AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Jiiva: கிடா பட இயக்குநருடன் புதிய படத்தில் இணைந்த நடிகர் ஜீவா – வெளியான அறிவிப்பு இதோ!

Jiiva New Movie: கோலிவுட் மக்கள் மத்தியில் மிகவும் நெருக்கமான நடிகராக இருந்துவருபவர் ஜீவா. இவரின் நடிப்பில் தமிழில் தொடர்ந்து புதிய படங்கள் உருவாகிவருகிறது. தந்தை ஆர்.பி.சௌத்ரியின் இறப்பிற்கு பிறகு ஜீவா புதிய படம் ஒன்றில் இணைந்துள்ளார். இப்படத்தை கிடா என்ற படத்தை இயக்கியிருந்த இயக்குநர் வெங்கட் ராதா இயக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Jiiva: கிடா பட இயக்குநருடன் புதிய படத்தில் இணைந்த நடிகர் ஜீவா – வெளியான அறிவிப்பு இதோ!
ஜீவாவின் புதிய படம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 12 Jun 2026 19:04 PM IST

நடிகர் ஜீவா (Jiiva) தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்துவருகிறார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியாகியிருந்த திரைப்படம்தான் தலைவர் தம்பி தலைமையில் (TTT Movie). இப்படமானது கடந்த 2026ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வெளியாகியிருந்த நிலையில், மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. இதையடுத்து இவர் “சிவா மனசுல சக்தி” (SMS Movie) என்ற படத்தை இயக்கியிருந்த இயக்குநர் ராஜேஷின் இயக்கத்தில், “ஜாலியா இருந்த ஒருத்தன்” (JIO Movie) என்ற படத்தில் நடித்துவந்தார். இப்படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்த நிலையில், தனது புதிய படத்திற்கான பணியில் இவர் ஈடுபட்டுவந்தார். இதே சமையத்தில் ஜீவாவின் தந்தையும், தயாரிப்பாளருமான ஆர்.பி.சௌத்ரி விபத்தின் காரணமாக உயிரிழந்தார்.

தந்தையின் மரணத்திற்கு பிறகு ஜீவா பெரிதும் வெளியேவரவில்லை. அந்த வகையில் தற்போது இவர் புதிய படம் ஒன்றில் இணைந்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த 2023ம் ஆண்டில் வெளியான கிடா (Kida Movie) என்ற படத்தை இயக்கியிருந்த இயக்குநர் வெங்கட் ராதா (Venkat Radha) இயக்கத்தில் புது படத்தில் ஜீவா இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 12 மணிநேரம் ஆண்.. 12 மணிநேரம் பெண்.. டபுள் டமாக்கவான டபுள் ஆக்குபென்சி படம் எப்படி இருக்கு?- விமர்சனங்கள் இதோ!

ஜீவாவின் புதிய திரைப்படம் குறித்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு:

இப்படத்தை இயக்குநர் வெங்கட் ராதா இயக்க, லார்க் ஸ்டூடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்நிறுவனத்தின் கீழ் சூரியின் மாமன் மற்றும் கருடன் போன்ற திரைப்படங்கள் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் ஜீவா நடிக்கவுள்ள புதிய திரைப்படமும் உருவாக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜீவா நடிக்கும் புது படத்தின் ஷூட்டிங் எப்போது :

நடிகர் ஜீவா, தந்தையின் மறைவிற்கு பிறகு இன்னும் படப்பிடிப்புகளுக்கு செல்லவில்லை. அந்த வகையில் தற்போது அவர் மொட்டையடித்திருக்கும் நிலையில், வெளியேயே வரவில்லை என்று கூறப்படுகிறது. தற்போது இயக்குநர் வேங்கட ராதாவுடன் புது படத்தில் இணைந்திருக்கும் நிலையில், இப்படத்திற்கு தலைவன் தலைவி மற்றும் கும்கி 2 போன்ற படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியிருந்த, எம் சுகுமார் என்பவர் இப்படத்திலும் பணியாற்றவுள்ளார்.

இதையும் படிங்க: சூர்யா 48 படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும்? – வைரலாகும் தகவல்

இப்படமானது மதுரையை சார்ந்த கதைக்களத்தில் தயாராகிவரும் நிலையில், இதன் ஷூட்டிங் வரும் 2026ம் ஆண்டு ஜூலை மாதத்தில் மதுரையில் தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் முழுக்க மதுரையை சுற்றிய கிராமங்களில் நடக்கும் கதையை மையமாக கொண்டு உருவாக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

Follow Us