AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கர படத்தின் எக்ஸ்குளூசிவ் பிடிஎஸ் வீடியோவை வெளியிட்ட படக்குழு!

Director Vignesh Raja Kara Exclusive BTS Video Out Now | நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற கர படத்தின் எக்ஸ்குளூசிவ் பிடிஎஸ் வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

கர படத்தின் எக்ஸ்குளூசிவ் பிடிஎஸ் வீடியோவை வெளியிட்ட படக்குழு!
கரImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 17 Jun 2026 12:30 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து பான் இந்திய அளவில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் மற்ற முன்னணி நடிகர்கள் வருடத்திற்கு ஒரு படம் வெளியிடவே திணறி வரும் நிலையில் வருடத்திற்கு மூன்று படங்களை வெளியிடும் அளவில் படு பிசியான நாயகனாக வலம் வருகிறார் நடிகர் தனுஷ். ஆம் கடந்த 2025-ம் ஆண்டில் மட்டும் நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்தடுத்து மூன்று படங்கள் திரையரங்குகளில் வெளியானது. அதில் ஒரு படம் அவரே எழுதி இயக்கி நாயகனாக நடித்த இட்லி கடை படம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் சூழலில் நடிகர் தனுஷ் நடிப்பில் இந்த 2026-ம் ஆண்டில் முதலாவதாக திரையரங்குகளில் வெளியான படம் கர.

இயக்குநர் விக்னேஷ் ராஜா இந்த கர படத்தை எழுதி இயக்கி இருந்தார். ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவான இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷ்னல் நிறுவனம் தயாரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து இருந்தார். இந்தப் படம் கடந்த ஏப்ரல் மாதம் 30-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான நிலையில் கடந்த மே மாதம் 28-ம் தேதி முதல் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியானது. திரையரங்குகளில் வரவேற்பைப் பெற்ற இந்த கர படம் ஓடிடியிலும் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது.

கர படத்தின் எக்ஸ்குளூசிவ் பிடிஎஸ் வீடியோவை வெளியிட்ட படக்குழு:

இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் படத்தினை எடுக்க படக்குழு எப்படி எல்லாம் சிரமத்தை சந்தித்தனர் என்பதை ஒரு பிடிஎஸ் வீடியோவாக படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இந்த பிடிஎஸ் வீடியோவில் இந்தப் படத்திற்காக படக்குழுவினர் போட்ட கடின உழைப்பை வெளிப்படையாக பார்க்க முடிகிறது. மேலும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… அந்த நேரத்தில் சினிமாவில் இருந்தே விலகிடலாம்னு நினச்சேன் – நடிகை நிவேதா பெத்துராஜ்

கர படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… பாலிவுட்டில் டூ மோலிவுட்… பிரித்விராஜ் – மஞ்சு வாரியர் படத்தை தயாரிக்கும் கரண் ஜோஹர் 

Follow Us