இதயம் முரளி படத்தின் ‘வான் வான்’ பாடலின் படப்பிடிப்பு வீடியோவை பகிர்ந்த படக்குழு!
Vaan Vaan Song BTS Video: நடிகர் அதர்வாவின் நடிப்பில் 2026ம் ஆண்டின் வெளியீட்டிற்கு தயாராகிவரும் காதல் திரைப்படம்தான் இதயம் முரளி. இப்படத்தை தயாரிப்பாளரும், இயக்குநருமான ஆகாஷ் பாஸ்கரன் இயக்கியுள்ளார். இந்நிலையில் இடத்தின் வான் வான் பாடல் படப்பிடிப்பு வீடியோவை படக்குழு பகிர்ந்துள்ளது. இது தற்போது ரசிகர்கள் மத்திய வைரலாகிவருகிறது.
கோலிவுட் சினிமாவில் இளம் நடிகராக ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்றவர் அதர்வா முரளி (Athrvaa Murali). இவர் பிரபல 90ஸ் நடிகர் முரளியின் (Murali) மூத்த மகன் ஆவார். இவரும் தனது தந்தையை போலவே சினிமாவில் தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்துவருகிறார். இந்நிலையில் இவர் தமிழில் இறுதியாக பராசக்தி (Parasakthi) என்ற படத்தில் நடித்திருந்த நிலையில், அது கடந்த 2026ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வெளியானது. இப்படத்தில் சிவகார்த்திகேயனின் சகோதரனாக அதர்வா நடித்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்பட்டிருந்தார். இப்படத்தின் வெற்றியை அடுத்ததாக பராசக்தி பட தயாரிப்பாளரும், இயக்குநருமான ஆகாஷ் பாஸ்கரனின் (Aakash Bhaskaran) இயக்கத்தில் நடித்துவந்த புதிய திரைப்படம்தான் இதயம் முரளி (Idhayam Murali). இப்படத்தில் அதர்வா, கயாடு லோஹர்(Kayadu Lohar) மற்றும் ப்ரீத்தி முகுந்தன் (Preity Mukhundhan) போன்ற பிரபலங்களும் இணைந்து நடித்துள்ளனர்.
எமோஷனலான காதல் கதைக்களத்தில் இப்படமானது தயாராகியுள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இப்படத்திலிருந்து 3வது பாடலாக “வான் வான்” என்ற பாடல் வெளியாகியிருந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு காட்சிகளை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவானது ரசிகர்கள் மத்தியில் வைரலாகப் பரவிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.




இதையும் படிங்க: இளம் வயதில் சிம்பொனி இசையமைத்த லிடியன் நாதஸ்வரம்… பெருமை கொள்ளும் தமிழ் நாடு
இதயம் முரளி திரைப்படத்தின் வான் வான் பாடலின் படப்பிடிப்பு காட்சியை வெளியிட்ட படக்குழு:
Here’s the breezy Behind the scenes of Vaan vaan✨♥️#IdhayamMurali from July 10@Atharvaamurali @MusicThaman @AakashBaskaran #FahadhFaasil @natty_nataraj @PreityMukundan @JustNiharikaNm @11Lohar @manojdft @Dop_Sai @RakshanVJ @Actor__SUDHAKAR @AngelinB3 @Dravid_Selvam… pic.twitter.com/ctbPA4Seu5
— DawnPictures (@DawnPicturesOff) June 12, 2026
இதயம் முரளி படத்தின் ரிலீஸ் மற்றும் ட்ரெய்லர் அப்டேட்:
இந்த இதயம் முரளி படத்தில் அதர்வா, ப்ரீத்தி முகுந்தன், கயாடு லோஹர், ஃபஹத் பாசில், தமன் எஸ், ரக்ஷன், பிரக்யா நகரா மற்றும் நட்டி நடராஜ் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். குறிப்பாக இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் எஸ் இசையமைத்துள்ள நிலையில், கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தமிழ் சினிமாவில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படமானது இந்தியா மற்றும் பல்வேறு வெளிநாடுகளிலும் படம்பிடிக்கப்பட்டிருந்த நிலையில், இதன் மீது அதிக எதிர்பார்ப்புகள் இருக்கிறது.
இதையும் படிங்க: கருப்பு திரைப்படத்தின் மாபெரும் வெற்றி.. சர்ப்ரைஸாக இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜிக்கு காரை பரிசளித்த சூர்யா!
அந்த வகையில் இப்படம் 2026ம் ஆண்டு ஜூலை 10ம் தேதியில் உலகமெங்கும் வெளியாக காத்திருக்கிறது. இப்படத்தின் வெளியீட்டிற்கு இன்னும் 4 வாரங்களே இருக்கும் நிலையில், படத்தின் அப்டேட்டுகளும் ஒவ்வொன்றாக வெளியாகிவருகிறது. இப்படத்தின் ட்ரெய்லர், வரும் 2026ம் ஆண்டு ஜூன் மாதத்தின் இறுதியில் வெளியாகவுள்ளதாக வட்டாரங்கள் கூறுகிறது. இன்னும் படத்தின் புரோமோஷன் பணிகள் தொடங்கவில்லை என்ற நிலையில், விரைவில் அதற்கான வேலைகள் தொடங்கவுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது.