AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

முதல்வர் விஜயை நேரில் சந்தித்தபோது அவர் சொன்னது என்ன? ஆர்.ஜே.பாலாஜி ஓபன் டாக்

Director RJ Balaji Recent Interview | தமிழ் சினிமாவில் தற்போது மிகப் பெரிய வெற்றியைக் கொடுத்த ஆர்.ஜே.பாலாஜி சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்று இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. அதில்முதலமைச்சர் விஜயை சந்தித்தது பேசியது குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

முதல்வர் விஜயை நேரில் சந்தித்தபோது அவர் சொன்னது என்ன? ஆர்.ஜே.பாலாஜி ஓபன் டாக்
முதலமைச்சர் விஜய் மற்றும் ஆர்.ஜே.பாலாஜிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Updated On: 15 Jun 2026 12:44 PM IST

தமிழ் சினிமாவில் தற்போது மிகப்பெரிய வெற்றியைக் கண்ட மகிழ்ச்சியில் உள்ளது கருப்பு படக்குழு. இந்த 2026-ம் ஆண்டு தொடங்கியதில் இருந்து தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் படங்கள் திரையரங்குகளில் வெளியானது. ஆனால் அந்தப் படங்கள் அனைத்தும் வசூலில் ரூபாய் 100 கோடிகளைக் கடக்கவே பெரும் பாடு பட்டது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் சூழலில் படம் வெளியாகுமா? ஆகாதா? என்று பல கேள்விகளுடனும் சிக்கலுக்கு மத்தியிலும் தமிழ் சினிமாவில் வெளியான படம் கருப்பு. படம் கடந்த மே மாதம் மத்தியில் திரையரங்குகளில் வெளியானது. இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் 45-வது படமாக இந்த கருப்பு படம் திரையரங்குகளில் வெளியானது. பல பிரச்சனைக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூலிலும் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது.

அதன்படி இந்த கருப்பு படம் 25 நாட்களைக் கடந்த போது ரூபாய் 340 கோடிகளை கடந்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. திரையரங்குகளில் வரவேற்பைப் பெற்று வரும் கருப்பு தற்போது ஓடிடியில் வெளியாகி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் படத்தின் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி சமீபத்தில் அளித்தப் பேட்டி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

முதல்வர் விஜயை நேரில் சந்திதபோது அவர் சொன்னது என்ன?

நான் சமீபத்தில் முதலமைச்சர் விஜயை சந்தித்தேன். கருப்பு படத்தையும் அதன் வெற்றியையும் மக்கள் கொண்டாடும் விதம் குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். 1.75 கோடி மக்கள் மிகுந்த நம்பிக்கையுடன் அவருக்கு வாக்களித்தனர். மேலும், திரையுலகின் அனைத்துப் பிரச்சினைகளும் அவருக்குத் தெரிந்திருப்பதால், இது அத்துறைக்கு நன்மை பயப்பதாக அமையும்.

இப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது. பொதுவாக, ஒரு நல்ல படம் திரையரங்குகளில் வெளியாகிப் பின்னர் ஓடிடி-க்கு வரும்போது, ​​மக்கள் அதை ஒவ்வொரு காட்சியாக உற்றுநோக்கி, முகபாவனை மாறுபடுவது போன்ற குறைகளைச் சுட்டிக்காட்டுவதுண்டு. ஓடிடியில் பார்க்கும்போது சில குறைகள் தென்படலாம். ஆனால், அதைவிடப் பல சிறப்பம்சங்கள் இப்படத்தில் உள்ளன. எனவே, அதை ரசித்து மகிழுங்கள் என்று ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்துள்ளார்.

Also Read… இந்த போட்டோவில் பாரதிராஜாவின் கையில் இருக்கும் சிறுவன் யாருனு தெரிகிறதா? இவர் தற்போது தமிழ் சினிமாவில் பெரிய ஹீரோ!

இணையத்தில் வைரலாகும் ஆர்.ஜே.பாலாஜி பேச்சு:

Also Read… ரஜினிகாந்த் – சூர்யா யார் அந்த 5 ரூபாய் டாக்டர் கேரக்டரில் யார் நடிப்பது? வைரலாகும் தகவல்!

Follow Us