AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

8 வயது பார்வையற்ற தம்பிக்கு பார்வை கிடைக்க போராடும் 10 வயது அக்கா – இந்தி சினிமாவில் இந்த தனக் படத்தினை மிஸ் செய்யாதீர்கள்

Dhanak Hindi Movie OTT Update | இந்தி சினிமாவில் இரண்டு குழந்தைகளின் வாழ்க்கையில் நடைபெறும் நெகிழ்வு பூர்வமான விசயங்களை மையமாக வைத்து வெளியான படம் தனக். இந்தப் படத்தினை எந்த ஓடிடியில் காணக் கிடைக்கின்றது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம் பார்க்கலாம்

8 வயது பார்வையற்ற தம்பிக்கு பார்வை கிடைக்க போராடும் 10 வயது அக்கா – இந்தி சினிமாவில் இந்த தனக் படத்தினை மிஸ் செய்யாதீர்கள்
தனக்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 12 Jun 2026 21:30 PM IST

இந்தி சினிமாவில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் தனக். கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது இந்தப் படம். 8 வயது பார்வையற்ற தம்பிக்கு பார்வை கிடைக்க போராடும் 10 வயது சிறுமி. இவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவான இந்தப் படத்தை இயக்குநர் நாகேஷ் குக்குனூர் எழுதி இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படத்தில் நடிகர்கள் கிரிஷ் சாப்ரியா, ஹெடல் கடா, விபின் சர்மா, குல்பாம் கான், இதாந்த் சிங், ஸ்வஸ்திக் சவான், நரேந்திர சிங் ராஜ்புரோஹித், ஹர்மீத் அரோரா, ராஜீவ் லக்ஷ்மன், பிரத்யக் கல்ரா, ராகுல் லோஹானி, ரமாகாந்த் தயாமா, விபா சிப்பர், ரமாகாந்த் தயாமா, சேட் டிக்சன், ஃப்ளோரா சைனி, பாரதி அச்ரேக்கர், சுரேஷ் மேனன், நினாத் காமத், வின்னி அரோரா, பிரியங்க் சர்மா என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர்.

மேலும் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் இந்தப் படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனங்களான குக்குனூர் ஃபிலிம்ஸ் மற்றும் த்ரிஷ்யம் பிலிம்ஸ் இணைந்து தயாரித்து இருந்தது.

தனக் படத்தின் கதை என்ன?

அம்மா – அப்பா என இருவரும் இல்லாமல் தனது மாமாவின் ஆதரவில் வாழ்ந்து வருகின்றனர் 8 வயது சிறுவன் சோட்டு மற்றும் 10 வயது சிறுமி பரி. இதில் சோட்டுவிற்கு பிறந்ததில் இருந்தே கண் தெரியாது. இப்படி இருக்கும் சூழலில் இவர்கள் இருவரும் பள்ளிக்கு செல்வதற்கு முன்பு டாஸ் போடுவார்கள். அதில் சோட்டு ஜெயித்தால் சல்மான் கான் படத்தின் கதையை பேச வேண்டும் பரி ஜெயித்தால் ஷாருக்கான் படத்தின் கதையை சொல்ல வேண்டு.

Also Read… இன்று திரையரங்குகளில் வெளியான ஹபீபி படம் எப்படி இருக்கு? மக்களின் கருத்து இதோ

பிறந்ததில் இருந்து பார்வையற்ற சோட்டுவிற்கு கண் பார்வை கிடைத்து சல்மான் கான் படத்தை பார்க்க வேண்டும் என்று ஆசை. 8 வயதான சோட்டுவிற்கு 9 வயதிற்குள் கண் பார்வை கிடைக்க வேண்டும் என்று ஆசைப்பட அதற்கு பரி என்ன எல்லாம் செய்கிறார் என்பதே படத்தின் கதை. இறுதியில் சோட்டுவிற்கு கண் பார்வை கிடைத்ததா இல்லையா என்பதை படக்குழுவினர் மிகவும் சுவாரஸ்யமாக காட்டியுள்ளனர். இந்தப் படம் தற்போது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

Also Read… லீ மான்ஸில் குடும்பத்தினருடன் நடிகர் அஜித் – வைரலாகும் போட்டோஸ்

Follow Us