Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Asin Thottumkal: 11 படங்களும் ஹிட்டு.. அசின் சினிமாவை விட்டு விலகக் காரணம் இதுதானா?

Asin Cinema Rretirement : தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகைகள் இருக்கின்றனர், ஆனால் 2000ல் திரைப்படங்களைக் கலக்கிய நடிகை அசின். இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் இவருக்குத் தொடர் வெற்றியை கொடுத்திருக்கிறது. இதையடுத்து திடீரென இவர் மொத்தமாக சினிமாவிலிருந்து விலகிவிட்டார், இதற்கான காரணம் என்ன என்பதைப் பற்றிப் பார்க்கலாம்.

Asin Thottumkal: 11 படங்களும் ஹிட்டு.. அசின் சினிமாவை விட்டு விலகக் காரணம் இதுதானா?
நடிகை அசின்
barath-murugan
Barath Murugan | Published: 26 May 2025 22:18 PM

2000ம் ஆண்டு தொடக்கத்தில் தென்னிந்திய நடிகைகளில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் நடிகை அசின் தோட்டும்கல் (Asin Thottumkal). 2000த்திற்கு பின் தமிழ் சினிமாவில் அறிமுகமான நயன்தாரா (Nayanthara) மற்றும் திரிஷா (Trisha) போன்ற நடிகைகளுக்கு போட்டியாக இவர் இருந்தார். இவர் தற்போதுவரை திரைப்படங்களில் நடித்திருந்தார் நிச்சயம் நயன்தாராவைப் போல் பல ஹிட் படங்களைக் கொடுத்திருப்பார் என்பதில் சந்தேகமே இல்லை. நடிகை அசின் மலையாளத்தில் வெளியான “நரேந்திரன் மகன் ஜெயகாந்தன் வகா” (Narendran Makan Jayakanthan Vaka) என்ற திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்து சினிமாவில் நுழைந்தார். இந்த படத்தில் அவர் நடிக்கும்போது அவருக்கு வெறும் 15 வயதுதான் ஆகியிருந்தது. இதைத் தொடர்ந்துதான் சினிமாவில் அடுத்தடுத்த படங்களில் நடக்கத் தொடங்கினார். பின் சில ஆண்டுகள் கழித்து 2003ல் தெலுங்கு திரைப்படமான “அம்மா நன்னா ஓ தமிழ் அம்மாயி” என்ற திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார். இந்த படத்தின் மூலமாகத்தான் சினிமாவில் ஹீரோயினியாக நடிக்கத் தொடங்கினார்.

இந்த படத்தில் நடிகர் ரவி தேஜாவுடன் இணைந்து நடித்திருந்தார். இந்த படம்தான் இவரின் தமிழ் அறிமுகத்திற்கும் காரணமாக அமைந்தது. இந்த படத்தின் தமிழ் ரீமேக்கானான எம் குமரன் சன் ஆப் மகாலெட்சுமி (M Kumaran Son of Mahalakshmi) படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். இதில் நடிகர் ரவி மோகனுக்கு ஜோடியாக நடித்துப் பிரபலமானார்.

மலையாள பெண்ணாக நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார். இதை அடுத்ததாக விஜய் முதல் சூர்யா வரை பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்திருந்தார். தொடர்ந்து அவர் கஜினி, வரலாறு, போக்கிரி மற்றும் வேல் போன்ற திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து தமிழ் மக்களிடையே நீங்காத இடத்தை பிடித்தார்.

அசின் இன்ஸ்டாகிராம் பதிவு :

 

View this post on Instagram

 

A post shared by Asin Thottumkal (@simply.asin)

அசின் சினிமாவில் இருந்து விலகுவதற்குக் காரணம் என்ன ?

நடிகை அசின் நடிப்பில் 2011ல் வெளியான “ரெடி” படப்பிடிப்புக்காகப் படக்குழு இலங்கை சென்றது. அப்போது இலங்கையில் நடந்த போர் தமிழகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. இதன் காரணமாக இந்தியாவிலிருந்து யாரும் இலங்கைக்குச் செல்லக்கூடாது, இலங்கையிலிருந்து யாரும் இந்தியாவுக்கு வரக்கூடாது என்று கூறப்பட்டிருந்தது. இதை பொருட்படுத்தாமல் நடிகை அசின் இலங்கை சென்றிருந்தார்.

இந்த காரணத்தால் அசினை இனி தமிழ் சினிமாவில் நடிக்க அனுமதிக்கக் கூடாது என்று கண்டனம் தெரிவித்தனர். என்று கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து நடிகை அசின் எந்தவித பதிலளிக்கவில்லை. என்பது குறிப்பிடத்தக்கது. அதன் காரணமாக இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்று தெரியவில்லை.  இதனால் தமிழ் சினிமாவில்  தனது சினிமா கேரியரின் உச்சத்தில் இருந்தபோது அதனையெல்லாம் ஓரம் கட்டி விட்டு 2016ல் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் ராகுல் சர்மா என்பவரைக் காதல் திருமணம் செய்து கொண்டார், அதன் பிறகு சினிமாவிலிருந்து விலகினார்.

டார்க் சாக்லேட் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?
டார்க் சாக்லேட் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?...
நியாபக மறதி பிரச்னையா? இந்த ஜப்பானிய பயிற்சிகளை டிரை பண்ணுங்க!
நியாபக மறதி பிரச்னையா? இந்த ஜப்பானிய பயிற்சிகளை டிரை பண்ணுங்க!...
குழந்தைகளிடையே அதிகரிக்கும் டைப் 1 சர்க்கரை நோய்
குழந்தைகளிடையே அதிகரிக்கும் டைப் 1 சர்க்கரை நோய்...
தனுஷின் குபேரா படத்திற்கு வந்த முதல் விமர்சனம் - வைரலாகும் போஸ்ட்
தனுஷின் குபேரா படத்திற்கு வந்த முதல் விமர்சனம் - வைரலாகும் போஸ்ட்...
சோளிங்கர் அருகே வீடு புகுந்து சிறுமி கொலை - பரபரப்பு சம்பவம்
சோளிங்கர் அருகே வீடு புகுந்து சிறுமி கொலை - பரபரப்பு சம்பவம்...
பிக்பாஸ் தர்ஷன் நாயகனாக நடித்த சரண்டர் படத்தின் டீசர் இதோ!
பிக்பாஸ் தர்ஷன் நாயகனாக நடித்த சரண்டர் படத்தின் டீசர் இதோ!...
தாய்ப்பால் கொடுக்கும் போது குல்கந்து சாப்பிடலாமா?
தாய்ப்பால் கொடுக்கும் போது குல்கந்து சாப்பிடலாமா?...
2025 ஆம் ஆண்டு பக்ரீத் பண்டிகை எப்போது? - தேதி அறிவிப்பு!
2025 ஆம் ஆண்டு பக்ரீத் பண்டிகை எப்போது? - தேதி அறிவிப்பு!...
ஜூன் மாதம் ஓடிடியில் வெளியாகும் டூரிஸ்ட் ஃபேமிலி... அப்டேட் இதோ
ஜூன் மாதம் ஓடிடியில் வெளியாகும் டூரிஸ்ட் ஃபேமிலி... அப்டேட் இதோ...
அன்பு மன்னிப்பு கேட்காது - சர்ச்சைக்கு கமல் விளக்கம்
அன்பு மன்னிப்பு கேட்காது - சர்ச்சைக்கு கமல் விளக்கம்...
ரெட்ரோ படத்தின் புதிய ஓடிடி வெளியீட்டு தேதியை அறிவித்த படக்குழு!
ரெட்ரோ படத்தின் புதிய ஓடிடி வெளியீட்டு தேதியை அறிவித்த படக்குழு!...