு லிஸ்ட்!
இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
It’s a 250 Million for #MuttaKalakki the highest viewed song for any feature film in 2026 India @KenKarunaas @gvpkwav @paarvathaaent https://t.co/qtEGLizL86
— G.V.Prakash Kumar (@gvprakash) July 19, 2026
Also Read… DC Movie: லோகேஷ் கனகராஜின் டிசி படத்தின் ‘பும் பா டிகா டிகா’ பாடல் வெளியீடு!