AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Malavika Mohanan: சர்தார் 2 படத்தில் எனது கதாபாத்திரம் மிகவும் சவாலானது – மாளவிகா மோகனன் சொன்ன விஷயம்!

Malavika Mohanan Role In sardar 2: நடிகை மாளவிகா மோகனனுக்கு தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் அதிகம் வரவேற்பு உண்டு. இவர் தமிழில் சர்தார் 2 படத்தில் கார்த்தியுடன் இணைந்து நடித்துள்ளார். இப்படத்தில் பணியாற்றியது மற்றும் இப்படத்தில் அவர் நடித்திருக்கும் கதாபாத்திரம் எவ்வாறு இருக்கும் என்பது குறித்து நேர்காணல் ஒன்றில் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

Malavika Mohanan: சர்தார் 2 படத்தில் எனது கதாபாத்திரம் மிகவும் சவாலானது – மாளவிகா மோகனன் சொன்ன விஷயம்!
கார்த்தி மற்றும் மாளவிகா மோகனன்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 14 Jun 2026 19:12 PM IST

சவுத் இந்திய மக்கள் மத்தியில் நடிகையாக மிகவும் பிரபலமானவர் மாளவிகா மோகனன் (Malavika Mohanan). இவர் மலையாளம் சினிமாவின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான நிலையில், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழி படங்களில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இவர் தமிழில் இறுதியாக சியான் விக்ரமின் (Chiyaan Vikram) தங்கலான் படத்தில் ஆரத்தி என்ற வேடத்தில் நடித்திருந்தார். இதையடுத்து தெலுங்கில் இவர் தி ராஜா சாப் (The Raja saab) என்ற படத்தில் பிரபாஸிற்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படத்தின் மூலமாக தெலுங்கில் கதாநாகியாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் அவருக்கு எதிர்பார்த்த வரவேற்பை கொடுக்கவில்லை. இப்படத்தோடு இவர் தமிழில் நடித்துவந்த ஆக்ஷன் திரில்லர் படம்தான் சர்தார் 2 (Sardar 2).

இதில் கார்த்தி கதாநாயகனாக நடித்துவந்த நிலையில், இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ளார். இப்படமானது சிறப்பாக தயாராகியுள்ள நிலையில், இறுதிக்கட்ட பணிகளில் இருக்கிறது. அண்மையில் நேர்காணல் ஒன்றில் பேசிய மாளவிகா மோகனன், சர்தார் 2 படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து பேசியுள்ளார்.

இதையும் படிங்க: அனிருத்துக்கு பிடிச்ச நடிகை யார் தெரியுமா? அவரே சொன்ன விஷயம்!

சர்தார் 2 படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து மாளவிகா மோகனன் பேசிய விஷயம்:

சமீபத்தில் பேட்டி ஒன்றில் மாளவிகா மோகனன் பேசுகையில், “பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில், கார்த்தியுடன் இணைந்து நடித்த சர்தார் 2 படமானது மற்றொரு சவாலான படைப்பாகும். நான் சர்தார் 2 படம் குறித்து மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். இப்படம் உடல்ரீதியாக எனக்கு மிகவும் ஒரு சவாலான கதாபாத்திரம்.

இதையும் படிங்க: கான் சிட்டி படத்தின் டப்பிங் பணியை முடித்த நடிகர்கள்.. நகைச்சுவையுடன் கூடிய வீடியோவை பகிர்ந்த படக்குழு!

இப்படத்தில் ஆக்ஷன் காட்சிகள் நிறைய உள்ளது. மேலும் நாங்கள் பல பிரம்மிக்கைவைக்கும் சண்டை காட்சிகளையும் படமாக்கியுள்ளோம். அவரை பெரிய திரையில் காண என்னால் காத்திருக்க முடியவில்லை. இப்படம் நிச்சயம் அற்புதமாக இருக்கும்” என அதில் அவர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

சத்தார் 2 படம் பற்றி நடிகை மாளவிகா மோகனன் தெரிவித்தது பற்றி வைரலாகும் பதிவு:

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம்தான் சர்தார் 2. இப்படம் 2021ம் ஆண்டில் வெளியான சர்தார் 1படத்தின் தொடர்ச்சியாக உருவாகியுள்ளது. இதில் கார்த்தி ரெட்டை வேடத்தில் நடித்துள்ளார். இவருடன் ரஜிஷா விஜயன், மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்த நிலையில், இறுதிக்கட்ட பணிகளில் இருக்கிறது. இன்னும் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us