Kayadu Lohar: நான் முதல் முதலில் சென்னைக்கு வந்த காரணமே அதுதான் – உண்மையை உடைத்த கயாடு லோஹர்!
Kayadu Lohar About Tamil Debut: தென்னிந்திய சினிமாவில் இளம் நடிகையாக தொடர்ந்து திரைப்படங்களில் நடித்துவருபவர் கயாடு லோஹர். இவர் அதர்வாவுக்கு ஜோடியாக இதயம் முரளி என்ற படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இவர், தான் முதல் முதலில் சென்னைக்கு வருவதற்கான காரணம் பற்றி தெரிவித்துள்ளார். அதுகுறித்து விவரமாக பார்க்கலாம்.
கோலிவுட் சினிமாவில் கடந்த 2025ம் ஆண்டில் வெளியான டிராகன் (Dragon) என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக நுழைந்தவர் கயாடு லோஹர் (Kayadu Lohar). இவர் இதற்கு முன் தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தற்போது இவர் தமிழ் மற்றும் மலையாளம் போன்ற மொழி படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டிவருகிறார். அந்த வகையில் இவரின் நடிப்பில் தமிழில் வெளியீட்டிற்கு தயாராகியுள்ள திரைப்படம்தான் இதயம் முரளி (Idhayam Murali). இதை தயாரிப்பாளரும், இயக்குநருமான ஆகாஷ் பாஸ்கரன் இயக்க, தமன் எஸ் (Thaman S) இசையமைத்துள்ளார். இதில் அதர்வா ஹீரோவாக நடிக்க அவருடன், கயாடு லோஹர் மற்றும் ப்ரீத்தி முகுந்தன் (Preity Mukudhan) ஜோடியாக நடித்துள்ளனர்.
இப்படமானது வரும் 2026ம் ஆண்டு ஜூலை 10ம் தேதியில் வெளியாகிறது. இதன் ப்ரோமோஷன் தொடர்பாக அண்மையில் நேர்காணல் ஒன்றில் பேசிய கயாடு லோஹர், தான் முதல் முதலில் சென்னை பற்றி கூறியிருக்கிறார். மேலும் இதயம் முரளி திரைப்படம் பற்றிய தகவலையும் தெரிவித்திருக்கிறார்.




இதையும் படிங்க: நூறு சாமி பட கதையை சசி சார் சொல்லும்போதே அழுதுட்டேன் – விஜய் ஆண்டனி பேச்சு!
நேர்காணலில் நடிகை கயாடு லோஹர் பேசிய விஷயம்:
அதில் கயாடு லோஹர் பேசுகையில், “நான் சொன்னால் ஆச்சிரியமாக இருக்கும், நான் முதல் முதலில் சென்னைக்கு வந்ததன் காரணம் இதயம் முரளி படம்தான். இந்த படத்தில் நடிப்பதற்காக கிட்டத்தட்ட 3 & 4 வருடத்திற்கு முன்பே கையெழுத்திட்டேன். நான் மிகவும் ஆர்வமாக இருக்கிறேன்.
இதையும் படிங்க: இவ்வளவு நெருக்கமான சொந்தமா? அனிருத்துக்கு ஒய்.ஜி.மகேந்திரன் எப்படி உறவுக்காரர் தெரியுமா?
இந்த படத்தின் டீம், நடிகர்கள், மேலும் இதுதான் எனது முதல் தமிழ் படம் என்ற நிலையில், இதன் மீது ஆர்வம் அதிகமாக இருந்தது. மேலும் இப்படத்தின் கதையை கேட்டேன், மிகவும் நன்றாக இருந்தது உடனே இப்படத்தில் நடிக்கலாம் என ஒப்புக்கொண்டேன்” என்று அதில் அவர் கூறியிருக்கிறார்.
இதயம் முரளி திரைப்படம் குறித்து படக்குழு வெளியிட்ட பதிவு:
A ride through love begins in theatres this July💌#IdhayamMurali on the big screens from JULY 10, worldwide ♥️
A film by @AakashBaskaran@Atharvaamurali @MusicThaman @AakashBaskaran @natty_nataraj @PreityMukundan @JustNiharikaNm @11Lohar @manojdft @Dop_Sai @RakshanVJ… pic.twitter.com/pRcewFRpFk
— DawnPictures (@DawnPicturesOff) May 26, 2026
இந்த படத்தில் அதர்வா,கயாடு லோஹர், ப்ரீத்தி முகுந்தன், எஸ் தமன், ரக்ஷன் உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படமானது சிறப்பாக தயாராகியுள்ள நிலையில், படத்திலிருந்து இதுவரை மொத்தம் 3 பாடல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இப்படமானது வரும் 2026ம் ஆண்டு ஜூலை 10ம் தேதியில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ட்ரெய்லர் குறித்த அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.