AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மறைந்தார் இயக்குநர் இமயம் பாரதி ராஜா… இரங்கல் தெரிவிக்கும் பிரபலங்கள்

celebrities are expressing their condolences following the passing of director Bharathiraja | இயக்குநர் இமயம் என்று மக்களால் அன்புடன் அழைக்கப்படும் இயக்குநர் பாரதி ராஜா இன்று மறைந்த நிலையில் பிரபலங்கள் பலரும் தங்களது இரங்களை தெரிவித்து வருகின்றனர்.

மறைந்தார் இயக்குநர் இமயம் பாரதி ராஜா… இரங்கல் தெரிவிக்கும் பிரபலங்கள்
பாரதிராஜாImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 10 Jun 2026 11:19 AM IST

தமிழ் சினிமாவில் இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் நடிகர் என பன்முகத்தன்மை கொண்டவராக வலம் வந்தவர் பாரதிராஜா. இவரை மக்கள் இயக்குநர் இமயம் என்று அன்புடன் அழைப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 1977-ம் ஆண்டு வெளியான 16 வயதினிலே என்ற படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகம் ஆனார் பாரதிராஜா. இவர் இயக்குநராக அறிமுகம் ஆன முதல் படமே மக்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றதால் கவனத்தை ஈர்த்தார். அதனைத் தொடர்ந்து இயக்குநர் பாரதி ராஜா இயக்கத்தில் தமிழ் சினிமாவில் கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், நிறம் மாறும் பூக்கள், நிழல்கள், அழைகள் ஓய்வதில்லை, காதல் ஓவியம், மண் வாசனை, முதல் மரியாதை, கடலோரக் கவிதைகள் வேதம் புதிது என பல சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை இயக்கி உள்ளார்.

இவர் தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் படங்களை இயக்கி உள்ளார். மேலும் இவரது இயக்கத்தில் இறுதியாக கடந்த 2020-ம் ஆண்டு படம் வெளியாகி இறுந்தது. படங்கள் இயக்குவதை குறைத்துக்கொண்ட பிறகு அதிக அளவில் நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று தனது 84-வது வயதில் உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். இவரது மறைவிற்கு திரையுலக பிரபலங்கள் நேரில் சென்றும் சமூக வலைதளம் மூலமாகவும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

சிரஞ்சீவி வெளியிட்ட இரங்கல் பதிவு:

இந்தியத் திரையுலகம் தனது மிகச்சிறந்த கதைசொல்லிகளில் ஒருவரான பாரதிராஜா அவர்களை இழந்துள்ளது. கிராமத்து மண்ணின் மணம், மனித உறவுகளின் அழகு, காதலின் தூய்மை மற்றும் சாமானிய மக்களின் உணர்வுகள் ஆகியவற்றை அவர் காலத்தால் அழியாத திரைக்காவியங்களாக மாற்றினார். அவரது திரைப்படங்கள் லட்சக்கணக்கான மக்களின் இதயங்களைத் தொட்டதுடன், பல தலைமுறைத் திரைப்படப் படைப்பாளிகளுக்கு உத்வேகமும் அளித்தன. மதிப்புமிக்க பத்மஸ்ரீ விருது மற்றும் பல தேசியத் திரைப்பட விருதுகளை வென்ற பாரதிராஜா அவர்களின் இந்தியத் திரையுலகப் பங்களிப்பு அளப்பரியது.

பவன் கல்யாண் வெளியிட்ட இரங்கல் பதிவு:

இந்திய சினிமா தனது மிகவும் செல்வாக்குமிக்க கதைசொல்லிகளில் ஒருவரை இழந்துவிட்டது. பத்மஸ்ரீ பாரதிராஜா அவர்களின் தொலைநோக்குப் பார்வை, கலைத்திறன் மற்றும் காலத்தால் அழியாத கதைசொல்லல்கள் திரைப்படத் தயாரிப்புக்கு புதிய வரையறையை அளித்து, பல தலைமுறை படைப்பாளிகளுக்கு உத்வேகம் அளித்தன. அவரது மரபு, கதைசொல்லிகளுக்கான பாதையைத் தொடர்ந்து ஒளிரச் செய்யும்.

ஜி.வி.பிரகாஷ் குமார் வெளியிட்ட இரங்கல் பதிவு:

பாரதிராஜா சார்… இதைக் கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். திரைப்படத்துறையையே மாற்றியமைத்து, பல திரைப்படப் படைப்பாளிகளுக்கு உத்வேகம் அளித்த மாபெரும் ஆளுமை அவர்.

விஷால் வெளியிட்ட இரங்கல் பதிவு:

புகழ்பெற்ற திரைப்பட இயக்குநரும், ‘இயக்குனரிமயம்’ என்று போற்றப்படுபவருமான பாரதிராஜா அவர்கள் இன்று காலை நம்மை விட்டுப் பிரிந்தார் என்ற செய்தியைக் கேட்பது மிகுந்த அதிர்ச்சியையும் சோகத்தையும் அளிக்கிறது.

தமிழ் சினிமாவின் போக்கையே என்றென்றைக்குமாக மாற்றியமைத்த தொலைநோக்குச் சிந்தனையாளர் அவர்; நம் கிராமங்கள், மக்கள் மற்றும் உணர்வுகளின் ஆன்மாவை வேறு யாரும் செய்ய முடியாத வகையில் வெள்ளித்திரையில் கொண்டு வந்தவர். அதற்கும் மேலாக, பல தசாப்தங்கள் கடந்தும் ரசிகர்களின் மனதில் நீங்காத தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலான கதாபாத்திரங்களையும், தனித்துவமான கதைமாந்தர் படைப்புகளையும் அவர் உருவாக்கினார் என்று தெரிவித்துள்ளார்.

அசோக் செல்வன் வெளியிட்ட இரங்கல் பதிவு:

என் இனிய தமிழ் மக்களே…”-இந்த ஒரு ஒற்றை வரி போதும் சார்!
திரைக்கு பின்னாடியும் சரி, திரைக்கு முன்னாடியும் சரி.. உங்க இடத்தை இனி யாராலும் நிரப்ப முடியாது. அமைதியும் சாந்தியும் உண்டாகட்டும், பாரதிராஜா சார். நினைவுகளுக்கு நன்றி. அன்பும் மரியாதையும்.

ஸ்ரீமன் வெளியிட்ட இரங்கல் பதிவு:

“என் இனிய தமிழ் மக்களே”என்று உச்சரித்தபோது, அரங்கமே கைதட்டல் ஓசையில் அதிர்ந்தது அந்த கரகோஷம் உங்கள் அற்புத படைப்புகளுக்காக எங்கள் இதயத்திலிருந்து எழுந்தது. உடலால் நீங்கள் மறைந்தாலும், உங்கள் படைப்புகள் மூலம் கடல் வற்றும் வரை வாழ்வீர்கள். உங்கள் ரசிகன், ஸ்ரீமன்

சாந்தனு வெளியிட்ட இரங்கல் பதிவு:

வெள்ளித்திரையில் தமிழ்மண்ணை என்றென்றும் பதித்த மாபெரும் ஆளுமை. தமிழ் சினிமாவுக்கு அதன் ஆன்மாவைக் கொடுத்த ஒரு தொலைநோக்காளர் நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார், ஆனால் அவரது கால்தடங்கள் வரும் தலைமுறையினருக்காக நிலைத்திருக்கும். நீங்கள் உருவாக்கிய திரைகளில் இளைப்பாறுங்கள், #பாரதிராஜா சார்.

Also Read… இந்த சிறுவன் யாருனு தெரியுமா? தென்னிந்திய சினிமாவில் முக்கிய பொறுப்பில் இருக்கும் நடிகர்.. அட இவர்தான்!

ரவி மோகன் வெளியிட்ட இரங்கல் பதிவு:

தமிழ் சினிமா தனது மாபெரும் தொலைநோக்காளர்களில் ஒருவரை இழந்துவிட்டது பாரதிராஜா சாரின் திரைப்படங்கள், மக்களையும், உணர்வுகளையும், வாழ்க்கையின் அழகையும் அதன் தூய்மையான வடிவில் கொண்டாடின. சினிமாவுக்கு அவரது பங்களிப்பு காலத்தால் அழியாதது, அவரது தாக்கம் அளவிட முடியாதது. அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். அமைதியில் இளைப்பாறுங்கள், ஐயா.

Also Read… கிருத்திகா உதயநிதியின் இயக்கத்தில் இணையும் விஜய் சேதுபதி? – விவரங்கள் இதோ!

Follow Us