AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ஆந்திர கடல் பகுதியில் மாயமான 9 சென்னை மீனவர்கள்.. அதிகாலை வந்த கடைசித் தகவல்! ஹெலிகாப்டர்கள் மூலம் தீவிர தேடுதல்!

Chennai Fishermen Missing Case : சென்னை காசிமேடு மீன்பிடி பகுதியில் இருந்து கடலுக்குச் சென்ற 9 மீனவர்கள், ஆந்திர மாநில கடல் பகுதியில் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நவம்பர் 3, 2026 அன்று அதிகாலை விசைப்படகு திடீரெனப் பழுதடைந்ததாகக் கூறப்படும் நிலையில் தேடுதல் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஆந்திர கடல் பகுதியில் மாயமான 9 சென்னை மீனவர்கள்.. அதிகாலை வந்த கடைசித் தகவல்! ஹெலிகாப்டர்கள் மூலம் தீவிர தேடுதல்!
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 05 Nov 2026 10:56 AM IST

சென்னை, நவம்பர் 5 : சென்னை காசிமேடு மீன்பிடி பகுதியில் இருந்து கடலுக்குச் சென்ற 9 மீனவர்கள், ஆந்திர மாநில கடல் பகுதியில் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மீனவர்கள் சென்ற விசைப்படகு நடுக்கடலில் பழுதடைந்த நிலையில், கடந்த நவம்பர் 3, 2026 அன்று அதிகாலை 3.30 மணியளவில் வயர்லெஸ் கருவி மூலம் கடைசியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும், அதற்கு பிறகு மீனவர்களுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து கப்பல்கள் மற்றும் ஹெலிகாப்டர் (Helicopter) மூலம் தேடுதல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

ஆந்திர கடல் பகுதியில் மாயமான 9 சென்னை மீனவர்கள்

கடந்த அக்டோபர் 29,2026 அன்று செல்வழகன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 9 மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவர்கள் ஆந்திர மாநில கடல் பகுதியில் மீன் பிடித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர்கள் சென்ற விசைப்படகுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்ரன.

இதையும் படிக்க : செஞ்சி சிறுமி காணாமல்போன வழக்கில் திருப்பம் – அங்கன்வாடி பணியாளர் அளித்த முக்கிய தகவல் – தீவிர விசாரணை

வானிலை ஆய்வு மையம் புயல் தொடர்பான எச்சரிக்கையை வெளியிட்ட நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருகிலுள்ள துறைமுகத்தில் நிறுத்த முடிவு செய்து ஆந்திர மாநிலத்தில் உள்ள நிஜாம்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் விசைப்படகைப் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். பின்னர் புயல் கரையைக் கடந்ததும் மீனவர்கள் மீண்டும் கடலுக்கு சென்றதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நவம்பர் 3, 2026 அன்று அதிகாலை 3.30 மணியளவில் மீனவர்கள் சென்ற விசைப்படகு திடீரெனப் பழுதடைந்ததாகக் கூறப்படுகிறது. நடுக்கடலில் படகு பழுதானதால், அதில் இருந்த மீனவர்கள் அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மற்றொரு விசைப்படகில் இருந்தவர்களை வயர்லெஸ் கருவி மூலம் தொடர்புகொண்டுள்ளனர். அதன் பிறகு மீனவர்கள் சென்ற விசைப்படகுடனான தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து மீனவர்கள் மாயமான சம்பவம் தொடர்பாக மீன்வளத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, மீனவர்கள் சென்ற விசைப்படகு குறித்த விவரங்கள், கடைசியாகத் தொடர்புகொண்ட நேரம் மற்றும் படகு பழுதானதாகத் தெரிவிக்கப்பட்ட தகவல்கள் ஆகியவற்றைத் தொகுத்து மீன்வளத்துறை சார்பில் கடலோரக் காவல்படைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

கப்பல்கள், ஹெலிகாப்டர்கள் மூலம் தேடுதல்

ஆந்திர மாநில கடல் பகுதியில் மாயமான 9 மீனவர்களையும் கண்டுபிடிக்கும் வகையில் கடலோரக் காவல்படையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, கப்பல்கள், விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் கடல் பகுதியில் தேடுதல் பணிகள் நடைபெற்று வருவதாக மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க : ரேஷன் அரிசி கடத்தல்.. தடுக்க முயன்ற தவெக எம்எல்ஏ மீது கொலை முயற்சி.. தேனியில் அதிர்ச்சி!

மீனவர்கள் கடைசியாக வயர்லெஸ் மூலம் தொடர்புகொண்ட பகுதி மற்றும் விசைப்படகு பழுதானதாகத் தெரிவிக்கப்பட்ட இடம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், விசைப்படகு கடலில் எந்த இடத்தில் இருக்கக்கூடும் என்பதைக் கண்டறியும் முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன.

Follow Us