AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நூறு சாமி முதல் சின்ன சின்ன ஆசை வரை… தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் இந்த வாரம் வெளியாகும் படங்களின் லிஸ்ட் இதோ

This Week Theatre Release Movies List In South Indian Cinema | தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் என்ன என்ன என்பது குறித்த ஒரு லிஸ்டை தற்போது இந்த செய்தியில் பார்க்கலாம்.

நூறு சாமி முதல் சின்ன சின்ன ஆசை வரை… தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் இந்த வாரம் வெளியாகும் படங்களின் லிஸ்ட் இதோ
படங்கள்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 18 Jun 2026 13:49 PM IST

நூறு சாமி படம்: தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருகிறார் இயக்குநர் சசி. இவரது இயக்கத்தில் முன்னதாக தமிழ் சினிமாவில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இவரது இயக்கத்தில் தற்போது உருவாகி திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் நூறு சாமி. இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி முக்கிய வேடத்தில் நடித்து உள்ளார். இவர்களின் கூட்டணின் முன்னதாக பிச்சைக்காரன் படத்தில் இருந்தது. அந்தப் படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் இந்தப் படமும் நல்ல வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் இந்தப் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல கவனத்தை ஈர்த்தது. இந்த நிலையில் படம் நாளை 19-ம் தேதி ஜூன் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

மா இண்டி பங்காரம்: நடிகை சமந்தா ரூத் பிரபு நடிப்பில் தெலுங்கு சினிமாவில் உருவாகி உள்ள படம் மா இண்டி பங்காரம். நாயகியை மையமாக வைத்து உருவாகி உள்ள இந்தப் படத்தினை இயக்குநர் நந்தினி ரெட்டி இயக்கி உள்ளார் மேலும் இந்தப் படத்திற்கு திரைக்கதையை ராஜ் நிதிமோரு எழுதி உள்ளார். இவர் சமந்தாவின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆக்‌ஷன் பவர் பேக் படமாக உருவாகி உள்ள இந்த மா இண்டி பங்காரம் பான் இந்திய மொழிகளில் நாளை 19-ம் தேதி ஜூன் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

பாலன் தி பாய்: மலையாள சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் சிதம்பரம். இவரது இயக்கத்தில் தற்போது உருவாகி உள்ள படம் பாலன் தி பாய். இந்தப் படத்திற்கு திரையக்கதையை இயக்குநர் ஜித்து மாதவன் எழுதி உள்ளார். படத்தின் ட்ரெய்லர் மற்றும் அப்டேட்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வரும் நிலையில் படம் நாளை 19-ம் தேதி ஜூன் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read… சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ் படத்திலிருந்து வெளியானது பட்டாம்பூச்சி பாடலின் புரோமோ வீடியோ

சின்ன சின்ன ஆசை: நடிகர்கள் இந்திரன்ஸ் மற்றும் மது பாலா இருவரும் முக்கிய வேடத்தில் நடித்து உள்ள ஃபீல் குட் படம் தான் சின்ன சின்ன ஆசை. மலையாள சினிமாவில் உருவாகி உள்ள இந்தப் படத்தினை இயக்குநர் வர்ஷா வாசுதேவ் எழுதி இயக்கி உள்ளார். இந்தப் படத்தில் நடிகர்கள் இந்திரன்ஸ் மற்றும் மது பாலா உடன் இணைந்து நடிகர்கள் அபர்ணா பாலமுரளி, ஜாபர் சாதிக், விஷ்ணு அகஸ்தியா, தம்பி ராமையா, காளி வெங்கட், சாய் ஜனனி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். படம் வருகின்ற 19-ம் தேதி ஜூன் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read… பிரித்விராஜ் சுகுமாரின் நோபடி படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ

Follow Us