AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Kamal Haasan: அந்த நடிகர்களின் நடிப்பை சிறுவயதிலிருந்தே பார்த்து வளர்ந்தேன் – கமல்ஹாசன்!

Kamal Haasans Inspiration Actors: தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் கமல்ஹாசன். இவர் கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் பயணித்துவருகிறார். அந்த வகையில் சிறுவயதில் அவர் பார்த்துவளர்ந்த நடிகர்கள் யார் என்பது குறித்து நேர்காணல் ஒன்றில் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். அது பற்றி விவரமாக பார்க்கலாம்.

Kamal Haasan: அந்த நடிகர்களின் நடிப்பை சிறுவயதிலிருந்தே பார்த்து வளர்ந்தேன் – கமல்ஹாசன்!
கமல்ஹாசன்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 08 Jun 2026 08:16 AM IST

நடிகர் கமல்ஹாசன் (Kamal Haasan) தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர். இவரை ரசிகர்கள் உலகநாயகன் என அன்போடு அழைத்துவருகின்றனர். இவரின் நடிப்பில் இதுவரை 230க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. சினிமாவில் கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்துவருகிறார். இவர் திரைப்படங்களில் குழந்தை நட்ச்சத்திரமாக இருந்து பின் துணை நடிகர் மற்றும் கதாநாயகனாக என பெரிய புகழை பெற்றவர். அந்த வகையில் சினிமாவில் பிரபலமானவராக இருந்துவரும் இவர், அரசியலிலும் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கியிருந்தார். சினிமா, அரசியல் என இரு துறையிலும் ஈடுபட்டுவருகிறார். அந்த வகையில் இவரின் நடிப்பில் இறுதியாக வெளியாகியிருந்த திரைப்படம் தக் லைஃப் (Thug Life). கடந்த 2025ம் ஆண்டில் வெளியான இப்படத்தின் கதையை கமல் மற்றும் மணிரத்னம் (Mani Ratnam) இணைந்து எழுதியிருந்தனர்.

2025 ஜூன் 5ம் தேதியில் வெளியாகியிருந்த இப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இதையடுத்து ஸ்டண்ட் மாஸ்டர்ஸ் அன்பரீவ் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். மேலும் கல்கி 2 படத்திலும் கமல்ஹாசன் நடித்துவருகிறார். அந்த வகையில் முன்னதாக நேர்காணல் ஒன்றில் பேசிய இவர், சிறுவயதிலிருந்து அவர் பார்த்த வளர்ந்த நடிகர்கள் குறித்து பேசியுள்ளார்.

இதையும் படிங்க: இந்த போட்டோவில் உள்ள சிறுவன் யார் தெரியுமா? டோலிவுட்டின் உச்ச நாயகன் இவர்.. அட அவர்தான்!

சிறுவயதிலிருந்து பார்த்துள்ளவளர்ந்த நடிகர்களின் நடிப்பு பற்றி கமல்ஹாசன் பேச்சு:

அந்த நேர்காணலில் கமல்ஹாசன் பேசுகையில், “நான் எனது 3வது வயதிலிருந்து சிவாஜி மற்றும் எம்ஜிஆர் அவர்களின் நடிப்பை பார்த்து வளர்ந்தவன். மறுபடியும் அவர்களை நியாபகப்படுத்து, அவர்கள் நடிப்பில் எப்பேர்ப்பட்ட நடிகர்கள் என எனக்கு தெரிந்துகொள்வதற்கு தேவர்மகன் படம் எடுக்கும்போதுவரை நேரமாச்சு.

இதையும் படிங்க : சூர்யா இருக்கார்…. விஜய் முதல்வரானதால் சினிமாவில் வெற்றிடமா? ஆர்ஜே பாலாஜி சொன்ன தகவல்

மேலும் தேவர் மகன் படத்தில் சிவாஜி சார் நடித்திருந்த கதாபாத்திரத்தில் வேறு எந்த நடிகராவது நடிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறதா?, அல்லது அவருக்கு மாற்றாக அந்த வேடத்தில் யார்தான் நடித்துவிடமுடியுமா?. அப்பேற்பட்ட நடிகர்கள் சிவாஜி சார் மற்றும் எம்ஜிஆர் சார்” என்று அதில் அவர் பேசியிருந்தார். தற்போது இது குறித்த தகவல்கள் வைரலாகப் பரவிவருகிறது.

கமல்ஹாசன் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் போட்டோஷூட் பதிவு:

கமல்ஹாசன் சினிமா மற்றும் அரசியல் என இரு துறையையும் ஈடுகட்டிவருகிறார். அந்த வகையில் புதிய படங்களிலும் நடித்துவருகிறார். இவர் கல்கி 2, KHxRK என்ற படம் மற்றும் அன்பரீவ் இயக்கத்தில் புதிய படம் என மொத்தம் 3 படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதில் நெல்சன் திலீப்குமார் இயக்கும் KHxRK படத்திற்கு கமல்ஹாசன் கிட்டத்தட்ட ரூ 200 கோடிகளுக்கு மேல் சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது.

Follow Us