இதயம் முரளி பட டப்பிங் பணியை நிறைவு செய்த ஃபஹத் ஃபாசில் – படக்குழு வெளிட்ட வீடியோ!
Fahadh Faasil Completes Idhayam Murali Dubbing: மலையாளம் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக இருப்பவர் ஃபஹத் ஃபாசில். இவர் தமிழில் இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில், அதர்வாவுடன் இணைந்து நடித்துள்ள படம் இதயம் முரளி. இப்படத்தின் டப்பிங் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், தனது டப்பிங் பணியை ஃபஹத் ஃபாசில் நிறைவு செய்துள்ளார்.
தென்னிந்திய மக்கள் மத்தியில் தனது நடிப்பின் மூலம் ஈர்க்கப்பட்டுவரும் நாயகனாக இருந்துவருபவர் ஃபஹத் ஃபாசில் (Fahadh Faasil). மலையாளம் சினிமாவின் மூலம் ஹீரோவாக அறிமுகமான இவர், தற்போது தொடர்ந்து தென்னிந்திய மொழிகளில் படங்களில் நடித்துவருகிறார். இவர் தெலுங்கில் புஷ்பா 1 மற்றும் 2 (Pushpa 1&2) படத்தில் நடித்து சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தார். இந்த வரிசையில் தமிழில் இவர் இறுதியாக நடித்திருந்த படம் மாரீசன். இதில் வடிவேலு மற்றும் ஃபஹத் ஃபாசில் இணைந்து நடித்திருந்த நிலையில், கடந்த 2025ம் ஆண்டில் வெளியானது. இதில் ஃபஹத் ஃபாசில் ஒரு திருடனாக நடித்திருந்தார். இப்படத்திற்கு பின் இவர் தமிழில் நடித்துள்ள புது படம் இதயம் முரளி (Idhayam Murali). நடிகர் அதர்வா (Athrvaa) நாயகனாக நடித்துள்ள இப்படத்தில், சிறப்பு வேடத்தில் ஃபஹத் ஃபாசில் நடித்துள்ளார்.
இதை இயக்குநரும், தயாரிப்பாளருமான ஆகாஷ் பாஸ்கரன் (Aakash Baskaran) உருவாக்கியுள்ள நிலையில், இதன் டப்பிங் பணிகள் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், தனது கதாபாத்திரத்திற்கான டப்பிங் பணியை நடிகர் ஃபஹத் ஃபாசில் நிறைவு செய்துள்ளார். இது குறித்த வீடியோவை படக்குழு பகிர்ந்துள்ளது.




இதையும் படிங்க: மீண்டும் வந்தது SMS காம்போ.. ஜீவாவின் ஜாலியா இருந்த ஒருத்தன் பட டீசர் வெளியானது!
ஃபஹத் ஃபாசில் டப்பிங் நிறைவு செய்தது குறித்து இதயம் முரளி படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:
The big man is in the house ❤️
The one and only #FahadhFaasil completes his dubbing for #IdhayamMurali.
In theatres worldwide on July 10🗓️@Atharvaamurali @MusicThaman @AakashBaskaran #FahadhFaasil @natty_nataraj @PreityMukundan @JustNiharikaNm @11Lohar @manojdft @Dop_Sai pic.twitter.com/6pEpu4XqGF
— DawnPictures (@DawnPicturesOff) June 21, 2026
நடிகர் அதர்வா நாயகனாக நடித்துள்ள படம் இதயம் முரளி. இதை தயாரிப்பாளரும், அறிமுக இயக்குநருமான ஆகாஷ் பாஸ்கரன் இயக்கியுள்ளார். இதை அவரின் தயாரிப்பு நிறுவனமான டான் பிக்ச்சர்ஸ் நிறுவனமே தயாரித்துள்ளது. இதில் அதர்வாவுடன் எஸ். தமன், கயாடு லோஹர், ப்ரீத்தி முகுந்தன், ரக்ஷன் மற்றும் ஃபஹத் ஃபாசில் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திர நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். இப்படமானது ரெட்டை காதல் கதையை மையமாக கொண்டு இயக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: என்னப்பா ரெடியா?.. யாஷின் அதிரடி கேங்ஸ்டர் படமான ‘டாக்ஸிக்’ புது ரிலீஸ் தேதி அறிவிப்பு!
பள்ளிப்பருவ காதல் மற்றும் கல்லூரி பருவ காதல் என இரு காதலையும் மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாம். இப்படத்தின் மூலம் இசையமைப்பாளர் தமன் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு பின் சினிமாவில் நடிக்கிறார். மேலும் இப்படத்தின் இசையமைப்பாளரும் அவர்தான். இப்படத்தின் அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியாகிவரும் நிலையில், இப்படமானது வரும் 2026ம் ஜூலை 10ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது. சில நாட்களே உள்ள நிலையில், படத்தின் மீது எதிர்பார்ப்புகள் அதிகமாகிவருகிறது.