AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

செஞ்சி சிறுமி காணாமல்போன வழக்கில் திருப்பம் – அங்கன்வாடி பணியாளர் அளித்த முக்கிய தகவல் – தீவிர விசாரணை

Gingee Missing Girl Case : விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த 7 வயது சிறுமி மாயமாகி கிட்டத்தட்ட 24 நாட்கள் கடந்த நிலையில், சிறுமியை தேடும் பணியில் சிபிசிஐடி போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இந்த வழக்கில் புதிய திருப்பமாக அங்கன்வாடி பணியாளர் அளித்த தகவலின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

செஞ்சி சிறுமி காணாமல்போன வழக்கில் திருப்பம் – அங்கன்வாடி பணியாளர் அளித்த முக்கிய தகவல் – தீவிர விசாரணை
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 05 Nov 2026 07:57 AM IST

விழுப்புரம், நவம்பர் 5 : விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த 7 வயது சிறுமி மாயமாகி கிட்டத்தட்ட 24 நாட்கள் கடந்த நிலையில், சிறுமியை தேடும் பணியில் சிபிசிஐடி போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை சிறுமி குறித்து உறுதியான தகவல் கிடைக்காத நிலையில், தற்போது நாமக்கல் (Namakkal) மற்றும் கடலூர் மாவட்டம் புவனகிரி பகுதிகளில் சிறுமியைப் பார்த்ததாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

அங்கன்வாடி பணியாளர் அளித்த முக்கிய தகவல்

இதையடுத்து, அந்த பகுதிகளில் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, நாமக்கல்லில் சிறுமியைப் பார்த்ததாகத் தகவல் தெரிவித்த பெண் ஒருவர், போலீசார் தன்னிடம் தேவையற்ற கேள்விகளைக் கேட்டு மன உளைச்சலை ஏற்படுத்துவதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதையும் படிக்க : Chennai Rains: தீபாவளி தினத்த்தன்று சென்னையில் மழை பெய்யுமா? எங்கெல்லாம் மழை இருக்கும்? வானிலை நிலவரம் சொல்வதென்ன?

நாமக்கல் அங்கன்வாடி பணியாளர் பவானி என்பவர், கடந்த அக்டோபர் 29, 2026 அன்று சேந்தமங்கலம் அருகே உள்ள தத்தகிரி முருகன் கோவிலில், ஒரு தம்பதியுடன் சிறுமி ஹேமலதாவை பார்த்ததாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர் செய்தியாளர்களை சந்தித்த நிலையில், செஞ்சியில் காணாமல் போன சிறுமி போன்ற ஒருவரை முருகன் கோவிலில் பார்த்தேன். 90 சதவீதம் அந்த சிறுமி போலவே இருந்த காரணத்தால் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தேன்.
இந்த நிலையில் தற்போது, நான் பணிபுரியும் இடத்தில் விசாரிக்கின்றனர்.என்னிடம் விபரங்களை வாங்கிக்கொண்டு, தொடர்ந்து மனஉளைச்சல் ஏற்படுத்துகின்றனர். எதற்காக சிறுமி குறித்த தகவலை கூறினோம் என கஷ்டமாக உள்ளது என்று பேசினார்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகேயுள்ள ஆலம்பூண்டியை அடுத்த நடுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் 7 வயது சிறுமி ஹேமலதா. இவர் கடந்த 2026 அக்டோபர் 12 அன்று அதிகாலை தனது பெற்றோருடன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த நிலையில் காணாமல் போனதாக கூறப்படுகிறது. காலையில் எழுந்த பெற்றோர், வீட்டில் சிறுமி இல்லாததால் அதிர்ச்சியடைந்தனர். சிறுமி குறித்த எந்தத் தகவலும் கிடைக்காததால், அவரது பெற்றோர் சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த நிலையில் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கிட்டத்தட்ட சிறுமி காணாமல் போய் 24 நாட்களாகியும் எந்த தகவலும் இல்லை னஎ கூறப்படுகிறது.

இதையும் படிக்க : திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை.. கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கி மிரட்டல்.. தென்காசியில் மாணவர் உள்பட இருவர் கைது!

நாமக்கல் பகுதியில் தேடுதல்வேட்டை தீவிரம்

இந்த நிலையில் தான், காணாமல் போன சிறுமி ஹேமலதாவை நாமக்கல் மாவட்டத்தில் பார்த்ததாக அங்கன்வாடி பணியாளர் தெரிவித்திருப்பது இந்த வழக்கில் புதிய திருப்பமாக பார்க்கப்படுகிறது. தனது மகளின் செல்போனில் ஹேமலதாவின் புகைப்படத்தைப் பார்த்தபோது, கோயில் பகுதியில் தான் பார்த்த சிறுமியைப் போன்று இருந்ததால் சந்தேகம் ஏற்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.சிறுமியுடன் சுமார் 35 வயது மதிக்கத்தக்க இருவர் மற்றும் 55 வயது மதிக்கத்தக்க ஒருவர் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து நாமக்கல் பகுதியில் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.

Follow Us