Ken Karunaas: இளம் ராஜனாக கென் கருணாஸ்.. தொடங்கியது ராஜன் வகையறா பட ஷூட்டிங்?
Ken Karunaas in Vetrimaarans Arasan: கோலிவுட் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குநராக இருந்துவருபவர் வெற்றிமாறன். இவரின் இயக்கத்தில் அரசன் படமானது தற்போது உருவாகிவரும் நிலையில், அதை தொடர்ந்து ராஜன் வகையறா படத்தை இயக்குவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் கென் கருணாஸ் நடிப்பதாக கூறப்படும் நிலையில், இணையத்தில் புகைப்படம் வைரலாகிவருகிறது.
தமிழில் தற்போதும் இளம் நடிகராகவும், இயக்குநராகவும் பிரபலமானவர் கென் கருணாஸ் (Ken Karunaas). இவரின் இயக்கத்திலும், நடிப்பிலும் இறுதியாக வெளியான படம் யூத் (Youth). 2026ம் ஆண்டு மார்ச் மாதத்தில் வெளியான இப்படமானது ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தில் கென் கருணாஸ், அனிஷிமா அனில்குமார், மீனாட்சி மற்றும் சுராஜ் வெஞ்சாரமூடு போன்ற பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். இந்த படத்தின் வெற்றிக்கு பின் இயக்குநராகவும், நடிகராகவும் புது படத்திற்கான ப்ரீ புரொடக்ஷன்ஸ் பணிகளில் இருக்கிறார். மேலும் இவர் வெற்றிமாறனின் (Vetri Maaran) இயக்கத்தில் ராஜன் வகையறா (Rajan Vagaiyara) என்ற படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வைரலாகிவந்தது. தற்போது வெற்றிமாறன், சிலம்பரசனின் (Silambarasan) நடிப்பில் அரசன் (Arasan) படத்தை இயக்கிவருகிறார்.
இந்த படமானது வட சென்னை பட (Vada Chennai) டைம் லைன் கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுவருகிறது. அந்த விதத்தில், இப்படத்தில் வட சென்னை பட நடிகர்கள் பலரும் இணைந்து நடித்துவருகிறார்கள். அதில் இளம் வயது ராஜனாக கென் கருணாஸ் நடிப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது அது உறுதியாகும் வகையில் புகைப்படங்கள் வெளியாகியிருக்கிறது.




இதையும் படிங்க: ஆக்ஷன் திரில்லர் பாணியில்.. விஜய் சேதுபதியின் ட்ரெயின் பட டீசர் ரசிகர்கள் மத்தியில் வைரல்!
ராஜன் வகையறா படத்தின் ஷூட்டிங் தொடக்கமா:
வட சென்னை படத்தில் சிறப்பான கதாபாத்திரங்களில் ஒன்றாக இருந்தது ராஜன். இந்த வேடத்தில் நடிகரும், இயக்குநருமான அமீர் நடித்திருந்த நிலையில், சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. இந்த கதாபாத்திரமானதும் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகிவரும் அரசன் படத்திலும் நடிக்கிறார்.
இதையும் படிங்க: எனக்கான எல்லைகள்.. படக்குழுவிடம் எப்போதும் ஓபனாக பேசிவிடுவேன் – கயாடு லோஹர்!
இப்படத்தில் இளம் ராஜன் வேடத்தில், கென் கருணாஸ் நடித்துவருகிறார். மேலும் ராஜன் கதாபாத்திரத்தை மையமாக கொண்டு ஒரு படம் இயக்குவதாக கூறப்படுகிறதாம். ராஜன் வகையறா என்ற டைட்டிலில் இப்படமானது உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது. அரசன் படத்தில் கென் கருணாஸ் இளம் ராஜாங்க நடிக்கும் நிலையில், ராஜன் வகையறா படத்திலும் அவரே லீட் நடிகராக நடிப்பார் என கூறப்படுகிறது.
இணையத்தில் வைரலாகும் கென் கருணாஸ் புகைப்படங்கள் கொண்ட பதிவு:
#VadaChennai Universe#RajanVagaiyara Shooting in Progress. ⭐#KenKarunas pic.twitter.com/hDXyGwW4W3
— Movie Tamil (@_MovieTamil) July 13, 2026
ராஜன் வகையறா படத்தின் சில காட்சிகளுக்கான ஷூட்டிங், தற்போது நடைபெறுவதாக கூறப்படுகிறது. கடற்கரை மற்றும் கடற்கரை சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெறுகிறதாம். அரசன் படத்திலும் ராஜன் என்ற கதாபாத்திரம் இருக்கும் நிலையில், அதையடுத்து ராஜன் வகையறா படம் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது..