AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

இனி ஒரு மணி நேரத்தில் பத்திரம்! STAR 3.0 திட்டத்தில் 4 வகையான ஆவணங்களுக்கு புதிய நடைமுறை!

STAR 3.0 Paperless Registration : தமிழ்நாட்டில் சொத்து மற்றும் குடும்பப் பத்திரங்களைப் பதிவு செய்யும் நடைமுறையை எளிமைப்படுத்தும் வகையில், ஸ்டார் 3.0 (STAR 3.0) என்ற புதிய திட்டத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் 4 வகையான ஆவணங்களுக்கு புதிய பதிவு நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இனி ஒரு மணி நேரத்தில் பத்திரம்! STAR 3.0 திட்டத்தில் 4 வகையான ஆவணங்களுக்கு புதிய நடைமுறை!
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 05 Nov 2026 08:33 AM IST

சென்னை, நவம்பர் 5 : தமிழ்நாட்டில் சொத்து மற்றும் குடும்பப் பத்திரங்களைப் பதிவு செய்யும் நடைமுறையை எளிமைப்படுத்தும் வகையில், ஸ்டார் 3.0 (STAR 3.0) என்ற புதிய திட்டத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் செட்டில்மெண்ட் பத்திரம், விடுதலைப் பத்திரம், பாகப்பிரிவினை பத்திரம் மற்றும் செட்டில்மெண்ட் ரத்து பத்திரம் ஆகிய 4 வகையான ஆவணங்களுக்கு புதிய பதிவு நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழக அரசின் ஸ்டார் 3.0 பத்திரப்பதிவு திட்டம்

தமிழ்நாட்டில் வீடு, நிலம் போன்ற சொத்துகளை பதிவு செய்வதற்காக பொதுமக்கள் சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு செல்ல வேண்டியிருக்கும். குறிப்பாக, குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே சொத்துகளை பிரிப்பது, சொத்துகள் மீதான உரிமையை மாற்றுவது உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு அலைய வேண்டியிருந்தது.

இதையும் படிக்க : Tamil Nadu Weather Alert: தீபாவளி கொண்டாட்டம் பாதிக்குமா? அடுத்த 4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை – எங்கெல்லாம் தெரியுமா?

இந்த நிலையில், பத்திரப்பதிவு நடைமுறையை எளிமையாக்கும் வகையில் தமிழக அரசு ஸ்டார் 3.0 என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் பத்திரப்பதிவு தொடர்பான ஆவணங்கள் பெறுவது, மின்னணு கையொப்பம் இடுவது வரை பல்வேறு பணிகளை ஆன்லைன் வழியாக மேற்கொள்ள முடியும். இதுதொடர்பாக பதிவுத்துறை தலைவர் அருண் சுந்தர் தயாளன் சுற்றறிக்கை வெளியிட்டு, புதிய நடைமுறையை அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் முறையாகச் செயல்படுத்த அறிவுறுத்தியுள்ளார்.

இந்த புதிய திட்டத்தின் மூலம் குடும்ப சொத்துகள் தொடர்பான 4 வகையான ஆவணங்களுக்கு காகிதமில்லா பதிவு நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, செட்டில்மெண்ட் பத்திரம், விடுதலைப் பத்திரம், பாகப்பிரிவினை பத்திரம் மற்றும் செட்டில்மெண்ட் ரத்து பத்திரம் ஆகியவற்றுக்கு இந்த நடைமுறை பொருந்தும். இந்த பணிகள் அனைத்தும் கடந்த நவம்பர் 2, 2026 முதல் புதிய காகிதமில்லா பதிவு நடைமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் மூலம் பத்திரங்களை பெறும் வசதி!

மேலும் இனி பத்திரங்களை ஆன்லைனிலேயே தயாரிக்கும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முன்னதாகப் பொதுமக்கள் பத்திர எழுத்தர்களின் உதவியுடன் ஆவணங்களைத் தயாரித்து, அவற்றை அச்சிட்டு பதிவு செய்வதற்கான நடைமுறைகளை மேற்கொண்டு வந்தனர். ஆனால், புதிய முறையில் பத்திரத்தின் விவரங்களை இணையதளத்தில் நேரடியாக உள்ளிட்டு ஆவணத்தை உருவாக்க முடியும். குறிப்பாக, ஆவணத்தில் இடம் பெற வேண்டிய கண்டென்ட்களை எம்எஸ்வேர்டு போன்ற மென்பொருளில் தயாரித்து, அதனை நகலெடுத்து இணையதளத்தில் பதிவிடும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : “விஜய் அங்கிள்” முதல்வரை கடுமையாக விமர்சித்த மு.க.ஸ்டாலின்.. தவெக ஆட்சிக்கு ரெட் அலர்ட் விடுத்து ஆவேச பேச்சு!

மேலும் இந்த திட்டத்தில் ஆதார் அடிப்படையிலான மின்னணு கையொப்ப வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சொத்தை எழுதிக் கொடுப்பவர், சொத்தை வாங்குபவர் மற்றும் சாட்சிகள் ஆகியோரின் அடையாள விவரங்கள் பதிவு செய்யப்பட வேண்டும். இதையடுத்து, சம்பந்தப்பட்ட நபர்களின் ஆதாருடன் இணைக்கப்பட்ட செல்போன் எண்ணுக்கு ஓடிபி அனுப்பப்படும். அந்த ஓடிபி மூலம் அடையாளத்தை உறுதிப்படுத்தி மின்னணு கையொப்பம் இட முடியும். மேலும், தேவையான இடங்களில் பயோமெட்ரிக் விரல் ரேகை அல்லது கருவிழி சரிபார்ப்பு முறையையும் பயன்படுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us