RJ Balaji: கருப்பு 2 திரைப்படம் வரும்.. ஆனால் – ஆர்.ஜே.பாலாஜி கொடுத்த அப்டேட்!
RJ Balaji Confirms Karuppu 2: இயக்குநராகவும், நடிகராகவும் தென்னிந்திய மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் ஆர்.ஜே.பாலாஜி. இவர் கருப்பு திரைப்படத்தை இயக்கி வெற்றிக்கு கொடுத்துள்ளார். அந்த வகையில், சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கருப்பு 2 திரைப்படம் உருவாகும் என்றும், அப்படம் பற்றியும்ம் மனம் திறந்து பேசியுள்ளார்.
கோலிவுட் சினிமாவில் பிரபலமான இயக்குநர்களில் ஒருவராக இருந்துவருபவர் ஆர்.ஜே.பாலாஜி (RJ.Balaji). ஆரம்பத்தில் ரேடியோவில் ஆர்.ஜே-வாக (RJ) பணியாற்றிவந்த இவர், இயக்குநர் சுந்தர் சி (Sundar C) இயக்கத்தில் வெளியான தீயா வேல செய்யணும் குமாரு என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் நுழைந்தார். இப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர் தொடர்ந்து சில திரைப்படங்களில் துணை நடிகராகவும், நகைச்சுவை வேடங்களிலும் நடித்துவந்தார். பிறகு எல்கேஜி (LKG) என்ற படத்தில் நடிகராகவும் இயக்குநராகவும் பணியாற்றினார் . இதனிடையே முழுமையான இயக்குநராக பணியாற்றி மற்றும் நடித்த படம்தான் மூக்குத்தி அம்மன் (Mookuthi Amman). இப்படம் இவருக்கு வெற்றியை கொடுக்கவே வீட்டுல விஷேஷம் என்ற படத்தையும் இயக்கி ஹிட் கொடுத்திருந்தார்.
இந்த வரிசையில் சூர்யாவை (Suriya) வைத்து இவர் இயக்கியிருந்த 3வது படம்தான் கருப்பு (Karuppu). இப்படத்தில் சூர்யா கருப்பசாமியாக நடிக்க, ஆர்.ஜே.பாலாஜி வில்லனாக நடித்து அசத்தியிருந்தார். இப்படமானது திரையரங்குகளில் வெளியாகி தெறிக்கவிட்டுவருகிறது. இப்படத்தின் பாகம் 2 உருவாகும் என்றும், அது பற்றிய விவரங்களையும் அவர் தெரிவித்துள்ளார்.




இதையும் படிங்க: சூர்யா இருக்கார்…. விஜய் முதல்வரானதால் சினிமாவில் வெற்றிடமா? ஆர்ஜே பாலாஜி சொன்ன தகவல்
கருப்பு திரைப்படத்தின் பாகம் 2 உருவாகுவது குறித்து ஆர்.ஜே.பாலாஜி பேசிய விஷயம்:
சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில் பேசியிருந்த ஆர்.ஜே.பாலாஜி அதில், “எனக்கு கடவுளின் மீது அதிக நம்பிக்கை உண்டு. ஆரம்பத்தில் மக்களை நம்மைத்தபோது, நாங்கள் முதலில் நம்பினோம். கருப்பு திரைப்படம் நன்றாக இருக்கும் என்றும், மக்கள் இதை நிச்சயம் விரும்புவார்கள் என்றும் உறுதியாக நம்பினேன்.
இதையும் படிங்க: கருப்பு திரைப்பட அபார வெற்றி.. மதுரை பதினெட்டாம்படி கருப்பனுக்கு 18 அடி அருவாள் சாத்திய ஆர்.ஜே.பாலாஜி!
மேலும் ஒரு குழுவாக இப்படத்தின் மீது எங்களுக்கும் அதிக நம்பிக்கை இருந்தது. கருப்பு 2 படம் வரும். ஆனால் நான் இன்னும் இப்படத்திற்காக கதையை எழுத தொடங்கவில்லை “என்று அந்த சந்திப்பில் அவர் வெளிப்படையாக பேசியுள்ளார்.
கருப்பு பார்ட் 2 உருவாகுவது குறித்து ஆர்.ஜே.பாலாஜி பேசிய விஷயம் தொடர்பான பதிவு:
Dir #BJBalaji Recent 🎤
– I have a strong trust in God. From the very beginning, when people did not believe in us, we believed in ourselves first.
– I strongly believe this film will be good, and people will love it. As a team, we have great trust in this film.
– Yes,… pic.twitter.com/v5N2vqcUMr
— Movie Tamil (@_MovieTamil) May 24, 2026
கருப்பு திரைப்படமானது திரையரங்குகளில் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றுவரும் நிலையில், இதுவரை உலகமெங்கும் கிட்டத்தட்ட ரூ 250 கோடிகளுக்கு மேல் வசூலித்திருக்கும் என கூறப்படுகிறது. இப்படமானது தமிழகத்தில் மட்டுமே சூர்யாவிற்கு ரூ 100 கோடிக்கும் அதிகம் வசூல் கொடுத்து சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.