சட்டசபையில் ஓட்டம் பிடித்தது யார்?.. “எங்க அப்பா பீரோக்குள்ள இல்ல!”.. கரூரில் திமுகவை வெளுத்து வாங்கிய முதல்வர் விஜய்!!
சட்டசபையில் 'பார்ட்டி ஃபண்ட்' விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் ஓட்டம் பிடித்ததை கிண்டல் செய்தவர், சென்னைப் பாலம் டெண்டர் ஊழல் ரத்து, லஞ்ச ஒழிப்பு சாதனைகள், எல்&டி நிறுவனத்தின் ரூ.18,600 கோடி முதலீடு மற்றும் பெண்களுக்கு 'தாய்மாமன் தங்க மோதிர திட்டம்' உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
கரூர், ஜூலை 10: கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டத்தில், தமிழக முதலமைச்சர் விஜய் அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது எதிர்க்கட்சிகளின் ஊழல்கள், தங்களது ஆட்சியின் சாதனைகள் மற்றும் புதிய நலத்திட்டங்கள் குறித்து அவர் உணர்ச்சிப்பூர்வமாகப் பேசினார். அவரது உரையின் முக்கிய விவரங்கள் அடங்கிய செய்தித் தொகுப்பு இதோ, சட்டசபையில் தாம் ‘பார்ட்டி ஃபண்ட்’ என்ற சொல்லைப் பயன்படுத்திய உடனே எதிர்க்கட்சியினர் பதற்றமடைந்து வெளிநடப்பு செய்ததைக் குறிப்பிட்டுப் பேசியுள்ளார்.
இதையும் படிக்க: “என் வாழ்நாளில் மறக்க முடியாத ஆறாத வடு கரூர் சம்பவம்!”.. முதல்வர் விஜய் ஆவேச பேச்சு!!
“குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்”:
. @TVKVijayHQ : சட்டசபையில் பார்ட்டி பண்டுனு தான் சொன்னேன்.. எடுத்தாங்க பாருங்க ஒரு ஓட்டம்.. 🔥🤣🤣
எங்க அப்பா பீரோக்குள்ள இல்ல..
இவங்களோட செம கூத்தா இருக்குதுங்க…. செம ஃபன்னா இருக்குது.. 😂😂😂 pic.twitter.com/wsPwSL3GIP— Prakash Vijay (@PrakazVijay_Of) July 10, 2026
“யார் பெயர், எந்தக் கட்சி என்று நான் எதையுமே குறிப்பிடவில்லை. ஆனால் ‘பார்ட்டி ஃபண்ட்’ என்று சொன்னவுடனே ஓட்டம் பிடித்தார்கள். ‘எங்க அப்பா பீரோவுக்குள்ள இல்லை’ என்று பழமொழிக்கு ஏற்ப, குற்றமுள்ள நெஞ்சு தான் குறுகுறுக்கும்” என்று கிண்டலாகக் குறிப்பிட்டார். மேலும், தமிழ்நாட்டை மாற்றி மாற்றி ஆண்ட இரு கட்சிகளையும் “தீய சக்தி, தீந்துபோன சக்தி” என்று கடுமையாகச் சாடினார்.
சென்னைப் பாலம் டெண்டர் முறைகேடு கண்டுபிடிப்பு:
சென்னையில் ஒரு மேம்பாலம் கட்டுவதற்காக, வழக்கமான செலவை விட இரண்டு மடங்கு அதிக மதிப்பில் முந்தைய ஆட்சியில் விடப்பட்ட டெண்டரைத் தோண்டி எடுத்து, தற்போதைய அரசு அதனைக் ரத்து செய்துள்ளதாக முதலமைச்சர் தெரிவித்தார். “இன்னும் தோண்டத் தோண்ட எத்தனை கோடி ஊழல்கள் வெளிவருமோ தெரியவில்லை; ஒவ்வொரு முகமூடியாகக் கிழிந்து வருவதால் அவர்கள் கதறுகிறார்கள்” என்றும் அவர் கூறினார்.
55 நாள் சாதனைகள் மற்றும் லஞ்ச ஒழிப்பு:
தங்களது 50 முதல் 55 நாட்கால ஆட்சியில் நிகழ்த்தப்பட்ட மாற்றங்களைப் பட்டியலிட்ட அவர், மின்சாரத் துறையில் நீண்ட நாட்களாகத் தேங்கிக் கிடந்த பதவி உயர்வுகளைத் தற்போதைய அரசு வழங்கியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
“லஞ்சம் மற்றும் ஊழலை ஒழிக்கவே முடியாது, அது ரத்தத்திலேயே ஊறிப்போயுள்ளது என்று கூறியவர்களின் வாயை அடைக்கும் விதமாக, இன்று அரசு அலுவலகங்களில் ஒரு பைசா லஞ்சமோ, ஊழலோ இல்லாமல் வேலைகள் மிக வேகமாக (டக்கு டக்குன்னு) நடக்கின்றன” என்றார். மேலும், தற்போதைய ஆட்சியில் அரசு அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்களுக்கு உரிய மரியாதையும், தகுந்த இருக்கையும் வழங்கி அதிகாரிகள் நடத்துவதாக முதியவர் ஒருவர் பாராட்டியதையும் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார்.
தொழில் முதலீடு மற்றும் விவசாயிகள் நலன்:
எல் அண்ட் டி (L&T) நிறுவனத்துடன் ரூ.18,600 கோடி மதிப்பில் மூன்று முக்கிய திட்டங்களுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இதன் மூலம் குறிப்பிட்ட அந்த மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 8,200 பேருக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. குறுவை சாகுபடிக்காக ரூ.134 கோடி மதிப்பில் சிறப்புத் தொகுப்புத் திட்டம் விவசாயிகளுக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. “விவசாயப் பெருமக்களே, உங்களது இந்த அரசு எப்போதும் உங்களுடனே நிற்கும்” என உறுதியளித்தார்.
‘தாய்மாமன் தங்க மோதிர திட்டம்’:
பெண்களின் பாதுகாப்புக்காக ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளதை நினைவு கூர்ந்த முதலமைச்சர், வரப்போகும் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழகப் பெண்களுக்கு உதவிடும் வகையில் “தாய்மாமன் தங்க மோதிர திட்டம்” அதிகாரப்பூர்வமாகத் தங்களது அரசால் அறிவிக்கப்பட்டுச் செயல்படுத்தப்படும் என்ற முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.
இதையும் படிக்க: கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு பணி வழங்கத் தடையில்லை.. உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!
“தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றினீர்களா எனக் கேட்பவர்களுக்கு, நாங்கள் மற்றவர்களைப் போலப் போலி தாய்மாமன்கள் கிடையாது, உண்மையான தாய்மாமனாக இருந்து கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம்” என்று கூறினார்.