Kayadu Lohar: எனக்கான எல்லைகள்.. படக்குழுவிடம் எப்போதும் ஓபனாக பேசிவிடுவேன் – கயாடு லோஹர்!
Kayadu Lohar Sets Cinema Boundaries: தற்போது தென்னிந்திய சினிமாவில் இளம் கதாநாயகியாக பிரபலமாகி இருப்பவர் கயாடு லோஹர். இவரின் நடிப்பில் சமீபத்தில் இதயம் முரளி என்ற திரைப்படமானது வெளியாகியிருந்தது. அண்மையில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகை கயாடு லோஹர், சினிமாவில் தனக்கான எல்லைகளை வகுத்தது குறித்து பேசியிருக்கிறார்.
நடிகை கயாடு லோஹர் (Kayadu Lohar), தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகையாக இருந்துவருகிறார். தமிழில் பிரதீப் ரங்கநாதனின் டிராகன் (Dragon) என்ற படத்தின் மூலம் அறிமுகமான நிலையில், தற்போது அடுத்தடுத்த படங்களில் நடித்துவருகிறார். தெலுங்கு, தமிழ், மலையாளம் என தொடர்ந்து தென்னிந்திய மொழி சினிமாவில் இவருக்கு படங்கள் தயாராகியவருகிறது. தமிழில் டிராகன் படத்திற்கு பிறகு, இவரின் நடிப்பில் வெளியான திரைப்படம் இதயம் முரளி (Idhayam Murali). இந்த படத்தை இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்க, அதர்வா (Atharvaa) லீட் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படமானது கடந்த 2026ம் ஆண்டு ஜூலை 10ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகியிருந்தது. இந்த படத்தில் நடிகை கயாடு லோஹர் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்து அசத்தியுள்ளார். இந்த படத்திற்கு பின், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் உருவாகிவருகிறது.
அண்மையில் நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த நடிகை கயாடு லோஹர், அதில் சினிமாவில் தனக்கான எல்லைகளை வகுத்தது மற்றும் ஷூட்டிங்கில் வெளிப்படையாக பேசுவது பற்றிய தனது கருத்தை தெரிவித்திருக்கிறார்.




இதையும் படிங்க: கப் அடிப்போம்.. பந்தயத்தில் ஜெயிப்போம் – சேயோன் படம் குறித்து சிவகார்த்திகேயன் பேச்சு!
சினிமாவில் தனக்கான எல்லைகள் குறித்து மனம் திறந்து பேசிய நடிகை கயாடு லோஹர்:
நடிகை கயாடு லோஹர் பேசுகையில், “நான் எப்போதும் படப்பிடிப்புகளில் எனக்கு உடன்பாடில்லாத ஆடைகள் அல்லது காட்சிகள் இருந்தால்,படக்குழுவினர் அல்லது இயக்குநரிடம் வெளிப்படையாக பேசிவிடுவேன். ஒவ்வொரு நடிகருக்கும், தனிப்பட்ட எல்லைகள் உள்ளன. அவை கட்டாயமாக மதிக்கப்பட வேண்டும்.
இதையும் படிங்க: புராண காவியம்.. ரன்பீர் கபூர் – சாய் பல்லவியின் ராமாயணா ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது?
எப்போது திறந்த உரையாடலே பாதுகாப்பானது. மற்றும் நம்பிக்கையான பணிச் சொல்லலை உருவாக்குகிறது. நம்முடைய எல்லைகளை உறுதியாக இருப்பதும், நம்முடைய கவலைகளை தெரிவிப்பதும் மிகவும் முக்கியம்” என அதில் அவர் கூறியிருந்தார்.
நடிகை கயாடு லோஹரின் இன்ஸ்டாகிராம் போட்டோஷூட் பதிவு:
View this post on Instagram
நடிகை கயாடு லோஹர் நடிக்கும் புதுப் படங்கள்:
இவர் தற்போது தென்னிந்திய மொழிகளில் புது படங்களில் நடித்துவருகிறார். துல்கர் சல்மான் முதல் சூர்யா போன்ற பிரபலங்களுடன் புது படங்களில் நடித்துவருகிறார். இவரின் நடிப்பில் சூர்யா48, ஐஆம் கேம், நானியின் தி பாரடைஸ், தாரம், மாரி செல்வராஜ் இயக்கத்தில் மஞ்சணத்தி, மற்றும் ஜி.வி.பிரகாஷின் நடிப்பில் இம்மார்ட்டல் போன்ற படங்களில் நாயகியாக நடித்துவருகிறார். இந்த படங்கள் அனைத்தும் ஒன்றின் பின் ஒன்றாக வெளியாக காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.