AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Trisha: பிரபல நடிகையுடன் மோதலா? அந்த நடிகர்தான் காரணமா? – திரிஷாவே சொன்ன உண்மை!

Trisha Krishnan About Asin: தென்னிந்திய சினிமாவில் பிரபல நாயகியாக இருந்துவருபவது திரிஷா கிருஷ்ணன். இவர் முன்னதாக நடிகை திரிஷாவும் பிரபல நடிகைகையும் மோதலில் ஈடுபட்டதாக கூறப்பட்ட நிலையில், அது குறித்து திரிஷா கிருஷ்ணன் ஓபனாக பேசியுள்ளார். அதுகுறித்து விவரமாக பார்க்கலாம்.

Trisha: பிரபல நடிகையுடன் மோதலா? அந்த நடிகர்தான் காரணமா? – திரிஷாவே சொன்ன உண்மை!
திரிஷா கிருஷ்ணன் Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 04 May 2026 07:47 AM IST

கோலிவுட் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக இருந்துவருபவர்தான் திரிஷா கிருஷ்ணன் (Trisha Krishnan). இவரின் நடிப்பில் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் போன்ற பல்வேறு மொழிகளில் படங்கள் வெளியாகியுள்ளது. அந்த வகையில் இவர் தற்போது சூர்யாவுடன் (Suriya) கருப்பு (Karuppu) என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படமானது மே 14ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது. அந்த வகையில் மேலும் இவர் தொடர்ந்து படங்களில் கதாநாயகியாகவே நடித்துவருகிறார். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக கதாநாயகியாக நடிக்கிறார். இதுவரை தென்னிந்திய சினிமாவில் நாயகியாகவே யாருமே 20 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்ததில்லை என்றே கூறலாம். அந்த வகையில் முன்னதாக திரிஷாவுக்கும் பிரபல நடிகைகைக்கும் பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அந்த நடிகை யார் தெரியுமா? அது வேறுயாருமில்லை நடிகை அசின்தான் (Asin).

நடிகை திரிஷாவும், நடிகை அசினுக்கும் இடையே பிரச்சனை நடந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு விஜய்தான் காரணம் என பேசப்பட்டுவந்தது. அசினுக்கும், தனக்கும் பிரச்சனை இருந்ததா? என்பது குறித்து, முன்னதாக நேர்காணல் ஒன்றில் நடிகை திரிஷா விளக்கம் கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க: கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்படும் ‘மஞ்சும்மெல் பாய்ஸ்’ பட இயக்குநரின் புது படம்!

அசினுக்கும் தனக்கும் பிரச்சனை நடந்ததாக குறித்து திரிஷா விளக்கம் கொடுத்து பேச்சு:

அந்த நேர்காணலில் நடிகை திரிஷா கிருஷ்ணன், “நடிகை அசினுக்கும் எனக்கும் மோதல் என்பது முற்றிலும் வதந்தியாகும். நடிகை அசின் மட்டுமில்லை, வேறு எந்த நடிகைகளுக்கும் எனக்கு மோதல் வந்தது இல்லை. வர்ஷம் படத்துக்காக பிலிம்ஸ்ஃபேர் விருது வென்றேன். அந்த விழாவில்தான் நான் அசினை சந்தித்திருந்தேன். அவர் அப்போது என்னிடம் அவர் வாழ்த்து தெரிவித்திருந்தார். எப்போதும் எனக்கும், அவருக்கும் சண்டையும் இருந்தது இல்லை” என திரிஷா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தற்போது இதுகுறித்த தகவல் இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: கருப்பு திரைப்பட ட்ரெய்லர் லோடிங்.. ஆர்.ஜே.பாலாஜி கொடுத்த அப்டேட்!

திரிஷா கிருஷ்ணன் இன்ஸ்டாகிராம் போட்டோஷூட் பதிவு:

 

View this post on Instagram

 

A post shared by Trish (@trishakrishnan)

திரிஷா மற்றும் அசின் குறித்த பிரச்னை :

நடிகை திரிஷா மற்றும் அசின் இருவருமே ஒரே காலகட்டத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்கள். இருவருமே பெரிய திரைப்படங்களில் நடித்துவந்தனர். மேலும் உச்ச நடிகர்கள் பலருடன் இணைந்து ஜோடியாக நடித்துள்ளனர். ஆனால் நடிகை அசின் திருமணம் முடிந்து செட்டிலாகிவிட்டார். திரிஷா தற்போதுவரையில் காதநாயகியாக இருக்கிறார். திருப்பாச்சி படத்தில் திரிஷா விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார்.

அதையடுத்து சிவகாசியில் அசினும் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார்.  திரிஷா அளவிற்கு, நடிகை அசினும் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். அதனால் அசினுக்கும், திரிஷாவுக்கும் பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் அசின் பாலிவுட் சென்றதால் இந்த பிரச்னை முடிந்ததாக அப்போதுள்ள பத்திரிகைகளில் கிசுகிசுக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us