தென்னிந்திய மொழிகளில் இந்த வாரம் என்ன படங்கள் ஓடிடியில் ரிலீஸாகுது தெரியுமா?
This Week OTT Release Update | ஒவ்வொரு வாரமும் தென்னிந்திய மொழிகளில் புதுப் புதுப் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வருவது போல ஓடிடியிலும் தொடர்ந்து வெளியாகி வருகின்றது. அந்த வகையில் இந்த வாரம் ஓடிடியில் என்ன என்ன படங்கள் வெளியாகி உள்ளது என்பதைப் பார்க்கலாம்.
கருப்பு படம்: நடிகர் சூர்யாவின் நடிப்பில் ஃபேண்டசி ஆக்ஷன் படமாக உருவாகி உள்ளது கருப்பு. கடந்த 15-ம் தேதி மே மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான இந்தப் படத்தை இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி எழுதி இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படத்தில் நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். மேலும் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் இதுவரை உலக அளவில் ரூபாய் 340 கோடிகள் வசூலித்து உள்ளதாக இரண்டு நாட்களுக்கு முன்பு படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. மேலும் இந்தப் படம் திரையரங்குகளில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் கடந்த 12-ம் தேதி ஜூன் மாதம் 2026-ம் ஆண்டு முதல் அமேசான் ப்ரைம் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது. திரையரங்குகளில் சூர்யாவின் கருப்பு படத்தைப் பார்த்து கொண்டாடிய ரசிகர்கள் தற்போது ஓடிடியிலும் நல்ல வரவேற்பை கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
ரமணி கல்யாணம்: தெலுங்கு சினிமாவில் ரொமாண்டிக் ட்ராமா பாணியில் வெளியான படம் ரமணி கல்யாணம். இயக்குநர் விஜய் ஆதிரெட்டி இந்தப் படத்தை எழுதி இயக்கி இருந்த நிலையில் கடந்த மே மாதம் 22-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தில் நடிகர்கள் தீப்ஷிகா சந்திரன், சூர்யா வசிஷ்டா, சீனிவாச ரெட்டி, சைது ஜொன்னலகட்டா, தொகுப்பாளர் ஷியாமளா ஆகியோர் இணைந்து நடித்து உள்ளனர். இந்தப் படம் தற்போது அமேசான் ப்ரைம் வீடியோவில் காணக் கிடைக்கின்றது.




ட்ரிடம் படம்: மலையாள சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருகிறார் நடிகர் ஷேன் நிகாம். இவரது நடிப்பில் க்ரைம் த்ரில்லர் பாணியில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான படம் ட்ரிடம். இந்தப் படத்தில் ஷேன் நிகாம் காவல்துறை அதிகாரியாக நடித்து இருந்தார். மேலும் இந்தப் படத்தினை இயக்குநர் மார்ட்டின் ஜோசப் எழுதி இயக்கி உள்ளார். படம் கடந்த மே மாதம் 08-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தில் ஷேன் நிகாம் உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். இந்த நிலையில் படம் தற்போது ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.
Also Read… பல நாட்களுக்கு பிறகு மீண்டும் சீரியலில் நடிக்கும் பாரதி கண்ணம்மா புகழ் அருண்? அட இந்த சீரியலா?