இயக்குநர் டூ நாயகன்.. இந்த போட்டோவில் இருக்கும் சிறுவன் எந்த நடிகர்-னு தெரியுமா?
Malayalam Actor Childhood Photo: இணையதளங்களில் சினிமா பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் வைரலாகிவரும். அந்த வகையில் போட்டோவில் இருக்கும் சிறுவன் யார் என தெரியுமா?. மலையாளம் சினிமாவில் இயக்குநராக இருந்து, தற்போது தென்னிந்திய பிரபல நாயகனாக இருப்பவர். அது யார் என விவரமாக பார்க்கலாம்.
சினிமாவை பொறுத்தவரையில் நடிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் சிறுவயது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருவது வழக்கமே. அந்த வகையில் மேலே இருக்கும் போட்டோவில் பிரபலம் யார் என தெரியுமா?. இவர் மலையாள சினிமாவில் (Malayalam Cinema) இயக்குநராக இருந்து, தற்போது முழுக்க ஹீரோவாக படங்களில் நடித்துவருகிறார். இவர் தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் (Sivakrthikeyan) நடித்திருந்த படத்தில் கேமியோ வேடத்தில் நடித்தவர். இவர் மலையாள சினிமாவில் நடிகர் டோவினோ தாமஸை (Tovino Thomas) வைத்து மட்டும் இரு படங்கள் இயக்கியுள்ளார். மேலும் நடிகராகவும் இவர் பல படங்களில் நடித்துள்ளார். மோகன்லால் (Mohanlal) முதல் மம்முட்டி (Mammooty) வரை பல்வேறு நட்சத்திரங்களுடன் இணைந்து படங்களில் நடித்துள்ளார். அந்த வகையில் இவர் இன்னும் நடிகராக தமிழ் சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும், தமிழ் மக்கள் மத்தியில் இவரின் மூலம் பிரபலம்தான்.
இவர் தமிழில் சுதா கொங்கராவின் இயக்கத்தில் வெளியான படத்தில் சிறு வேடத்தில் நடித்துள்ளார். அந்த வகையில் இவர் விரைவில் அல்லு அர்ஜுனை வைத்து புதிய படத்தை இயக்கவுள்ளார் என்றும் கூறப்படுகிறது. இன்னுமா இந்த சிறுவன் யார் என தெரியல. அட இவர் வேறுயாருமில்லை நடிகர் பாசில் ஜோசப்தான்.




இதையும் படிங்க: ரவி ஷூட்டிங்கில் எப்போதுமே அப்டித்தான்.. கலகலப்பாக கார்த்தி சொன்ன விஷயம்!
நடிகர் பாசில் ஜோசபின் இன்ஸ்டாகிராம் போட்டோஷூட் பதிவு:
View this post on Instagram
நடிகர் பாசில் ஜோசப் கடந்துவந்த சினிமா பாதை:
நடிகர் பாசில் ஜோசப் சினிமாவில் ஆரம்ப காலத்தில் அங்கீகரிக்கப்படாத வேடங்களில் படங்களில் நடித்துசிவந்தார். இதையடுத்து 2013ம் ஆண்டில் வெளியான குஞ்சிராமயனம் என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இதற்கு முன் வினீத்தி ஸ்ரீனிவாசனின் இயக்கத்தில் வெளியான திரா என்ற படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியிருந்தார். அந்த வகையில் இயக்குநராக அறிமுகமானதை தொடர்ந்து, ஹீரோவாகவும் படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார். ஆரம்பத்தில் ஹீரோ மற்றும் பல முக்கியமான கதாபாத்திரங்கள் இருக்கும் படங்களில் நடித்துவந்தார்.
இதையும் படிங்க: அந்த நேரத்தில் சிவா ரொம்பவே கஷ்டப்பட்டாரு.. இப்போது அவரை நினைத்தால் பெருமையாக இருக்கு – சந்தோஷ் நாராயணன்!
இவர் மலையாளத்தில் மம்முட்டி முதல் மோகன்லால் வரை பல்வேறு பிரபலங்களுடன் இணைந்து நடித்துள்ளார். அந்த வகையில் இவர் தமிழில் சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தில் கேமியோ வேடத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு ரசிகர்களை கவர்ந்துவந்த இவர், தமிழிலும் நடிக்க ஆர்வம்காட்டி வருகிறார். இவர் ரஜினிகாந்தின் தலைவர் 173 படத்தில் நடிப்பதாக கூறப்பட்ட நிலையில், அது இன்னும் உறுதியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் அல்லு அர்ஜுனை வைத்து சூப்பர் ஹீரோ படம் ஒன்றை இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுபற்றிய அறிவிப்புகளும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.