Toxic: இன்னும் ஒரே மாதம்.. புது போஸ்டரை வெளியிட்ட யாஷின் டாக்ஸிக் படக்குழு!
Yash Toxic Movie: கன்னட சினிமாவில் உச்ச நாயகனாக இருந்துவருபவர் யாஷ். இவரின் நடிப்பில் பான் இந்திய திரைப்படமாக உருவாகியுள்ளதுதான் டாக்ஸிக். பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகியுள்ள நிலையில், 2026 ஆகஸ்ட் மாத இறுதியில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், தற்போது புது போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.
ஜன நாயகன் பட தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் கீழ், மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்திய படம்தான் டாக்ஸிக் (Toxic). இந்த படத்தில் கன்னட நடிகர் யாஷ் (Yash) அதிரடி ஆக்ஷன் நாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில் அவர் ரயா மற்றும் டிக்கெட் என இரு வேடங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது 1960-களில் நடக்கும் ஒரு காலகட்ட திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ளது. இதில் யாஷ் ஹீரோவாக நடிக்க, அவருடன் நயன்தாரா (Nayanthara), கியாரா அத்வானி (Kiara Advani), தாரா சுதாரியா, ருக்மிணி வசந்த் (Rukmini Vasanth) மற்றும் ஹுமா குரேஷி உட்பட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தை பிரபல நடிகையும், பெண் இயக்குநருமான கீது மோகன்தாஸ் (Geetu Mohandas) இயக்கியுள்ளார். இவர் மலையாள சினிமாவில் பிரபல நடிகையாக இருந்து, இயக்குநராக நுழைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரின் இயக்கத்தில் டாக்ஸிக் படமானது பான் இந்திய மொழிகளில் உருவாகியுள்ள நிலையில், இதன் மீது எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இப்படமானது வரும் 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 26ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இன்னும் இப்படத்தின் வெளியீட்டிற்கு ஒரு மாதம் மட்டும் இருக்கும் நிலையில், படக்குழு ஸ்பெஷல் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.




இதையும் படிங்க: துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டேவின் ஸ்ரீ ஸ்ரீ பட ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ!
யாஷின் டாக்ஸிக் படக்குழு வெளியிட்ட நியூ போஸ்டர் தொடர்பான எக்ஸ் பதிவு:
Blood on HIS Hands.#Toxic: A Fairy Tale for Grown-Ups In Cinemas Worldwide from 26-08-2026.
A month away from Intoxication! 🔥#ToxicTheMovie#ToxicOn26thAug@TheNameIsYash #Nayanthara @advani_kiara #TaraSutaria @rukminitweets @humasqureshi @GeetuMohandas @TheKVNofficial… pic.twitter.com/WiEAbPWvZK
— TOXIC (@Toxic_themovie) July 26, 2026
டாக்ஸிக் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது:
யாஷின் டாக்ஸிக் படமானது மிகவும் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. கிட்டத்தட்ட ரூ 600 கோடிக்கும் மேல் பொருட்செலவில் உருவாகியிருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தை கேவிஎன் ப்ரொடக்ஷன் மற்றும் யாஷின் மாஸ்டர் மைண்ட் தயாரிப்பு நிறுவனம் என இரண்டும் இணைந்து தயாரித்துள்ளது.
இதையும் படிங்க: தளபதி கச்சேரி.. ஜன நாயகன் பட 2வது நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
இப்படமானது தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி என மொத்தம் 6-கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது. அந்த வகையில் இப்படத்தின் ட்ரெய்லர் வரும் 2026 ஆண்டு ஆகஸ்ட் முதல் வாரத்தில் வெளியாகவுள்ளதாம். இன்னும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் ஏதும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
யாஷின் அடுத்த திரைப்படம்:
யாஷ் டாக்ஸிக் திரைப்படத்தை அடுத்ததாக இந்தியில் ராமாயணா படத்தில் நடித்துவருகிறார். இயக்குநர் நிதேஷ் திவாரியின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகிவரும் இப்படத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி உள்ளிட்ட பல்வேறு திரைப் பிரபலங்களும் இணைந்து பணியாற்றிவருகிறார்கள்.
இதில் யாஷ் ராவணனாக நடித்துள்ளார். இப்படம் இரு பாகங்களாக உருவாகியுள்ள நிலையில், முதல் பாகத்தின் ஷூட்டிங் நிறைவடைந்தது. முதல் பாகத்தில் யாஷின் காட்சிகள் வெறும் 20 நிமிடங்களுக்கு மட்டுமே இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் ராமாயணா பார்ட் 2 படத்தில் ரன்பீர் மற்றும் யாஷ் இருவரின் காட்சிகள் அதிகமாக இருக்கும்.