Jana Nayagan: பண்டிகையை கொண்டாடுங்கடே… ஜன நாயகன் படத்திலிருந்து ரசிர்கர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்!
Jana Nayagan Movie Update: முதலமைச்சர் விஜய் கடைசி சினிமாவில் நடித்து வெளியாக காத்திருப்பதுதான் ஜன நாயகன். இப்படத்திற்கு சென்சார் கிடைத்துள்ள நிலையில், ரிலீஸ் தேதியும் உறுதியாகியுள்ளது. தற்போது இப்படத்திலிருந்து ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான விஷயம் ஒன்று வெளியாகவுள்ளது. அது என்ன என விவரமாகப் பார்க்கலாம்.
கோலிவுட்டில் முன்னாள் நடிகரும், தற்போது தமிழக முதல்வருமான பணியாற்றிவருபவர் தளபதி விஜய் (CM Vijay). இவர் சினிமாவிலிருந்து முழுமையாக விளக்கியுள்ள நிலையில், தற்போது அரசியலில் முதல்வராக மக்களுக்கான பணிகளை செய்துவருகிறார். இவர் சினிமாவில் இதுவரை மொத்தம் 69 திரைப்படங்களில் நடித்துள்ளார். அதில் 69வது திரைப்படமாக உருவாகியிருந்ததுதான் ஜன நாயகன் (Jana Nayagan). இந்த படத்தை இயக்குநர் எச். வினோத் (H Vinoth) இயக்க, கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனமானது தயாரித்துள்ளது. மேலும் ராக்ஸ்டார் அனிருத் இப்படத்தின் இசையமைப்பாளராக பணியாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் தளபதி விஜய், பூஜா ஹெக்டே (Pooja Hegde), மமிதா பைஜூ (Mamitha Baiju) உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களும் இணைந்து நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு கிட்டத்தட்ட 7 மாதங்களுக்கு பிறகு சென்சார் கிடைத்திருக்கும் நிலையில், ரிலீஸ் தேதியை நோக்கி தயாராகிவருகிறது. அந்த விதத்தில் தற்போது ரசிகர்களுக்கான புது சர்ப்ரைஸ் ஒன்று இப்படத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.




இதையும் படிங்க: போடுங்கடா பட்டாச..! ஜன நாயகன் பட ரிலீஸ் தேதியை உறுதி செய்த விநியோகஸ்தர நிறுவனம்!
ஜன நாயகன் பட ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்:
ஜன நாயகன் படம் 2026ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு, பின் சென்சார் பிரச்னையின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. ஜனவரி 4ம் தேதியில் ஜன நாயகன் பட ட்ரெய்லர் வெளியாகியிருந்தது. வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது.
இதையும் படிங்க: தனுஷின் தமிழ் முருகன் பட கதை இதுவா? இணையத்தில் வைரலாகும் தகவல்!
பின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், கிட்டத்தட்ட 7 மாதங்களுக்கு பிறகு மீண்டும் வெளியாக தயாராகிவருகிறது. அந்த விதத்தில் ஜன நாயகன் படத்திற்காக புது ட்ரெய்லர் ஒன்று வெளியாகவுள்ளதாம். தற்போது இது குறித்து ஜன நாயகன் பட விநியோகஸ்தர நிறுவனம் அஹிம்சா எண்டெர்டெயின்மெண்ட் வெளியிட்டுள்ளது.
ஜன நாயகன் பட புது ட்ரெய்லர் குறித்து விநியோகஸ்தர நிறுவனம் வெளியிட்ட அப்டேட்:
new trailer 😮💨😮💨😮💨🧨🧨🧨🧨🥵🥵
— Ahimsa Entertainment (@ahimsafilms) July 10, 2026
ஜன நாயகன் பட ரிலீஸ் எப்போது:
ஜன நாயகன் படத்திற்கும் தணிக்கை குழு “ஏ” தரச் சென்சார் சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி 18 வயதிற்கு மேற்பட்ட நபர்களே திரையரங்கு சென்று இப்படத்தை பார்க்கமுடியும். இப்படமானது சிறப்பாக ஆக்ஷன் மற்றும் அரசியல் கதைக்களத்தில் உருவாகியிருக்கும் நிலையில், 2026ம் ஆண்டு ஜூலை 24ம் தேதியில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாம். விநியோகஸ்தர ரிலீஸ் தேதியை அறிவித்த நிலையில், படக்குழு இன்னும் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் ஜன நாயகன் படக்குழு அப்டேட்டுகளை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.