இளம் வயதில் சிம்பொனி இசையமைத்த லிடியன் நாதஸ்வரம்… பெருமை கொள்ளும் தமிழ் நாடு
Who is Lydian Nadhaswaram | இளம் வயதில் சிம்பொனி இசையை உருவாக்கி சாதனைப் படைத்த இளம் இசையமைப்பாளர் லிடியன் நாதஸ்வரம் இன்று சென்னை வருகை தந்த போது அமைச்சர்கள் குழு மற்றும் அரசியல் தலைவர்கள் நேரில் சென்று உற்சாக வரவேற்பைப் அளித்தனர்.
தமிழ் சினிமாவை பொருத்தவரை நாயகன்கள் நாயகிகள் பலர் பல சாதனைகளை நடிப்பில் நிகழ்த்தி உள்ளது போல மற்ற துறையில் உள்ளவர்களும் பல சாதனைகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் இசை என்பது சினிமா தொடங்கிய காலத்தில் இருந்தே நிலவி வரும் ஒன்றாக உள்ளது. ஒரு படத்தில் காட்சிகளில் வசனமே இல்லை என்றாலும் இசையில் மூலம் அந்த காட்சியில் நடிகர்கள் கடந்த நினைக்கும் உணர்வை ஒரு இசையமைப்பாளர் கடத்திவிடுவார். இவ்வாறு சினிமாவில் பல இசையமைப்பாளர்கள் நிகழ்த்திய மேஜிக்குகளை ரசிகர்கள் தற்போதும் கொண்டாடி வருகின்றனர். தமிழ் சினிமாவிற்கு உலக அளவில் பெருமை சேர்த்த இசைக் கலைஞர்கள் பலர் உள்ளனர். அதில் அதிகமாக தற்போது பேசப்படுபவர்கள் இசைமைப்பாளர்கள் இளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான். இவர்கள் இருவரும் படங்களுக்கு இசையமைப்பது மட்டும் இன்றி தனித்து ஆல்பமும் செய்து வருகிறார்கள்.
அதிலும் குறிப்பாக இசையமைப்பாளர் இளையராஜா கடந்த 2025-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சிம்பொனி இசையமைத்து தமிழ் சினிமாவை உலக அளவில் பெருமைப் படுத்தினார். இந்த சிம்பொனி இசையை தற்போது 21 வயதில் இளம் இசையமைப்பாளராக உள்ள லிடியன் நாதஸ்வரம் சிம்பொனி இசையமைத்து சாதனைப் படத்துள்ளார். லண்டன் ஆர்கெஸ்டா குழுவின் 92 இசைக் கலைஞர்களுடன் இந்த சின்பொனி இசையை அவர் உருவாக்கி சாதனைப் படைத்துள்ளார்.
லிடியன் நாதஸ்வரம் யார் தெரியுமா?
21 வயதிலேயே சிம்பொனி இசையமைத்து சாதனைப் படைத்த இந்த லிடியன் நாதஸ்வரம் தனது இரண்டு வயதில் டிரம்ஸ் வாசிக்கத் தொடங்கிய அவர், எட்டு வயதில் தானாகவே பியானோவும் வாசிக்கக் கற்றுக்கொண்டார். ஒரே நேரத்தில் இரண்டு பியானோவில் வெவ்வேறு இசைகளை அமைத்தும் மக்களை பிரமிப்பில் ஆழ்த்தினார். இதற்காக பல இசைக் கலைஞர்கள் அவரை பாராட்டவும் செய்தது குறிப்பிடத்தக்கது.




தொடர்ந்து சினிமாவில் அவர் இசையமைப்பாளராக ஆனது நடிகர் மோகன்லால் நடிப்பில் மலையாள சினிமாவில் வெளியான பாரோஸ் 3D என்ற படத்தின் மூலமாகதான். இந்தப் படத்திற்கான வாய்ப்பு லிடியன் நாதஸ்வரம் 15 வயதில் இருக்கும் போதே கிடைத்தது என்பதுக் குறிப்பிடத்தக்கது.
Also Read… ரஜினிகாந்த் – கமல் ஹாசன் இணைந்து நடிக்கும் படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்குகிறது? வைரலாகும் தகவல்
லிடியன் நாதஸ்வரத்திற்கு சென்னையில் உற்சாக வரவேற்பு:
21 வயதில் சிம்பொனி இசையமைத்து சாதனைப் படைத்த லிடியன் நாதஸ்வரம் லண்டனில் இருந்து இன்று காலை சென்னைக்கு வருகை தந்த போது அவரை நேரில் சென்று அமைச்சர்கள் ராஜ்மோகன், வன்னி அரசு மற்றும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தலைவர் வைகோ அவர்களும் நேரில் சென்று அவருக்கு உற்சாக வரவேற்பைப் அளித்தனர். மேலும் தொடர்ந்து லிடியன் நாதஸ்வரத்திற்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.