இந்த சிறுவன் யாருனு தெரியுமா? தென்னிந்திய சினிமாவில் முக்கிய பொறுப்பில் இருக்கும் நடிகர்.. அட இவர்தான்!
Kollywood Actor Childhood Photo: சினிமாவில் பிரபலங்களின் சிறுவயது அடையாளம் தெரியாத புகைப்படங்கள் வைரலாகுவது வழக்கமே. அந்த வகையில் இந்த போட்டோவில் இருக்கும் சிறுவன் எந்த நடிகர் என தெரியுமா?. இவர் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இயக்குநராகவும் படம் இயக்குகிறார். இந்த சிறுவன் யார் என விவரமாக பார்க்கலாம்.
கோலிவுட் வட்டாரத்தில் பல உச்ச நடிகர்கள் (Kollywood Actors) இருந்துவருகின்றனர். அந்த வகையில் அவர்களின் அடையாளம் தெரியாத சிறுவயது புகைப்படங்கள் இணையத்திலும், ரசிகர்கள் மத்தியிலும் வைரலாகப் பரவிவருவது வழக்கம். இந்நிலையில் மேலே இருக்கும் போட்டோவில் உள்ள பிரபல நடிகர் யார் தெரியுமா?. இவர் கடந்த 2004ம் ஆண்டில் ஹீரோவாக தமிழ் சினிமாவில் நுழைந்தார். இவரின் நடிப்பில் முதலில் வெளியான படத்தை இயக்குநர் காந்தி கிருஷ்ணன் (Gandhi Krishnan) இயக்கியிருந்தார். இப்படத்தில் ரீமாசென்னுக்கு ஜோடியாக இந்த நடிகர் நடித்திருந்தார். இதையடுத்து இயக்குநர் ஹரி (Director Hari) இயக்கத்திலே கிட்டத்தட்ட 4 படத்திற்கும் மேல் நடித்துள்ளார். மேலும் பாலாவின் இயக்கத்திலும் நடித்துள்ளார். இவ்வாறு தனது சினிமா பயணத்தை தொடங்கிய இவருக்கு, தமிழ் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு. பிறப்பால் தெலுங்கராக இருந்தாலும், வளர்ந்தது முழுவதும் தமிழகம்தான். இவர் தற்போது வரையிலும் சினிமாவில் ஹீரோவாக நடித்துவருகிறார்.
மேலும் இவர் சமீபத்தில் பிரபல நடிகை ஒருவரையும் திருமணம் செய்வதாக நிச்சயம் செய்துள்ளார். சினிமாவில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேல் இருந்துவரும், தற்போது இயக்குநராகவும் படத்தை இயக்கியுள்ளார். இவர் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் உறுப்பினரும் கூட. அட இந்த சிறுவன் வேறுயாருமில்லை நடிகர் விஷால்தான் (Vishal).




இதையும் படிங்க: சிலம்பரசனியின் STR51 படம் நடக்குமா? – தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி சொன்ன பகீர் விஷயம்!
நடிகர் விஷால் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் போட்டோஷூட் பதிவு:
View this post on Instagram
நடிகர் விஷால் பிறப்பால் தெலுங்கராக இருந்தாலும், தனது சிறுவயதிலிருந்தே தமிழகத்தில் வளர்ந்தவர். இவர் கடந்த 1989ம் ஆண்டி ஜாடிக்கேத்த மூடி என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். இதையடுத்து 2004ம் ஆண்டில் இயக்குநர் காந்தி கிருஷ்ணன் இயக்கத்தில் செல்லமே என்ற படத்தின் மூலம் நடிகராக நுழைந்தார். இப்படத்தில் பரத் மற்றும் ரீமாசென் போன்ற பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். இதையடுத்து திமிரு, சண்டக்கோழி, மற்றும் தாமிரபரணி போன்ற படங்கள் இவருக்கு தென்னகத்தில் மக்கள் மத்தியில் நாயகனாக நல்ல வரவேற்பை கொடுத்தது.
இதையும் படிங்க: அந்த நடிகர்களின் நடிப்பை சிறுவயதிலிருந்தே பார்த்து வளர்ந்தேன் – கமல்ஹாசன்!
இதையடுத்து தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்துவந்தார். மேலும் இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் அவன் இவன் படத்தில் தனது வித்தியாசமான நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்திருந்தார். சினிமாவில் ஹீரோவாக 20 ஆண்டுகளுக்கும் மேல் பயணித்த இவர் தற்போது இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். மகுடம் என்ற படத்தில் ஹீரோவாக நடித்துவந்த நிலையில், மேலும் அவர் இயக்குநராகவும் இயக்கியுள்ளார். இப்படமானது இந்த 2026ம் ஆண்டில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.