AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பேண்டஸி மேஜிக் கதையில்… ஃபஹத் பாசிலின் டோன்ட் ட்ரபுள் தி ட்ரபுள் பட டீசர் வெளியானது..!

Dont Trouble The Trouble Teaser: மலையாள சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்துவருபவர் ஃபஹத் பாசில். இவரின் நடிப்பிலும் , இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் தயாரிப்பிலும் உருவாகியுள்ள புது படம்தான் டோன்ட் ட்ரபுள் தி ட்ரபுள். தற்போது இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிடப்பட்டுள்ளது. தற்போது வெளியான இந்த டீசர் இணையத்தில் வைரலாகிவருகிறது.

பேண்டஸி மேஜிக் கதையில்… ஃபஹத் பாசிலின் டோன்ட் ட்ரபுள் தி ட்ரபுள் பட டீசர் வெளியானது..!
டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் திரைப்பட டீசர்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 13 Jul 2026 15:53 PM IST

தென்னிந்த்திய மக்கள் மத்தியில் பிரபலமான நடிகர்களில் ஒருவர்தான் ஃபஹத் பாசில் (Fahadh Faasil). இவரின் நடிப்பிலும், தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழி படங்களில் நடித்துவருகிறார். மலையாள சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான இவர், தற்போது மற்ற மொழி திரைப்படங்களிலும் கதாநாயகனாக நடித்துவருகிறார். இவர் தமிழில் சமீபத்தில் வெளியான இதயம் முரளி (Idhayam Murali) என்ற படத்தில் ஒரு முக்கியமான வேடத்தில் நடித்திருந்தார். இயக்குநரும் தயாரிப்பளாருமான ஆகாஷ் பாஸ்கரன் இயக்கியிருந்த நிலையில், அதர்வா (Atharvaa) ஹீரோவாக நடித்திருந்தார். 2026ம் ஆண்டு ஜூலை 10ம் தேதியில் இப்படமானது உலகமெங்கும் வெளியாகியிருந்த நிலையில், அதில் நகைச்சுவையான வேடத்தில் நடிகர் ஃபஹத் பாசில் நடித்திருந்தார்.

அந்த விதத்தில் தெலுங்கு சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் (S.S. Rajamouli) தயாரிப்பில், ஃபஹத் பாசில் நடித்திருந்த படம்தான் டோன்ட் ட்ரபுள் தி ட்ரபுள் (Don’t Trouble The Trouble). இதை தெலுங்கு இயக்குநர் ஷஷாங்க் யெலெட்டி (Shashank Yeleti) இயக்கியுள்ள நிலையில், இதன் டீசரை படக்குழு பகிர்ந்துள்ளது.

இதையும் படிங்க: அந்த இயக்குநருடன் நேரடி தமிழ் படம் பண்ணனும் – ஜூனியர் என்டிஆர் ஓபன் டாக்!

ஃபஹத் பாசிலின் டோன்ட் ட்ரபுள் தி ட்ரபுள் படத்தின் டீசர் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:

இந்த டோன்ட் ட்ரபுள் தி ட்ரபுள் படத்தின் டீசரில், ஃ பஹத் பாசில் மேஜிக் மேனாக நடித்துள்ளார். மேலும் அவருடன் சிறுமி ஒருவரும் இணைந்து நடித்துள்ளார். இதில் பஹத் பாசில் சூரி என்ற வேடத்தில் நடித்திருக்கிறார். சூரி மற்றும் தியா என அந்த இரு கதாபாத்திரத்தை மையமாக கொண்டுதான் இப்படம் உருவாகியுள்ளது. இப்படம் முழுக்க மேஜிக், காமடி மற்றும் எமோஷனல் போன்ற கதைக்களத்தில் உருவாகியுள்ளது. தற்போது இதன் டீசர் வெளியாகியுள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுவருகிறது.

ஃபஹத் பாசிலின் டோன்ட் ட்ரபுள் தி ட்ரபுள் பட ரிலீஸ் எப்போது:

நடிகர் ஃ பஹத் பாசில் தொடர்ந்து தென்னிந்திய மொழிகளில் படங்களில் நடித்துவருகிறார். புஷ்பா 1 மற்றும் 2 போன்ற படங்களில் வில்லன் வேடத்தில் நடித்து அசத்தியிருந்தார். இதனால் இவருக்கு தெலுங்கு சினிமாவில் நல்ல வரவேற்பு இருந்தது. அதையடுத்து அவர் ஹீரோவாக அறிமுகமாகியுள்ள படமாக டோன்ட் ட்ரபுள் தி ட்ரபுள் அமைந்துள்ளது.

இதையும் படிங்க: இளம் ராஜனாக கென் கருணாஸ்.. தொடங்கியது ராஜன் வகையறா பட ஷூட்டிங்?

இப்படமானது வரும் 2026ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதியில், தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழியாக்களில் உலகமெங்கும் வெளியாகிறது. இதே தேதியில்தான் விஜய் தேவரகொண்டாவின் ரணபாலி படமும் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us