ஆர்.ஜே.பாலாஜி பர்த்டே ஸ்பெஷல் வீடியோ வெளியிட்ட கருப்பு படக்குழு
RJ Balaji Birthday Special Video : தமிழ் சினிமாவில் தற்போது அதிகம் பேசப்பட்டு வரும் பிரபலமாக உள்ளவர் ஆர்.ஜே.பாலாஜி. இவரது பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு சிறப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டு வாழ்த்துகளை பதிவு செய்துள்ளது. அது தற்போது வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடிப்பதன் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்து தற்போது முன்னணி இயக்குநராகவும் நடிகராகவும் வலம் வருகிறார் ஆர்.ஜே.பாலாஜி. அதன்படி தமிழ் சினிமாவில் தற்போது அதிக வசூல் செய்த இயக்குநராக 2026-ம் ஆண்டில் தற்போது சாதனைப் படைத்துள்ளார். தொடர்ந்து தான் நடிக்கும் படங்களை இயக்கி வந்த இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி மிகப் பெரிய பட்ஜெட்டில் தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக உள்ள நடிகர் சூர்யாவை வைத்து படம் இயக்கினார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் மிகப் பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் கடந்த மே மாதம் திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படம் எதிர்பார்த்தைவிட அதிக அளவில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூலிலும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது இந்த கருப்பு படம்.
கருப்பு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சூர்யா படக்குழுவிருக்கு பரிசாக கார் வாங்கி கொடுத்தார். அதில் இயக்குநராக பணியாற்றிய ஆர்.ஜே.பாலாஜிக்கு ஒரு ஹை எண்டட் காரை பரிசளித்தது மட்டும் இன்றி அவரை வைத்து கார் ட்ரைவ் செய்த வீடியோவையும் ஆர்.ஜே.பாலாஜி வெளியிட்டு மகிழ்ச்சி அளித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.




ஆர்.ஜே.பாலாஜி பர்த்டே ஸ்பெஷல் வீடியோ வெளியிட்ட கருப்பு படக்குழு:
இந்தப் படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்றது போல தற்போது ஓடிடியில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் கருப்பு படத்தின் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகின்றார். அந்த பிறந்த நாள் ஸ்பெஷலாக கருப்பு படக்குழு தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ள நிலையில் ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.
Also Read… ஓ திவ்யா ஓ திவ்யா நீ நடமாடும் நைல் நதியா… 17 ஆண்டுகளைக் கடந்தது நகுல் – சுனைனாவின் மாசிலாமணி படம்
கருப்பு படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Wishing our blockbuster director @RJ_Balaji, a blasting birthday ❤️
With Love, from the entire team of #Karuppu 🔥 pic.twitter.com/OiX1VBUdCv
— DreamWarriorPictures (@DreamWarriorpic) June 20, 2026
Also Read… என்ன பெத்த மகளே மகராசி.. கட்டா குஸ்தி 2 படத்தின் செகண்ட் சிங்கிள் வெளியீடு!