AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

JIO Movie: மீண்டும் வந்தது SMS காம்போ.. ஜீவாவின் ஜாலியா இருந்த ஒருத்தன் பட டீசர் வெளியானது!

Jolliya Iruntha Oruthan Teaser: கோலிவுட் மக்கள் மத்தியில் கிட்டத்தட்ட 15 ஆண்டுக்கும் மேலாக பிரபல நாயகனாக இருந்துவருபவர் ஜீவா. இவரின் நடிப்பிலும் சிவா மனசுல சக்தி பட இயக்குநர் ராஜேஷ் கூட்டணியில் உருவாகியுள்ள புது படம்தான் ஜாலியா இருந்த ஒருத்தன். இப்படமானது சிறப்பாக தயாராகியிருக்கும் நிலையில், தற்போது இதன் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

JIO Movie: மீண்டும் வந்தது SMS காம்போ.. ஜீவாவின் ஜாலியா இருந்த ஒருத்தன் பட டீசர் வெளியானது!
ஜாலியா இருந்த ஒருத்தன் டீசர்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 21 Jun 2026 12:15 PM IST

நடிகர் ஜீவா (Jiiva) மற்றும் சிவா மனசுல சக்தி (Siva Manasula Sakthi) பட புகழ்பெற்ற இயக்குநர் எம்.ராஜேஷ் (Director M Rajesh) கூட்டணியில் புதிதாக உருவாகியுள்ள திரைப்படம்தான் ஜாலியா இருந்த ஒருத்தன் (Jolliya Iruntha Oruthan). இப்படமானது கடந்த 2025ம் ஆண்டு இறுதியில் ஷூட்டிங் பூஜைகளுடன் தொடங்கியுள்ள நிலையில், காமெடி மற்றும் எமோஷனல் காதல் கதைக்களத்துடன் தயாராகிவந்தது. இதில் இயக்குநர் எம் ராஜேஷ் இயக்க, மாலிக் ஸ்ட்ரீம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் ஜீவா நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக லவ் டுடே படத்தின் மூலம் பிரபலமான நடிகை இவனா (Ivana) நாயகியாக நடித்துள்ளார். இவர்கள் ஜோடியானது இப்படத்தின் மூலமாக முதல் முறையாக இணைகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படமானது நட்பு, காதல் மற்றும் காமடி போன்ற கதைக்களத்தில் தயாராகியுள்ள நிலையில், படத்தின் மீது ரசிகர்களுக்கு ஆர்வம் அதிகரித்துள்ளது.

சமீபத்தில் இப்படத்தின் முதல் பார்வை வெளியாகியிருந்த நிலையில், சிறப்பான வரவேற்பை கொடுத்தது. அந்த வகையில் இன்று 2026ம் ஆண்டு ஜூன் 21ம் தேதியில் இதன் முதல் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. தற்போது வெளியான இந்த டீசர் இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: லவ், ட்ராமா, ஆக்‌ஷன், த்ரில்லர் – வெளியானது அர்ஜுன் தாஸின் கான் சிட்டி பட ட்ரெய்லர்

ஜீவா மற்றும் இவனா நடித்திருந்த ஜாலியா இருந்த ஒருத்தன் படத்தின் டீசர் குறித்து படக்குழு வெளியிட்ட பதிவு:

ஜாலியா இருந்த ஒருத்தன் பட டீசர் எப்படி இருக்கு:

இந்த டீசரானது முழுக்க முழுக்க நகைச்சுவையில் அமைந்துள்ளது. சிவா மனசுல சக்தி படத்தில் சந்தனம் ஜீவா காம்போ போலவே, ஜாலியா இருந்த ஒருத்தன் படத்தில் பரிதபங்கள் சுதாகர் மற்றும் ஜீவா இருவரின் காம்போ அமைந்துள்ளது. இதில் நடிகை இவானாவின் கதாபாத்திரமும் சிறப்பாக இருக்கும். இந்த டீசரில் முதல்வர் விஜய்யின் பல ரெபெரென்ஸ் இருக்கிறது. இதனால் இதற்கு அதிக வரவேற்பு இருக்கிறது. மேலும் அவரின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படக்குழு அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்தையும் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: லவ் டுடே பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்தே சிம்பு கணிச்சிட்டாரு – பிரதீப் ரங்கநாதன் சொன்ன சுவாரஸ்ய தகவல்!

நடிகர் ஜீவாவின் நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம்தான் ஜாலியா இருந்த ஒருத்தன். இப்படத்தில் பரிதாபங்கள் சுதாகர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும் படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படமானது சிறப்பாக தயாராகியிருக்கும் நிலையில், இன்னும் இதன் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இப்படமானது வரும் 2026ம் ஆண்டு இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us