AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“அன்புமணி உள்ளே, திருமா வெளியே?”.. எங்களை தனிமைப்படுத்த பார்க்கிறார்கள்.. திருமாவளவன் பரபரப்பு பேச்சு!!

"எனக்கு எம்.எல்.ஏ ஆகி சட்டமன்றத்திற்குப் போய் 5 ஆண்டுகள் மக்களுக்காகப் பேச வேண்டும் என்ற கனவும் ஆசையும் இருந்தது. அதற்காகக் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிட என் பெயரை நானே அறிவித்தேன். ஆனால், கூட்டணித் தலைவர் (திமுக) என்னை வற்புறுத்தவில்லை; 'நீங்க ஒரு கட்சித் தலைவர், உங்களுக்கே தெரியும், ரீகன்சிடர் (மறுபரிசீலனை) பண்ணுங்க' என்று ஒரே ஒரு வார்த்தைதான் சொன்னார்.

“அன்புமணி உள்ளே, திருமா வெளியே?”.. எங்களை தனிமைப்படுத்த பார்க்கிறார்கள்.. திருமாவளவன் பரபரப்பு பேச்சு!!
திருமாவளவன்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 12 Jul 2026 11:56 AM IST

தி.மலை, ஜூலை 12: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மண்டல செயற்குழுக் கூட்டம் திருவண்ணாமலையில் நேற்று (ஜூலை 11) நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், தங்களை திமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு எதிராக நிறுத்தச் சில சக்திகள் முயல்வதாகவும், கூட்டணி வதந்திகளைப் பரப்புவதாகவும் மிகக் கடுமையான பதிலடியைக் கொடுத்துள்ளார். அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள அவரது உரையின் முக்கிய விவரங்கள் குறித்து இக்கட்டுரையில் காணலாம்.

இதையும் படிக்க: சட்டசபையில் ஓட்டம் பிடித்தது யார்?.. “எங்க அப்பா பீரோக்குள்ள இல்ல!”.. கரூரில் திமுகவை வெளுத்து வாங்கிய முதல்வர் விஜய்!!

திருமாவளவனை அரசியலில் இருந்து வீழ்த்த முடியாது:

தங்கள் கட்சி குறித்துச் சமூக வலைத்தளங்களிலும், அரசியல் மேடைகளிலும் திட்டமிட்டுப் பரப்பப்படும் வதந்திகள் குறித்துப் பேசிய திருமாவளவன், “விடுதலைச் சிறுத்தைகளை திமுக-விற்கு எதிராகவும், தமிழக வெற்றிக் கழகத்திற்கு எதிராகவும் நிறுத்தச் சிலர் பார்க்கிறார்கள். ‘அன்புமணி ராமதாஸ் உள்ளே வரப்போகிறார், திருமாவளவன் கூட்டணியை விட்டு வெளியே போகப்போகிறார்’ என்று பேசுகிறார்கள். இதை நான் ஆணவத்தோடு சொல்லவில்லை, என் மீது நம்பிக்கை வைத்துள்ள உங்களை (தொண்டர்களை) நம்பிச் சொல்கிறேன். திருமாவளவனை எந்தச் சக்தியாலும் அரசியலில் இருந்து வெளியேற்றவோ, வீழ்த்தவோ முடியாது” என்று முழங்கினார்.

கூட்டணிக்குள்ளும் கட்சிக்குள்ளும் குழப்பத்தை ஏற்படுத்தவே இத்தகைய பிரசாரங்கள் செய்யப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், தன்னோடு பயணிக்கும் தோழர்கள் தன்னை முழுமையாகப் புரிந்து வைத்துள்ளதால் இந்த விமர்சனங்கள் விசிக-வை பலவீனப்படுத்தாது என்றார்.

சட்டமன்றக் கனவை விட்டுக் கொடுத்த பின்னணி:

கடந்த சட்டமன்றத் தேர்தலில் தான் போட்டியிட ஆசைப்பட்டதை வெளிப்படையாக ஒப்புக்கொண்ட திருமாவளவன், “எனக்கு எம்.எல்.ஏ ஆகி சட்டமன்றத்திற்குப் போய் 5 ஆண்டுகள் மக்களுக்காகப் பேச வேண்டும் என்ற கனவும் ஆசையும் இருந்தது. அதற்காகக் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிட என் பெயரை நானே அறிவித்தேன். ஆனால், கூட்டணித் தலைவர் (திமுக) என்னை வற்புறுத்தவில்லை; ‘நீங்க ஒரு கட்சித் தலைவர், உங்களுக்கே தெரியும், ரீகன்சிடர் (மறுபரிசீலனை) பண்ணுங்க’ என்று ஒரே ஒரு வார்த்தைதான் சொன்னார். கூட்டணியின் நலன் முக்கியம், கூட்டணித் தலைவரின் உள்ளம் நோகக்கூடாது என்பதற்காக என் ஆசையை நான் பின்னுக்குத் தள்ளிவிட்டு, தமிழகம் முழுக்கத் தேர்தல் பிரசாரத்திற்குப் புறப்பட்டேன். அப்படிப்பட்ட விசிக-வை இன்றைக்குத் தனிமைப்படுத்தப் பார்க்கிறார்கள்” என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

இதையும் படிக்க : அமித்ஷா எனக்கு போன் செய்தார், ஏன் தெரியுமா?”.. அனல் பறக்கும் அரசியலுக்கு நடுவே திருமாவளவன் ஓப்பன் டாக்!!

உளுந்தூர்ப்பேட்டை ‘தமிழ் தேசிய எழுச்சி மாநாடு’:

விசிக யார் என்பதைத் தமிழக அரசியலில் மீண்டும் ஒருமுறை நிரூபிப்பதற்கான களமாக வரவிருக்கும் ‘தமிழ் தேசிய எழுச்சி மாநாடு’ அமையும் என்று திருமாவளவன் பிரகடனப்படுத்தினார். வருகிற ஆகஸ்ட் 17-ஆம் தேதி உளுந்தூர்ப்பேட்டையில் நடைபெறவிருக்கும் இந்த மாநாட்டிற்காக இன்றிரவு முதலே தொண்டர்கள் கிராமம் கிராமமாகச் சென்று விளம்பரப் பணிகளைத் தொடங்க வேண்டும் என்றும், சுவரொட்டிகள், துண்டுப் பிரசுரங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலமாக மாநாட்டு முழக்கங்களைப் பரப்ப வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.

Follow Us