அர்ஜுன் தாஸ் திருமணம் தொடர்பாக வைரலான தகவல் – விளக்கம் கொடுத்த அர்ஜுன் தாஸ் தரப்பு
Actor Arjun Das Marriage Rumors: தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் அர்ஜுன் தாஸ். பேச்சுலராக வலம் வரும் இவருக்கு திருமணம் நடைபெற உள்ளதாக வெளியான வதந்திகளுக்கு அவரது தரப்பினர் விளக்கம் அளித்து சமூக வலைதளத்தில் பதிவுகளை வெளியிட்டு உள்ளனர்.
தமிழ் சினிமாவில் திருமணம் ஆகாமல் மோஸ்ட் எலிஜிபில் பேச்சுலர்கள் பலர் உள்ளனர். இவர்களுக்கு நிஜத்தில் திருமணம் நிச்சயம் நடைப்பெற்று திருமணம் ஆகிறதோ இல்லையோ தொடர்ந்து வதந்திகளில் பல முறை திருமணம் நடைப்பெற்றுவிடுகின்றது. அப்படி வரும் வதந்திகளுக்கு பலர் பதிலளிக்காமல் கடந்து சென்று விடுவார்கள் சிலர் தங்களது தரப்பில் இருந்து விளக்கம் அளிப்பார்கள். திருமணம் எதுவும் நடைபெறவில்லை என்று. இப்படி இருக்கும் சூழலில் விருது வழங்கும் விழா ஒன்றில் நடிகர் அர்ஜுன் தாஸிடம் உங்களுக்கு லவ் மேரேஜா இல்ல அரேஞ் மேரேஜா என்று நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கேள்வி கேட்ட போது நோ மேரேஜ் என்று கூறி வைரலானார் நடிகர் அர்ஜுன் தாஸ். அப்படி நோ மேரேஜ் என்று கூறிவருக்கு ரகசியமாக திருமணம் நிச்சயம் நடைபெற உள்ளது என்றும் பெண் யார் என்று எல்லாம் செய்திகள் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வந்தது.
தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆகி தற்போது தென்னிந்திய சினிமாவில் பிசியான நடிகராக வலம் வருகிறார் நடிகர் அர்ஜுன் தாஸ். இவரது நடிப்பில் அடுத்ததாக கான்சிட்டி படம் தமிழ் சினிமாவில் வெளியாக உள்ளது. இந்த படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வைரலாகி வரும் நிலையில் அர்ஜுன் தாஸின் திருமண தகவலும் வைரலாகி வந்தது.




திருமணம் எல்லாம் இல்லை என்று விளக்கம் அளித்த அர்ஜுன் தாஸ் தரப்பு:
தொடர்ந்து இந்த செய்தி இணையத்திலும் செய்திகளிலும் பரவி வந்த நிலையில் நடிகர் அர்ஜுன் தாஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி அர்ஜுன் தாஸின் பிஆர்வோ வெளியிட்ட எக்ஸ் தள பதிவில் கூறியதாவது, அனைவருக்கும் வணக்கம். நடிகர் அர்ஜுன் தாஸின் திருமணம் குறித்துப் பரவி வரும் வதந்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என்பதைத் தெளிவுபடுத்தவே இச்செய்தி. இத்தகைய செய்திகளை வெளியிடுவதற்கு முன், ஊடக நண்பர்கள் தயவுசெய்து எங்களைத் தொடர்புகொண்டு உண்மைகளைச் சரிபார்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தற்போது வைரலாகி வருகின்றது.
Also Read… விரைவில் வெளியாகும் சூர்யாவின் கருப்பு படத்தின் டெலீட்டட் சீன் – வைரலாகும் தகவல்
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
Dear all,
This to clarify that there is no truth in rumours doing the rounds on actor @iam_arjundas‘s wedding. Request friends from the media to please check with us and verify facts before putting out such news reports. pic.twitter.com/yKyQtAR9rU— Yuvraaj (@proyuvraaj) May 27, 2026
Also Read… அந்த இயக்குநருடன் பணியாற்றவேண்டும் என்று ஆசை வந்தது – அர்ஜுன்